எப்படி தவறானதாம்? ஆறுமுகசாமி ரிப்போர்ட்.. ஸ்டாலினின் அடுத்த மூவை.. "க்ளோசாக" கண்காணிக்கும் டெல்லி!
சென்னை: அதிமுகவில் நடக்கும் மாற்றங்கள்.. ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை தொடர்பாக அடுத்தடுத்து நடக்கும் சம்பவங்கள் குறித்து டெல்லி மிகவும் "க்ளோசாக" கண்காணித்து வருவதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னாள் நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் ஜெயலலிதா மரணம் தொடர்பாக வெளியிட்ட அறிக்கை தமிழ்நாடு அரசியலையே உலுக்கி உள்ளது. இந்த ஆணைய அறிக்கையில் இருக்கும் ஒவ்வொரு வரிகளும் கடுமையான விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஒவ்வொரு பக்கங்களிலும் அதிர்ச்சி அளிக்க கூடிய பல்வேறு தகவல்கள் இடம்பெற்றுள்ளன. இந்த அறிக்கை பெரும்பாலும் 4 நபர்களை மையமாக வைத்துதான் பரிந்துரைகளை மேற்கொண்டு உள்ளது.
இதில் சசிகலா. கேஎஸ் சிவக்குமார், அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சர்,விஜயபாஸ்கர், அப்போதைய சுகாதாரத்துறை செயலாளர் ஜெ ராதாகிருஷ்ணன் ஆகிய 4 பேரை குற்றம் செய்தவர்களாக கருதி விசாரிக்க வேண்டும் என்று இந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

சசிகலா
இந்த அறிக்கை சசிகலா தரப்பை கடும் அப்செட் ஆக்கி உள்ளது. நேரடியாக தன்னுடைய பெயரை இதில் குற்றஞ்சாட்டி உள்ளதால் சசிகலா கடும் அப்செட்டில் இருக்கிறாராம். தனக்கு எதிராக அறிக்கை வரும் என்பதை சசிகலா ஏற்கனவே உணர்ந்துதான் இருந்தார். தனக்கு எதிராகவே இந்த ரிப்போர்ட் இருக்கும் என்று சசிகலா எதிர்பார்த்துக்கொண்டுதான் இருந்தார். ஆனால் அவர் எதிர்பார்க்காத விஷயம்.. அறிக்கையில் இருக்கும் சில வார்த்தைகள்தான்.

சில வார்த்தைகள்
அறிக்கையில் உள்ள சில வார்த்தைகள் தன்னை மிகவும் புண்படுத்தும்படியாக இருப்பதாக சசிகலா கருதுகிறாராம். சசிகலாதான் அனைத்திற்கும் காரணம்.. ஆஞ்சியோ கூட செய்ய விடாமல் அவர் தடுத்தார் என்றெல்லாம் இதில் கடுமையான பாயிண்டுகள் உள்ளன. இந்த நிலையில்தான் அறிக்கை மேல் அறிக்கை விட்டு சசிகலா இந்த ஆணைய விசாரணை பரிந்துரைக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். இதில் தமிழ்நாடு அரசு அடுத்து என்ன நடவடிக்கை எடுக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தமிழ்நாடு அரசு
தமிழ்நாடு அரசு இந்த அறிக்கை தொடர்பாக விசாரிக்கும்படி சுகாதாரத்துறை முதன்மை செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளது. முதன்மை செயலாளர் இதில் விசாரித்து சட்ட ரீதியாக பரிந்துரைகளை மேற்கொள்ள வேண்டும். சட்ட ரீதியாக என்ன மாதிரியான நடவடிக்கைகளை எடுக்கலாம் என்று முதன்மை செயலாளர் தற்போது ஆலோசனைகளை செய்து வருகிறார். இந்த நிலையில்தான் இந்த விவகாரங்கள் அனைத்தையும் டெல்லி மிகவும் க்ளோசாக வாட்ச் செய்து வருவதாக கூறப்படுகிறது.

டெல்லி எப்படி?
தமிழ்நாடு அரசு இதில் என்ன முடிவு எடுக்க போகிறது. அடுத்த கட்டமாக என்ன மாதிரியான நடவடிக்கைகளை எடுக்க போகிறது என்று டெல்லி தரப்பு உற்று கவனித்து வருகிறதாம். இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசுக்கு என்று சில ஆப்ஷன்கள் இருக்கின்றன. இந்த அறிக்கையை தமிழ்நாடு அரசு நினைத்தால் கிடப்பில் போட முடியும். இல்லையென்றால் போலீஸ் விசாரணைக்கு உத்தரவிட முடியும்.

விசாரணை
அதுவும் இல்லையென்றால் நேரடியாக சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடவும் முடியும். இதில் தமிழ்நாடு அரசு என்ன மாதிரியான நடவடிக்கையை எடுக்க போகிறது என்று டெல்லி க்ளோசாக வாட்ச் செய்து வருகிறது. இதில் எய்ம்ஸ் சம்பந்தப்பட்டு இருப்பதால், டெல்லி இந்த விவகாரத்தை கவனித்து வருகிறதாம். எய்ம்ஸ் அறிக்கை தவறு, என்று ஆறுமுகசாமி ஆணையம் அறிக்கையில் தெரிவித்துள்ளது. பொதுவாக எய்ம்ஸ் அறிக்கையை இப்படி தவறு என்று விசாரணை குழுக்கள் தெரிவிக்காது.

எய்ம்ஸ் அறிக்கை
இந்தியாவிலேயே நம்பர் 1 அரசு மருத்துவமனையாக டெல்லி எய்ம்ஸ் உள்ளது. அதிகாரபூர்வ விசாரணைகளுக்கு அவர்களின் வல்லுனர் குழுதான் பயன்படுத்தப்படுகிறது. அப்படி இருக்கையில் அந்த குழுவின் அறிக்கையையே ஆறுமுகசாமி ஆணையம் நிராகரித்து உள்ளது. இதில் பல சட்ட சிக்கல்கள் உள்ளன. இதனால் தமிழ்நாடு அரசு இதில் என்ன மாதிரியான நடவடிக்கை எடுக்க போகிறது என்று டெல்லி கண்காணித்து வருவதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
“வீட்டுச் சிறையில் கருணாநிதி? அதிமுக ஆட்சி அமைந்ததும் விசாரித்து தண்டனை கொடுப்போம்”- எடப்பாடி பேச்சு -
“திருச்சுழியில் போட்டியிட விருப்பமனுவே தராத என்னை அனுப்பிட்டாங்க” அதிமுக வேட்பாளர் ராஜவர்மன் குமுறல் -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்! -
பாஜக சிட்டிங் எம்.எல்.ஏவுக்கு சீட் மறுப்பு.. தொகுதி மாறிய 2 MLAக்கள்! வேட்பாளர் பட்டியலில் ட்விஸ்ட்! -
கைவிட்டு போன அவிநாசி.. தவெகவுக்கு தாவிய மகன்! முன்னாள் சபாநாயகர் தனபால் கொடுத்த விளக்கம்! -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
நான் பார்த்துக்கிறேன்.. எடப்பாடிக்கு போனை போட்ட டிடிவி தினகரன்.. போனை எடுக்கலையாமே.. ஏன்? -
ஏ.சி.சண்முகம் கட்சிக்கு அதிர்ச்சி கொடுத்த பாஜக தலைமை.. தாமரை சின்னத்தில் போட்டியிட சீட் இல்லை! -
170ஐ தாண்டி.. சிக்ஸர் அடிக்கும்.. திமுகதான் மீண்டும்.. அப்போ தவெக, அதிமுக? 3 சர்வே ரிப்போர்ட்ஸ்! -
திமுக கூட்டணிக்கு 172 முதல் 178 இடங்கள்.. அதிமுக சறுக்கல்.. அப்போ தவெக.. வெளியான பரபர சர்வே! -
தமிழக வெற்றிக் கழகத்தின் அஸ்திவாரத்தை அசைத்த சர்வே.. ஆசையா இருந்தாங்களே.. தவெக விஜய்க்கு ஷாக்! -
பிரச்சார வாகனத்தால் பறிபோன எம்.எல்.ஏ பதவி? - ஜெயலலிதாவுக்கு எதிராக பி.ஹெச்.பாண்டியன் செய்த சம்பவம்!












Click it and Unblock the Notifications