சென்னையில் மண்டல வாரியாக கொரோனா பாதித்தவர்கள் விவரம்.. திருவிக நகரில் உச்சம்
சென்னை: சென்னையில் மண்டல வாரியாக கொரோனா பாதித்தவர்கள் விவரம் வெளியாகி உள்ளது. திருவிக நகர் மண்டலத்தில் அதிகபட்சமாக 324 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவாக நேற்று ஒரு நாளில் 266 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. சென்னையில் மட்டும் நேற்று ஒரு நாளில் 203 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதுதான் சென்னையில் ஒரு நாளில் ஏற்பட்ட உச்சபட்ச பாதிப்பு ஆகும்.

கடந்த இரண்டு நாட்களில் மட்டும் கோயம்பேடு காய்கறி சந்தைகளில் இருந்து 119 பேருக்கு கொரோனா பரவி உள்ளது. இதேபோல் சென்னை ஐஸ் அவுஸ் பகுதியில் தன்னார்வலர் மூலம் 52 பேருக்கு கொரோனா பரவி உள்ளது.
இந்நிலையில் இதுவரை சென்னையில் கொரோனா பாதித்தவர்களின் மண்டல வாரியான விவரம் வெளியாகி உள்ளது. திருவிக நகர் மண்டலத்தில் அதிகபட்சமாக 324 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இராயபுரம் மண்டலத்தில் 275 பேருக்கும், கோடம்பாக்கம் மண்டலத்தில் 199 பேருக்கும், தேனாம்பேட்டை மண்டலத்தில் 166 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.
அண்ணா நகர் மண்டலத்தில் 130 பேருக்கும், தண்டடையார் பேட்டை மண்டலத்தில் 118 பேருக்கும், வளசரவாக்கம் மண்டலத்தில் 92 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளளது.

அம்பத்தூர் மண்டலத்தில் 58 பேருக்கும், அடையாறில் 29 பேருக்கும், திருவொற்றியூர் மண்டலத்தில் 22 பேருக்கும், ஆலந்தூரில் 10 பேருக்கும், பெருங்குடியில் 10 பேருக்கும், மாதவரத்தில் 9 பேருக்கும், சோழிங்கநல்லூரில் 6 பேருக்கும், மணலி மண்டலத்தில் 5 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் தற்போதைய நிலையில் 1458 பேர் கொரோனா பாதித்த நிலையில் தற்போது 1190 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
-
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications