நீயும் அரிவாளை எடுத்து வெட்டு.. செத்தாலும் மதம் மாறிடாத! விஎச்பி ஆர்விபிஎஸ் மணியனின் வெறி பேச்சு
சென்னை: தேவேந்திர குல வேளாளர் சமூகத்தினர் அரிவாளை ஏந்தி வெட்டிக்கொண்டு சாகலாமே தவிர, முஸ்லிமாக மதம் மாறிவிடக் கூடாது என இன்று கைதான விஷ்வ இந்து பரிஷத் தலைவர் ஆர்விபிஎஸ் மணியன் பேசி இருக்கும் வீடியோ தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பிரபல இந்துத்துவ பேச்சாளரும், ஆன்மீக சொற்பொழிவாளருமாக இருப்பவர் ஆர்விபிஎஸ் மணியன். விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் மூத்த தலைவர்களுள் ஒருவரான இவர் சொன்னையில் கடந்த சில நாட்களுக்கு முன் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆற்றிய உரை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அவர் பேசுகையில், "அரசியலமைப்பை உருவாக்கியது ராஜேந்திர பிரசாத் என்றே போட வேண்டும். அம்பேத்கர் அங்கு வேலை பார்த்தவரே . தன் மூளையிலிருந்து அரசியல் சாசனத்தை எழுதியதாக எங்கும் சொல்லவில்லை. அக்ரஹாரங்களில் பிராமணர்கள் இருப்பதாகவும், அங்கு துலுக்கர்கள் இருப்பதாகவும், இங்கு காலனி மக்கள் உள்ளதாகவும் சொல்வார்கள்.
காலனி ஆட்களுக்கு பெயர் கூட கிடையாது. எந்த காலனியில் இருந்து யார் ஒட்டிக்கொண்டு வந்தார்கள் என யாருக்குமே தெரியாது. அவர்களையே பட்டியல் சமூகம் என சொல்கிறோம். திருவள்ளுவர் என்று ஒரு நபரே கிடையாது அப்படி ஒருவர் இருந்தார் என சொல்வதே கற்பனை. திருவள்ளுவர், திருக்குறள் என யாரோ ஒருவர் சொல்லிவிட்டார். அந்த நபர்தான் திருக்குறளை எழுதினார் என சொல்வது கற்பனை." என்றார்.
திருவள்ளுவர், அம்பேத்கர் போன்ற பெரும் தலைவர்கள், பட்டியல் மற்றும் சிறுபான்மை சமூகத்தினரை இழிவாக பேசிய மணியனின் வீடியோ சமூக வலைதளங்களில் அதிகளவில் பகிரப்பட்டு வந்தது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து அவரை கைது செய்ய கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிலையில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்ததற்காக மணியன் இன்று காலை போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
இதற்கிடையே அவரது மற்றொரு வீடியோவும் தற்போது வெளியாகி உள்ளது. அதில் அவர் தெரிவித்துள்ளதாவது, "நேற்று எந்த தேவேந்திர குல வேளாளரை அரிவாளை வைத்துக்கொண்டு மிரட்டினானோ, இன்று அவன் முஸ்லிமாக மாறியவுடன், இவன் அரிவாள் கை நடுங்குது. நான் இதே ராமநாதபுரத்தில் பொதுக்கூட்டத்தில் ஒரு காலத்தில் பேசி இருக்கிறேன். உங்கள் முன் மட்டும்தான் பேசுகிறேன் என்று நினைக்காதீர்கள்.
நான் ராமநாதபுரத்தில் இருப்பவரிடமே கேட்டேன். ஏண்டா நீ முஸ்லிமாக போகிறாய்? முஸ்லிமாக போவதால் என்ன பிரச்சனை? இந்துவாக நில். உன்னை அடிக்க வந்தால் நாங்கள் பார்த்துக்கொள்கிறோம். எவனோ ஒருத்தன் தானே உயிரோடு இருக்கப்போகிறான். ஒன்னு அவன் இருப்பான். இல்லை நீ இருப்பாய்.
அதனால் ஏதோ ஒன்றுதானே முடிவு. நீயும் வெட்டுவதற்கு கற்றுக்கொள். உன் கையாள் அரிவாளை தூக்க முடியாதா? தூக்கு.. விடாதே. ஆனால், அதற்காக பயந்துகொண்டு முஸ்லிமாக மாறிவிடாதே. முஸ்லிமாக போனவர்களுக்கு எல்லாம் பாதுகாப்பு கிடைத்து இருக்கிறது." என்று பேசி இருக்கிறார்.
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?












Click it and Unblock the Notifications