இன்னும் 5 நாள்தான் இருக்கு.. செங்கோட்டையன் விதித்த காலக்கெடு முடியுது.. எடப்பாடிக்கு பெரிய நெருக்கடி

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுக மாஜி அமைச்சர் செங்கோட்டையன் எடப்பாடி பழனிச்சாமிக்கு கொடுத்த காலக்கெடு இன்னும் 5 நாட்களில் முடிய உள்ளதால் அரசியல் உலகில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

கடந்த வாரம் கோபிச்செட்டிபாளையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக மாஜி அமைச்சர் செங்கோட்டையன் எடப்பாடி பழனிச்சாமியை கடுமையாக விமர்சனம் செய்தார். கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களை, உடனே சேர்க்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமிக்கு செங்கோட்டையன் காலக்கெடு விதித்தார்.

Edappadi Palaniswami

அதோடு, கட்சிக்கு எதிராக செயல்படுபவர்களை தான் நீக்குவதாக எடப்பாடி பழனிச்சாமி சொல்கிறாரே என கேட்டபோது 2009 ஆம் ஆண்டு ஜெயலலிதா அவர்களால் அதிமுகவிலிருந்து எடப்பாடி பழனிச்சாமி நீக்கப்பட்டு இருக்கிறார் என நேரடியாக விமர்சனம் முன் வைத்தார் செங்கோட்டையன். கிட்டத்தட்ட கோபமாக அவர் இந்த பதிலை அளித்தார்.

செங்கோட்டையன் கொடுத்த காலக்கெடு

கோபிச்செட்டிபாளையத்தில் செய்தியாளர்களை சந்தித்த செங்கோட்டையன், பத்து நாட்களில் கழகத்திலிருந்து பிரிந்து சென்றவர்கள் மீண்டும் சேர்க்கப்படவில்லை என்றால் அவர்களுடன் சேர்ந்து கட்சியை ஒருங்கிணைக்கும் வேலைகளில் ஈடுபடுவேன் என செங்கோட்டையன் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். தனது கோரிக்கைகளை பரிசீலித்தால் மட்டும்தான் இனி எடப்பாடி பழனிச்சாமி உடன் பரப்புரைகளின் பங்கேற்பேன் என கட்சியின் மூத்த தலைவர் செங்கோட்டையன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். அனைவரையும் ஒன்று சேர்த்தால் மட்டும்தான் தேர்தலில் நாம் வெற்றி பெற முடியும். அதை கழகத்தின் பொதுச்செயலாளர் உணர்ந்து கொள்ள வேண்டும்.

2016க்கு பின் தொடர்ந்து தேர்தலை நாம் சந்திக்கிறோம். 2016க்கு பின் வரிசையாக பல தேர்தலில் நாம் தோல்வி அடைந்துவிட்டோம். பாஜக உடன் கூட்டணி வைத்து இருந்தால் 2024ல் 30 இடங்களில் வென்று இருப்போம். வேலுமணி கூட அதை குறிப்பிட்டு பேசினார். கழகம் தொய்வோடு இருக்கிறது என்று எடப்பாடியிடம் கூறினோம். கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் கட்சியில் சேர்க்க வேண்டும் மறப்போம் மன்னிப்போம் என எடப்பாடி பழனிச்சாமி இடம் சொன்னேன். ஆனால் அதை அவர் ஏற்கவில்லை.

எடப்பாடி பழனிச்சாமி vs செங்கோட்டையன்

கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் கட்சியில் சேர்க்க வேண்டும். மறப்போம் மன்னிப்போம் என எடப்பாடி பழனிச்சாமி இடம் சொன்னேன். ஆனால் அதை அவர் ஏற்கவில்லை. தேர்தல் நெருங்குகிறது அதனால் விரைவில் கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் கட்சியில் சேர்க்க வேண்டும்.

பிரிந்தவர்களை சேர்க்கவில்லை என்றால் அதற்கு ஏற்ற நடவடிக்கைகளை நாங்கள் செய்வோம். எடப்பாடியிடம் 6 அமைச்சர்கள் சென்று , பிரிந்து போனவர்களை மீண்டும் கட்சியில் சேர்க்க வேண்டும். எடப்பாடி பழனிச்சாமி இடம் வலியுறுத்தினோம் அதை எதையும் கேட்க அவர் தயாராக இல்லை. வெளியே சென்றவர்களை தேர்தலுக்கு முன் கட்சியில் சேர்க்க வேண்டும், 10 நாட்கள்தான் காலக்கெடு - அதற்குள் பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும் , என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கூறி உள்ளார்.

எடப்பாடிக்கு கொடுத்த டைம் ஓவர்

அதிமுக மாஜி அமைச்சர் செங்கோட்டையன் எடப்பாடி பழனிச்சாமிக்கு கொடுத்த காலக்கெடு இன்னும் 5 நாட்களில் முடிய உள்ளதால் அரசியல் உலகில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால் எடப்பாடி பழனிசாமி என்ன மாதிரியான முடிவுகளை எடுக்க போகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஏற்கனவே எடப்பாடி பழனிசாமி செங்கோட்டையன் மீது கட்சி ரீதியாக பதவிகளை பறித்து நடவடிக்கை எடுக்க உள்ளார். அதோடு செங்கோட்டையன் டெல்லி சென்று அமித் ஷாவையும் சந்தித்து பேசிவிட்டு வந்துள்ளார். இதனால் எடப்பாடி பழனிசாமி என்ன மாதிரியான பதில் நடவடிக்கையை எடுப்பார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+