கலக்குறாரே தயாநிதி மாறன்.. "அவர்" பேரை சொன்னதுமே.. பாஜகவுக்கு செம டென்ஷன்.. "ஆ"ன்னு பார்த்த டெல்லி
சென்னை: மணிப்பூர் விவகாரம் தொடர்பாக, பிரதமர் மோடி விளக்கம் தர வேண்டும் என்று திமுகவின் எம்பி தயாநிதி மாறன் வலியுறுத்தி உள்ளார்.
மணிப்பூரில் கிறிஸ்தவ பழங்குடியின மக்களுக்கு எதிராக 3 மாதங்களாக கலவரம் நீடித்து வருகிறது.. சட்டமன்ற தேர்தலை எதிர்நோக்கியுள்ள அரியானா மாநிலத்தின் நூஹ் மாவட்டத்தில் கலவரத்தால் அளவுக்கு அதிகமான பொருட்சேதங்களும் ஏற்பட்டுள்ளன.

பாலியல் துன்புறுத்தல்: இதனிடையே, கடந்த ஜூலை 19ம் தேதி, குகி ஸோ இனத்தைச் சேர்ந்த 2 பெண்கள் ஆடையின்றி இழுத்துச் செல்லப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்படும் வீடியோ வெளியாகி, ஒட்டுமொத்த தேசத்தையும் உறையவைத்தது.
பாஜக ஆட்சியில் நாட்டின் ஜனநாயகம் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ஒடுக்கப்பட்ட சிறுபான்மை, பட்டியலின மற்றும் பழங்குடியின மக்கள் மிகவும் நெருக்கடிக்கு ஆளாக்கப்பட்டு கொண்டிருப்பதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன..
மணிப்பூர், அரியானா கலவரங்கள் மற்றும் சிறுபான்மை மக்களுக்கு எதிரான வெறுப்பு நடவடிக்கைகளை தடுக்கத் தவறிய பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கைகளும் வலுத்து வருகின்றன.
பிரதமர் மோடி: மற்றொருபுறம், இந்த வன்முறை சம்பவம் தொடர்பாக, பிரதமர் மோடி பதிலளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நாடாளுமன்றக் கூட்டத்தொடரின் முதல் நாளிலிருந்தே வலியுறுத்தி கொண்டிருக்கிறார்கள்.. ஆனால், இதுவரை பிரதமர் மோடி இதுகுறித்து பெரிதாக பேசவில்லை. எனவே, நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடர்ந்து முடங்கி வருகிறது.
முன்னதாக, ஜூலை 26 ஆம் தேதி மத்தியில் ஆளும் மோடி தலைமையிலான பாஜக அரசுக்கு எதிராக மக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மானம் நோட்டீஸ் வழங்கப்பட்டது. ஆகஸ்ட் 8-ஆம் தேதி முதல் எதிர்க்கட்சிகளின் நம்பிக்கையில்லா தீர்மானம் மீது விவாதம் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளதால், தீர்மானம் மீது அநேகமாக ஆகஸ்ட் 10-ம் தேதி பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் விளக்கம் அளிப்பார் என்கிறார்கள்.
காரணம், மறுநாள் 11-ம் தேதியுடன் கூட்டம் நிறைவுபெறுவதால் முன்கூட்டியே பிரதமர் விளக்கம் தருவார் என்று கூறப்படுகிறது. அல்லது நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதம் காரணமாக அவை அலுவல் நாட்கள் நீட்டிக்கப்படுமா? என்ற சந்தேகமும் வட்டமடிக்கிறது.
தயாநிதி மாறன்: இப்படி நாலாபுறமும் மணிப்பூர் விவகாரம் வெடித்து கிளம்பி வரும்நிலையில், இன்று மக்களவையில் அனலடிக்கும் வாதம் கிளம்பியது.. டெல்லி அரசின் அதிகாரத்தை குறைக்கும் வகையில், அதிகாரிகள் நியமனங்களில் மத்திய அரசுக்கே அதிகாரம் உள்ளது தொடர்பான மசோதாவை உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று தாக்கல் செய்திருந்தார். எனவே, இந்த மசோதா மீதான விவாதம் மக்களவையில் இன்று நடந்தது.
அப்போது திமுக எம்பி தயாநிதி மாறன் பேசியபோது, "அதானி விவகாரம் குறித்து பேசும்போதும், பிரதமர் மோடி நாடாளுமன்றத்துக்கு வரவில்லை. இப்போது மணிப்பூர் விவகாரம் குறித்து பேசும்போதும் அவைக்கு வர மறுக்கிறார்.. கடந்த 25 வருடங்களாக, டெல்லியை பாஜக ஆளவேயில்லை.. ஆம் ஆத்மி, பஞ்சாப் மாநிலத்தை பிடித்துவிட்டது. அதை உங்களால் ஜீரணிக்க முடியவில்லை. அதனால், கூட்டணியான சிபிஐ, அமலாக்கத்துறை, வருமான வரித்துறையை பயன்படுத்தி எதிர்க்கட்சிகளை மிரட்டுகிறீர்கள்.
டெல்லி அரசு: மகாராஷ்டிராவில் அமலாக்கத்துறை விசாரணைக்குள்ளான என்சிபி கட்சியினர், பாஜகவுக்கு வந்ததுமே நல்லவர்களாகிவிட்டார்கள் போலும்.. அமலாக்கத்துறை அதிகாரியின் பதவிக்காலம் நீட்டிப்பதற்கு, சுப்ரீம்கோர்ட் எதிர்ப்பு தெரிவித்ததுமே, பாஜக உடனே அப்பீல் செய்தது.. அப்படியானால் உங்களுடைய நோக்கம் என்ன? டெல்லி அரசை கட்டுப்படுத்த வேண்டும் தானே? அதிகாரம் குறைக்கப்பட வேண்டும் என்பதுதானே?
அங்குள்ள அதிகாரிகளை பாஜக சுதந்திரமாக செயல்பட அனுமதிக்கவில்லை.. டெல்லி அரசின் அதிகாரிகள் நியமன மசோதா சுப்ரீம்கோர்ட் தீர்ப்புக்கு எதிரானது.. அதனால், டெல்லி மசோதாவுக்கு திமுக தன்னுடைய எதிர்ப்பை வலிய பதிவு செய்கிறது.
ஆளுநர் தேவையில்லை: எதிர்க்கட்சி கூட்டணி மிகவும் வலுவாகவே இருக்கிறது. 2024-ம் ஆண்டு பாருங்கள், நீங்கள் எதிர்க்கட்சி வரிசையில் உட்கார்ந்திருப்பீர்கள்.. ஆனால், நாங்களோ ஆளும் கட்சி வரிசையில் அமர்ந்திருப்போம்.. தமிழ்நாடு ஆளுநர் 13 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் நிலுவையில் வைத்துள்ளார்.. எனவே, மாநில அரசுகளுக்கு ஆளுநர் தேவையில்லை.
மணிப்பூர் விவகாரம் தொடர்பாக பிரதமர் அவைக்கு வந்து பேச வேண்டும்... என்று என்று திமுக எம்பி தயாநிதி மாறன் வலியுறுத்தி உள்ளார். அதேபோல, டெல்லி அரசின் அதிகாரிகள் நியமன அதிகாரத்தை ஆளுநருக்கு வழங்க மசோதா மீது மக்களவையில் விவாதம் நடத்தப்பட்ட நிலையில், என்று தயாநிதிமாறன் கூறினார்.
மனிதாபிமானம்: 4 நாட்களுக்கு முன்பு, தயாநிதி மாறன் செய்தியாளர்களிடம் பேசும்போதும், பாஜகவை சரமாரியாக விமர்சித்திருந்தார். அந்த வீடியோ இன்னமும் சோஷியல் மீடியாவில் ஓடிக் கொண்டிருக்கிறது.
குறிப்பாக, "மனிதாபிமானமற்ற கட்சி எது என்றால் அது பாஜகதான்.. மனிதாபிமானமற்றவர்கள் யார் என்றால், திரு.அமித்ஷா, திரு.மோடி அவர்களும்தான்.. சம்பவம் நடந்து 3 மாதமாகியும் இதுவரை மணிப்பூர் விவகாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கவில்லை. தக்காளி விலைகூட இவர்களால்தான் உயர்ந்திருக்கிறது.. இந்த 9 வருடங்களில் மோடி தலைமையிலான பாஜக அரசு, என்ன கிழித்திருக்கிறது?" என்று கேள்வி எழுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications