இந்தியாவிலேயே முதன்முறை..சென்னை ஐஐடியில் சூப்பர் படிப்பு அறிமுகம்..எப்படி சேருவது?
சென்னை: இந்திய தொழில்நுட்பக் கழகம் (Madras IIT) மருத்துவ அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் என்ற துறையை புதிதாகத் தொடங்கியுள்ளது. மருத்துவ அறிவியல் மற்றும் பொறியியல் பாடத்திட்டத்தில் நான்காண்டு பிஎஸ் பட்டப்படிப்பை அறிமுகப்படுத்தப்படுத்தியுள்ளது. இந்தப் பாடத் திட்டம் இந்தியாவிலேயே முதன்முறையாக மெட்ராஸ் ஐஐடியில்தான் தொடங்கப்பட்டுள்ளது.
பிளஸ் 2விற்குப் பிறகு என்ன படிக்கலாம் என்று பல மாணவர்கள் யோசித்துக்கொண்டிருக்கின்றனர். பொறியியலா? மருத்துவமா என்று பலவித யோசனைகள் மாணவர்கள், பெற்றோர்கள் மனதில் ஓடிக்கொண்டே இருக்கிறது. புது புது படிப்புகள் அறிமுகம் ஆகிக்கொண்டே வருகின்றன.

சென்னை ஐஐடியில் பிஎஸ் நான்காண்டுகள் புதிய பாடத்திட்டம் இந்த ஆண்டு முதல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இப்பாடத் திட்டத்திற்கான மேம்பாட்டுப் பணிகளை கவனிக்கும் இந்தியா மற்றும் வெளிநாடுகளின் உயர்மட்ட மருத்துவ நிபுணர்கள், இத்துறையின் நடைமுறை பேராசிரியர்களாக இருப்பார்கள் எனக் கூறப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள முதன்மை மருத்துவமனைகள் மற்றும் மருத்துவக் கல்வி நிறுவனங்களுடன் இத்துறை ஏற்கனவே தொடர்புகளை ஏற்படுத்தியுள்ளது.
உயிர்காக்கும் மருத்துவ சாதனங்கள், மருந்து கண்டுபிடிப்பு, மருத்துவத்தில் செயற்கை நுண்ணறிவு, அடிப்படை மருத்துவ ஆராய்ச்சி ஆகியவற்றை மாணவர்கள் வடிவமைக்கும் வகையில் அவர்களைத் தயார்படுத்தும் இடைநிலை அணுகுமுறையை இப்பாடத்திட்டம் வழங்குகிறது. மருத்துவ நடைமுறைகளில் தொழில்நுட்பத்தை திறம்படப் பயன்படுத்த ஏதுவாக மருத்துவர்களுக்கு பயிற்சி அளிப்பதுடன், இந்தியாவில் மருத்துவர்- விஞ்ஞானிகளுக்கான அடித்தளத்தை அமைக்கும் பணியினை இந்தத் துறை மேற்கொள்ளும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடக்க விழாவில் பேசிய ஐஐடி மெட்ராஸ் இயக்குநர் பேராசிரியர் வி.காமகோடி, இந்தியாவில் கொரோனா பரவல் இருந்த சமயத்தில், இதுபோன்ற சூழ்நிலைகளை எதிர்காலத்தில் திறம்படக் கையாள வேண்டுமெனில் நாடு தழுவிய அளவில் தொழில்நுட்பத்தை மருத்துவத்துடன் இணைக்க வேண்டும் என்பது வெளிப்படையாகத் தெரிய வந்தது. இவ்வாறான சவால்கள் மீண்டும் எழாது என உறுதியாக நம்பும் அதே நேரத்தில், நமது பொறுப்புணர்வை வரையறுக்கும் விதமாக இந்த நடவடிக்கையை மேற்கொள்வது அவசியமாகிறது.

மருத்துவ அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் என்ற துறை இந்தியாவிலேயே முதன் முறையாக தொடங்கப்பட்டுள்ளதாக மெட்ராஸ் ஐஐடியின் இயக்குநர் பேராசிரியர் காமகோடி கூறியுள்ளார். தீர்க்க முடியாமல் இருந்து வந்த மருத்துவப் பிரச்சனைகளுக்கு அதிநவீன முறையில் தீர்வுகளை உருவாக்க மருத்துவம் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களை ஒருங்கிணைப்பதுதான் எங்கள் இலக்காகும்.
சிகிச்சை வாய்ப்புகளை மேம்படுத்தி, சுகாதாரப் பாதுகாப்பில் புரட்சியை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறோம். அனைவருக்கும் ஐஐடிஎம் என்ற பணியைத் தொடர்வதன் மூலம், மருத்துவத் துறையில் உரிய பங்களிப்பை வழங்க விரும்புகிறோம். அதன் மூலம் நம் நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் தரமான மற்றும் குறைந்த செலவிலான மருத்துவ சேவையை வழங்க முடியும் என்றார். எம்பிபிஎஸ் படித்தவர்கள் கூடி இந்த 4 ஆண்டு பிஎஸ் படிப்பினை கற்று உலகத்தரம் வாய்ந்த மருத்துவ சேவையை கொடுக்க முடியும் என்றும் பேராசிரியர் வி.காமகோடி கூறியுள்ளார். பிளஸ் 2வில் அறிவியல் படித்தவர்கள் இதற்கென உள்ள நுழைவுத்தேர்வினை எழுதி பிஎஸ் படிப்பில் சேரலாம் என்றும் காமகோடி கூறியுள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications