Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அசல் பத்திரம் இனி தேவையில்லை.. ஆவணங்கள் தொலைந்தாலும் பத்திரப்பதிவு.. பதிவுத்துறைக்கு பெயிரா பாராட்டு

Subscribe to Oneindia Tamil

சென்னை: இனிமேல் அசல் ஆவணங்கள் இல்லையென்றாலும், பதிவுத்துறையில் பாதுகாத்து வைக்கப்பட்டிருக்கும் ஆவணங்களின் அடிப்படையில், தங்களது மனை சம்பந்தமான ஆவணங்களை பொதுமக்கள் பதிவு செய்யலாம் என்ற தீர்வு ஏற்பட்டுள்ளது.. எனவே, பொதுமக்கள் இதனை பயன்படுத்திக் கொண்டு, ஆவணங்களை தவறவிட்டிருந்தாலோ அல்லது களவாடப்பட்டிருந்தாலோ, கவலைப்படாமல் மனை, நிலங்கள் சம்பந்தமான பரிவர்த்தனைகளை தாராளமாக மேற்கொள்ளலாம் என்று பெயிரா கேட்டுக் கொண்டுள்ளது.

2 மாதங்களுக்கு முன்பு, அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பான பெயிரா, பதிவுத்துறைக்கு ஒரு முக்கிய கோரிக்கையை விடுத்திருந்தது.. பத்திரப்பதிவு பணியை மேற்கொள்ளும்போது அதற்குண்டான அசல் ஆவணங்களை சமர்ப்பிக்கும் நடைமுறையை மாற்றியமைத்து, பதிவுத்துறை சட்டப்பிரிவு 55A இல் திருத்தம் செய்திட வேண்டும் என்று தமிழக பதிவுத்துறைக்கு பெயிரா வேண்டுகோள் விடுத்திருந்தது.

mother deed Parent documents Deed registration

சமரசம்: அந்த அறிக்கையில் அசல் ஆவணங்களை தாக்கல் செய்வதில், பொதுமக்களுக்கு ஏற்படக்கூடிய நடைமுறை சிக்கல்களை விரிவாக விளக்கியிருந்தார்.. குறிப்பாக, "களவாடிய ஆவணத்தை சம்பந்தப்பட்ட உரிமையாளருக்கு திருப்பித் தருவதற்கு, குண்டர்களின் உதவியோடு சமரசம் செய்து அவரிடம் பணம் பறிக்கும் செயலும் நடக்கிறது.. நகைகளை திருடுவதைவிட அசையா சொத்துக்களில் அசல் ஆவணத்தை திருடும் குற்ற செயல் கூடுவதற்கான வாய்ப்புகளும் அதிகம் உள்ளன.

அசல் ஆவணம் தொலைந்து விட்டாலோ, களவாடப்பட்டாலோ சான்றிதழை பெறுவதற்கு, பொதுமக்கள் பலமுறை காவல் நிலையத்திற்கு அலைந்து திரிய வேண்டிய நிர்பந்தம் ஏற்படுவதோடு, மிகுந்த அலைச்சலுக்கும், மன உளைச்சலுக்கும் ஆளாவதோடு, காலம் நேரம் வீண் விரையமும், மனச்சங்கடமும் ஏற்படுகிறது. காவல்துறையில் வருடக்கணக்கில் காலதாமதம் செய்கிறார்கள். இதனால் பொதுமக்களுக்கு பதிவுத்துறையின் மேல் இருக்கும் நன்மதிப்பும், மரியாதையும் குறைந்து வருகின்றது.

அசல் ஆவணங்கள்: அத்துடன், மருத்துவ செலவு உள்ளிட்ட அவசிய அத்தியாவசிய தேவைகளுக்காக, கூட தங்களின் அசையா சொத்துக்களை விற்க நினைக்கும் பொதுமக்கள், உடனடியாக விற்க முடியாத நிலைக்கு தள்ளப்படுகின்றனர். எனவே, பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு, அசல் ஆவணங்கள் இல்லையென்றாலும், பதிவுத்துறை சார்பில் பாதுகாத்து வைத்திருக்கின்ற பொது ஆவணத்தின் (PUBLIC DOCUMENT) அடிப்படையில் உரிமையாளரின் ஆவணங்கள் மற்றும் அடையாள அட்டையை உறுதி செய்ய வேண்டும் என்று அந்த அறிக்கையில் பெயிரா கேட்டுக் கொண்டிருந்தது.

இந்நிலையில், அசல் தாய்பத்திரத்தை கேட்காமல், பத்திரப்பதிவு செய்யலாம் என்று உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை அமல்படுத்த, பதிவுத்துறை தற்போது உத்தரவிட்டுள்ளது..

பதிவுத்துறை: இந்நிலையில், அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் நிறுவனர் மற்றும் தேசியத் தலைவர் டாக்டர் ஆ.ஹென்றி
பதிவுத்துறையின் அறிவிப்பை வரவேற்றுள்ளார். அத்துடன் இதுகுறித்து வீடியோ ஒன்றில் அவர் பேசியிருப்பதாவது:

"பதிவுத்துறையில் புதிய திட்டத்தை அறிவித்திருக்கிறார்கள்.. பதிவுத்துறையில், நிலம் சம்பந்தமாக, மனை சம்பந்தமாக ஆவணங்களை, பதிவு செய்வது வழக்கம். சொத்து விற்பனை தொடர்பான பத்திரங்களை பதிவு செய்யும்போது, அதில் தொடர்புள்ள தாய்பத்திரத்தின், அசல் பிரதியை சரி பார்க்க வேண்டும் என்று பதிவு சட்டத்தில் தமிழக அரசு திருத்தம் செய்தது. இது 2022ல் அமலுக்கு வந்தது.

அதாவது, பதிவு செய்த அசல் ஆவணங்களை தவறுதலாக தவறவிட்டாலோ, அல்லது களவாடப்பட்டு விட்டாலோ, அந்த நிலத்தை இன்னொருவருக்கு பதிவு செய்ய முடியாத நிலை, கடந்த 2022-ல் பதிவுத்துறை 55A சட்டப்பிரிவின்கீழ் நடைமுறைப்படுத்தியது.. இதனால், பலரும் தங்களது நிலத்தை பதிவு செய்ய முடியாத நிலைமைக்கு தள்ளப்பட்டார்கள்.

அசல் ஆவணங்கள்: அதாவது சம்பந்தப்பட்ட சொத்துக்கு அசல் ஆவணங்கள் இல்லாமல், அசல் ஆவணங்களின் முன்பகுதியின் நகலை இணைத்து, பரிமாற்றம் செய்யக்கூடிய ஆவணத்துடன் இணைத்திட வேண்டும் என்ற உத்தரவினால், அசல் ஆவணங்கள் இல்லாமல், அந்த சொத்தை பதிவு செய்ய முடியாத நிலைமை ஏற்பட்டது. இதன்மூலம் பினாமி சொத்துக்கள் நடைபெற்றது. அசல் ஆவணத்தை வைத்துக்கொண்டு, பணம் கொடுக்கக்கூடிய சம்பவங்களும் பல நடைபெற்றன.

அதுமட்டுமல்ல, அசல் ஆவணங்கள் காணாமல் போய்விட்டால், உரிமையாளர்கள் உடனடியாக காவல்துறைக்கு புகார் தந்து, அதற்குபிறகு, NOT TRACABLE சான்றிதழை வாங்கி வந்து பதிவு செய்வதில், மிகப்பெரிய சிரமமாகவும் இருந்தது.

பதிவுத்துறை: இதன் அடிப்படையில் பலமுறை பெயிரா கோரிக்கை வைத்தும், பதிவுத்துறை செவிசாய்க்கவில்லை. இறுதியாக உயர்நீதிமன்றத்தில், தனிநபர் ஒருவர் பொதுநலமனு தாக்கல் செய்துள்ளார். தன்னுடைய சொத்து, அசல் ஆவணங்கள் இல்லாமல் பதிவு செய்ய வேண்டும் என்று கேட்டு உத்தரவை அவர் பெற்றிருந்தார். இந்த உத்தரவை எதிர்த்து பதிவுத்துறை சார்பில், உச்சநீதிமன்றத்தக்கு மேல்முறையீடு செய்யப்பட்டது.

இதையடுத்து உச்சநீதிமன்றம், "பதிவுத்துறையில் இருக்கிற பொது ஆவணத்தின் அடிப்படையில், ஆவணங்களை பதிவு செய்து தரவேண்டுமே தவிர, பொதுமக்களிடம் தற்போதைய அசல் ஆவணங்களை தரவேண்டும் என்று நிர்ப்பந்திக்கக் கூடாது, இதனால் பல சிரமங்கள் ஏற்படுகின்றன" என்பதை சுட்டிக்காட்டியதுடன், பதிவுத்துறை தாக்கல் செய்த அப்பீல் மனுவை தள்ளுபடி செய்தது.

அறிவுறுத்தல்: இதன் அடிப்படையில் பதிவுத்துறையின் கூடுதல் துணைத்தலைவர், உடனடியாக இந்த இரு நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில் செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்தி, 44420 என்ற எண்ணிட்ட கடிதத்தை அனைத்து பதிவுத்துறையின் துணை தலைவர்கள், மாவட்ட பதிவாளர்கள் சார் பதிவாளர்களுக்கும் அனுப்பியிருக்கிறார்.

இதன்மூலம் இனிமேல் அசல் ஆவணங்கள் இல்லையென்றாலும், பதிவுத்துறையில் பாதுகாத்து வைக்கப்பட்டிருக்கும் ஆவணங்களின் அடிப்படையில், தங்களது மனை சம்பந்தமான ஆவணங்களை பொதுமக்கள் பதிவு செய்யலாம் என்ற தீர்வு ஏற்பட்டுள்ளது.. இது வரவேற்கத்தக்கது. பாராட்டுதலுக்குரியது.

பரிவர்த்தனைகள்: பொதுமக்கள் இதனை பயன்படுத்திக் கொள்ளலாம். ஆவணங்களை தவறவிட்டிருந்தாலோ அல்லது களவாடப்பட்டிருந்தாலோ, கவலைப்படாமல் உங்களது மனை, நிலங்கள் சம்பந்தமான பரிவர்த்தனைகளை தாராளமாக மேற்கொள்ளலாம்" என்று தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+