1970s vs 2025: காசு பணம் ஓகே.. இந்தியாவில் மிடில் கிளாஸ் எப்போது நிம்மதியாக இருந்தனர்! ஒரு சிறு அலசல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மிடில் கிளாஸ் மக்களின் எண்ணிக்கை தான் இந்தியாவில் அதிகரித்து வருகிறது. இதற்குப் படிப்பும் வேலைவாய்ப்பும் அதிகரித்ததே பிரதான காரணம். அதேநேரம் மிடில் கிளாஸ் மக்கள் நிம்மதியாக இருக்கிறார்களா! எனக் கேட்டால் அதற்குத் தெளிவான விடை இல்லை. இதற்கிடையே நெட்டிசன் ஒருவர் 1970களில் இந்தியாவில் இருந்த மிடில் கிளாஸ் இளைஞர் ஒருவரின் வாழ்க்கையையும் 2025ல் ஒரு மிடில் கிளாஸ் வாழ்க்கையையும் ஒப்பிட்டுள்ளார்.

நமது நாட்டில் இப்போது பல்வேறு துறைகளிலும் குறிப்பாக ஐடி சார்ந்த துறைகளில் வேலைவாய்ப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் மிடில் கிளாஸ் மக்களின் எண்ணிக்கை அதிகரித்தே வருகிறது. அதேநேரம் மிடில் கிளாஸ் மக்களுக்கு இருக்கும் பிரச்சினை குறித்த புலம்பல்களையும் நாம் பல இடங்களில் பார்க்க முடிகிறது.

Delhi Man s Post Sparks Debate Indian Middle Class Life in 1970 vs 2025
Photo Credit:

டெல்லி பிஸ்னஸ்மேன்

இதற்கிடையே டெல்லியை சேர்ந்த தொழில்முனைவோர் ஒருவர், 1970களில் இந்தியாவில் இருந்த மிடில் கிளாஸ் இளைஞர் ஒருவரின் வாழ்க்கையையும் 2025ல் ஒரு மிடில் கிளாஸ் வாழ்க்கையையும் ஒப்பிட்டு லிங்க்ட்இன் தளத்தில் போஸ்ட் செய்துள்ளார். அதுவே இப்போது விவாதத்தை எழுப்பியுள்ளது. இந்த இடைப்பட்ட காலகட்டத்தில் இந்தியாவின் பொருளாதாரம் உயர்ந்துள்ளது என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால், இது இளைஞர்களுக்கு மன அமைதியைக் கொடுத்ததா என்பதே அடிப்படை கேள்வியாக இருக்கிறது.

1970கள்

பினோலூப் நிறுவனத்தின் நிறுவனரான ஹிமான்ஷு கல்ரா தனது போஸ்ட்டில், "1970-களில் மிடில் கிளாஸ் வாழ்க்கை ஒப்பீட்டளவில் பாதுகாப்பான பாதையிலேயே இருந்துள்ளது.. "நீங்கள் கல்லூரிக்குச் சென்று பட்டம் பெறுவீர்கள், ஒரு திறனை வளர்த்துக் கொள்வீர்கள்.. அடுத்து வேலை கிடைக்கும், நல்ல சம்பளம், அழகான வீடு, திருமணம், மூன்று குழந்தைகள் பெற்று ஐந்து பேர் கொண்ட குடும்பத்தை உருவாக்குவீர்கள்.. உங்கள் வாழ்க்கை முடிந்தது.

2025ல் இளைஞர் சூழல்

ஆனால் இப்போது 2025 மிகவும் குழப்பமான வாழ்க்கையே இருக்கிறது.. கல்லூரியில் சேரவே பல லட்சம் மாணவர்களுடன் போட்டிப்போட வேண்டி இருக்கிறது. கல்விக் கடன்களுடன் உங்கள் இளமையைத் தொடங்குகிறீர்கள். பின்னர் பட்டம் பெற்று திறன்களைக் கற்றுக்கொள்கிறீர்கள், ஆனால் அவை அனைத்தும் இரண்டு ஆண்டுகளில் காலாவதியாகிவிடும். வேலைக்கான போட்டியும் முன்னெப்போதையும் விட அதிகமாக உள்ளது. எல்லாவற்றுக்கும் மேலாக, அதிக பணவீக்கம், குறைந்த ஊதிய உயர்வு, தொடர்ச்சியான திறன் மேம்பாடு தேவையாக உள்ளன.

Delhi Man s Post Sparks Debate Indian Middle Class Life in 1970 vs 2025
Photo Credit:

இடையில் திருமணம் செய்து ஒரு குழந்தையைப் பெற்று, இருவரும் வேலை செய்து வாழ்க்கையை ஓட்டுகிறார்கள். இவ்வளவு பிரச்சினை இருக்கும் போது மன நிம்மதி இருக்குமா.. அதை நீங்களே தான் கண்டுபிடிக்க வேண்டும். பொருளாதாரம் உயர்ந்து வருகிறது கண்டிப்பாக.! ஆனால் அது போதுமா" என்பது போல அவர் பதிவிட்டுள்ளார்.

நெட்டிசன்கள்

கல்ராவின் இந்த பதிவு இணையத்தில் பெரும் விவாதத்தையே கிளப்பியது. அவருக்கு ஆதரவாகவும் எதிராகவும் பலரும் கருத்துகளைக் கூறியுள்ளனர். இது தொடர்பாக நெட்டிசன் ஒருவர், ", "நீங்கள் முற்றிலும் சரி, ஆனால் இந்த சூழ்நிலைக்கு முக்கிய காரணமே அதிகரிக்கும் மக்கள்தொகை தான். எல்லாமே அதிக மக்கள்தொகையுடன் இணைக்கப்பட்டுள்ளது. வேலைகள் அல்லது கல்லூரியில் சேருவது என எதுவாக இருந்தாலும் போட்டி அதிகமாகவும் நுழைவுத் தேர்வுகள் இருக்கவும் இதுவே காரணம்" என்றார்.

மற்றொரு நபர், "நாம் இரண்டு பக்கமும் பார்க்க வேண்டும்.. ஆம், இன்று அதிக வாய்ப்புகள் உள்ளன, ஆனால் அதிக சுமை உள்ளது. அதிக தேர்வுகள், ஆனால் தெளிவு குறைவு. அதிக வசதி, ஆனால் அதிக கவலை. வளர்ச்சி என்பது ஸ்திரத்தன்மையை மாற்றிவிட்டது. 1970களில், வெற்றி என்பது ஒரே நேர் பாதையில் இருந்தது. ஆனால், 2025ல், அது மாறிவிட்டது. இந்த காலத்தில் நமது திறனை ஒவ்வொரு 2-3 வருடங்களுக்கு ஒரு முறை புதுப்பித்தே ஆக வேண்டி இருக்கிறது" என்று பதிவிட்டுள்ளார். நீங்கச் சொல்லுங்கள் உண்மையில் எந்த காலத்து இளைஞர்களுக்கு மனநிம்மதி அதிகம் இருந்தது?

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+