Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னைவாசிகளே உடனே இதை பண்ணுங்க.. மாநகராட்சியில் வண்டியோட ரெய்டு வர்றாங்க.. தொல்லை தீரப்போகுது!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னைவாசிகளே தெருக்களில மாடுகளை சிலர் மேய விட்டுவிடுவதால் போக்குவரத்து நெரிசல் உள்பட பல்வேறு தொல்லைகளை அனுபவிக்கிறார்களா, உடனே மாநகராட்சி அதிகாரிகளுக்கு அழைத்தால் அவர்கள் வந்து மாடுகளை பிடித்து செல்வார்கள். மாடுகளை பிடிக்கும் ரெய்டினை தற்போது விரைவாக மேற்கொண்டு வருகிறார்கள்.

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் சாலையில் சுற்றித் திரியும் மாடுகள் பிடிக்கப்பட்டு, அதன் உரிமையாளர்களுக்கு மாநகராட்சி சார்பில் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

 Dear Chennaiites, Cattle raids are being organised by GCC officials across Chennai

இதுதொடர்பாக, மாநகராட்சி பொது சுகாதாரத் துறையினர் அவ்வப்போது ஆய்வு நடத்தி, சென்னை சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளை, கால்நடை பிடிக்கும் வாகனங்கள் மூலம் பிடித்து, புதுப்பேட்டை மற்றும் பெரம்பூரில் உள்ள மாநகராட்சி மாட்டு தொழுவங்களுக்கு கொண்டு செல்கின்றனர்.

பிடிக்கப்படும் மாடுகளின் உரிமையாளர்களுக்கு ரூ.1,550 அபராதம் விதிக்கப்பட்டு வந்தது. ஒரு கட்டத்தில் அதிக அளவு மாடுகள் சுற்றித்திரிந்த காரணத்தால் மாடுகளின் உரிமையாளர்களை அழைத்து மண்டல அளவில் கூட்டம் நடத்திய அதிகாரிகள் மாடுகள் சாலையில் திரிவதை தடுக்க கடும் நடவடிக்கை எடுத்தார்கள். அத்துடன் அபராத தொகையை நாள் ஒன்றுக்கு 3 ஆயிரம் ரூபாயாக உயர்த்தியும் மாநகராட்சி அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

ஆனால் சென்னையில் மீண்டும் மாடுகள் அதிக அளவில் சுற்றி திரிகின்றன. இதுபற்றி பொதுமக்கள் அதிக அளவு புகார் தெரிவித்து வருகிறார்கள். இதையடுத்து மாடுகளை பிடித்து புதுப்பேட்டை மற்றும் பெரம்பூரில் உள்ள மாட்டு தொழுவங்களுக்கு மாடுகள் கொண்டு செல்லப்படுவது அதிகரித்துள்ளது. அதிகாரிகள் தீவிரமாக இறங்கி உள்ளனர்

சென்னை திருவல்லிக்கேணி டாக்டர் நடேசன் சாலையில் சுற்றித்திரிந்த மாடுகளை மாநகராட்சி அதிகாரிகள் பிடித்து சென்றனர். இதனை ட்விட்டரில் மாநகராட்சியின் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தனர். இதை பார்த்த பொதுமக்கள் தங்கள் பகுதியிலும் மாடுகள் சுற்றித்திரிவதை புகைப்படம் எடுத்து அனுப்பி நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி வருகிறார்கள்.

திருவான்மியூர் வால்மிகி நகரில் தினமும் காலையில் மாடுகள் சுற்றித்திரிவதால் பள்ளிக்கு குழந்தைகளை அழைத்து செல்வது சிரமமாக உள்ளதாக நெட்டிசன் ஒருவர் தெரிவித்தார். இதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. இதேபோல் மதானந்தபுரம், முதலிவாக்கம், ராமகிருஷ்ணா நகர் பகுதியில் மாடுகள் சுற்றித்திரிவதாக இன்னொரு நெட்டிசன் கூறினார். இதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி பதில் அளித்துள்ளது.

சென்னையில் பள்ளிக்கரணை, மடிப்பாக்கம், மயிலாப்பூர் உள்பட பலவேறு பகுதிகளில் மாடுகள் சுற்றித்திரிவது அதிகமாக உள்ளது. இந்த பகுதியில் சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து செல்ல வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+