தீபாவளியை முன்னிட்டு "டபுள் குட்நியூஸ்".. திங்கள் கிழமையும் அரசு விடுமுறை! தமிழ்நாடு அரசு முடிவு!
சென்னை: தீபாவளி பண்டிகைக்கு அடுத்த நாளான திங்கட்கிழமை தமிழ்நாடு அரசு விடுமுறை என்று அறிவித்து உள்ளது.
தமிழ்நாட்டில் தீபாவளியை முன்னிட்டு பல முக்கிய அறிவிப்புகளை அரசு வெளியிட்டு வருகிறது. சமீபத்தில் கூட, அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டது. அரசு அலுவலர்கள், ஆசிரியர்களுக்கு தற்போது வழங்கப்படும் அகவிலைப்படியை 42% இருந்து 46% உயர்த்தி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
இந்த அறிவிப்பால் மாநில அரசுக்கு 2546.16 கோடி செலவு ஏற்படும். இதன்மூலம் சுமார் 16 லட்சம் அரசு ஊழியர்கள் பயன்பெற உள்ளனர். 42% அகவிலைப்படி 01.07.2023 முதல் 46%ஆக உயர்த்தி வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
மத்திய மற்றும் மாநில அரசு போனஸ்: ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகைக்கு அரசின் சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கு போனஸ் வழங்கப்படுவது வழக்கமாகும். அந்த வகையில் நடப்பாண்டிலும் 10% போனஸை அரசு அறிவித்தது. ஆனால் இந்த போனஸை 20% ஆக உயர்த்தி வழங்க வேண்டும் என்று அரசியல் கட்சியினர் வலியுறுத்தியுள்ளனர். இது போக விரைவில் டாஸ்மாக் ஊழியர்களுக்கும் போனஸ் உயர்த்தி வழங்கப்படும் வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வருகின்றன.
மத்திய அரசு ஊழியர்களுக்குத் தீபாவளி போனஸ் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. C பிரிவு & கெசட் ரேங்க் இல்லாத B பிரிவு ஊழியர்களுக்குத் தீபாவளி போனஸ் வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அதேபோல துணை ராணுவப் படைகளில் பணிபுரிவோருக்கும் தீபாவளி போனஸ் அளிக்க ஒப்புதல் தரப்பட்டுள்ளது. ஊழியர்களுக்கு அதிகபட்சமாக ரூ.7000 வரை போனஸ் அளிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

விடுமுறை : பல குடும்பங்களில் தீபாவளி பண்டிகையைச் சிறப்பாகக் கொண்டாட இந்த போனஸ் மிகவும் முக்கியமாக உதவும். இந்தாண்டு நவ. 12ஆம் தேதி தீபாவளி கொண்டாடப்படுகிறது. இதன் ஒரு கட்டமாக தீபாவளி பண்டிகைக்கு அடுத்த நாளான திங்கட்கிழமை தமிழ்நாடு அரசு விடுமுறை விட உள்ளதாக அறிவித்துள்ளது
தீபாவளி ஞாயிற்று கிழமை வருவதால் திங்கட்கிழமையும் விடுமுறை அறிவித்து உள்ளது. இதற்கான கோப்புகள் தயாராகி வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
ஏற்கனவே ஞாயிற்றுக் கிழமை தீபாவளி என்பதால் மறுநாள் திங்கள் கிழமை விடுமுறை அளிக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கோரிக்கை வைத்துள்ளனர் பட்டதாரி ஆசிரியர்கள் கூட்டமைப்பு. வெளியூர் செல்லும் பொதுமக்கள், ஆசிரியர்கள், அலுவலர்கள், மாணவர்களின் நலன் கருதி விடுமுறை அளிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
( தீபாவளி சிறப்பு பேருந்துகளை புக் செய்வது எப்படி? எங்கிருந்து செல்லும்? அரசின் முக்கிய அறிவிப்பு )
பள்ளிகள் விடுமுறை: இதனால் பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படும் வாய்ப்புகள் உள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொது மக்கள் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. 16,895 பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். இந்த பேருந்துகள் எங்கிருந்து இயங்கும்.. எப்படி புக் செய்வது என்று இங்கே பார்க்கலாம்.
புக்கிங் மையங்கள்: தீபாவளி சிறப்பு பேருந்து முன்பதிவுக்கு கோயம்பேட்டில் 10 மையங்களும், தாம்பரத்தில் ஒரு மையமும் செயல்படும் என்று அமைச்சர் சிவசங்கர் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். இந்த மையங்களில் நேரடியாக சென்று புக் செய்ய முடியும். உதாரணமாக கோயம்பேடு பேருந்து நிலையம் உள்ளே 10 மையம் உள்ளது. இங்கே சென்று பணம் கொடுத்து புக் செய்ய முடியும்.
இல்லையென்றால் https://www.tnstc.in/home.html பக்கத்தில் புக் செய்ய முடியும். அதில் லாக் இன் செய்து அல்லது செய்யாமல் விவரங்களை கொடுக்கலாம். செல்ல வேண்டிய இடம் , புறப்படும் இடம், நாள் தேதி குறிப்பிட்டால் பேருந்துகள் காண்பிக்கப்படும். அதில் தேவையான டிக்கெட்டுகளை புக் செய்ய முடியும்.


Click it and Unblock the Notifications
