ஏஐ தொழில்நுட்பத்தால் ராஞ்சனாவின் ஆன்மாவே போச்சு! தனுஷ் அதிருப்தி
சென்னை: செயற்கை நுண்ணறிவு எனப்படும் ஏஐ தொழில்நுட்பத்தால் ராஞ்சனா படத்தின் ஆன்மாவே போச்சு என நடிகர் தனுஷ் தனது அதிருப்தியை தெரிவித்துள்ளார். ராஞ்சனா படத்தின் கிளைமாக்ஸ் காட்சி ஏஐ தொழில்நுட்பம் மூலம் மாற்றப்பட்டது. இதனால் தனுஷ் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.
நடிகர் தனுஷ், கடந்த 2013 ஆம் ஆண்டு இந்தியில் அறிமுகமான படம் ராஞ்சனா. இதில் தனுஷ், சோனம் கபூர் ஆகியோர் நடித்திருந்தனர். இந்த திரைப்படம் வெற்றி பெற்று பலரது பாராட்டுகளை பெற்றது.

இதே படம் தமிழில் அம்பிகாபதி என்ற பெயரில் வெளியானது. இயக்குநர் ஆனந்த் எல் ராய் இயக்கிய இந்த படம் ஒரு கல்ட் கிளாசிக் அந்தஸ்தை பெற்றது. இந்த படத்தில் காதல், துரோகம், வலிகள் உள்ளிட்ட உணர்ச்சிகரமான காட்சிகள் உள்ளன.
இந்த படத்தின் கிளைமாக்ஸ் சோகத்தில் முடிந்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருந்தது. இந்த நிலையில் கில்லி, பாட்ஷா உள்ளிட்ட படங்களை போல் இந்த படமும் ரீ ரிலீஸ் செய்யப்படுகிறது.
இந்த படத்தில் கிளைமாக்ஸில் சோகமான முடிவை நீக்கிவிட்டு ஏஐ மூலம் மகிழ்ச்சியான ஒரு கிளைமாக்ஸ்ஸாக மாற்றியுள்ளது படக்குழு. இது நடிகர் தனுஷையும் இயக்குநர் ஆனந்த்தையும் கடும் அதிருப்திக்குள்ளாக்கியது.
இதுகுறித்து நடிகர் தனுஷ் தனது எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: ஏஐ மூலம் கிளைமாக்ஸ் மாற்றப்பட்டு ராஞ்சனா திரைப்படம் ரீரிலீஸ் செய்யப்படுவது எனக்கு அதிருப்தியை கொடுத்துள்ளது.

இந்த மாற்றம் கிளைமாக்ஸ், படத்தின் ஆன்மாவையே அழித்துவிட்டது. எனது கடும் எதிர்ப்பையும் மீறி, சம்பந்தப்பட்டவர்கள் இந்த செயலை செய்துள்ளனர். இது 12 ஆண்டுகளுக்கு முன் நான் நடித்த படம் இல்லை.
திரைப்படங்களையும் படைப்புகளையும் ஏஐ தொழில்நுட்பம் கொண்டு மாற்றுவது கலை மற்றும் கலைஞர்களுக்கு ஒரு மிகப் பெரிய அச்சுறுத்தல். இது கதை சொல்லும் நேர்மையையும் சினிமாவின் பாரம்பரியத்தையும் கேள்விக்குறியாக்குகிறது. இது போன்ற செயல்களை தடுக்க கடுமையான சட்டங்கள் கொண்டு வரப்படும் என நம்புகிறேன் என மிகவும் கொந்தளிப்புடன் தெரிவித்துள்ளார்.
-
பெரம்பூர் ரயில் நிலையத்தில் சூட்கேஸில் தலையில்லாத சடலம்! மனைவி, ஆண் நண்பரை தட்டி தூக்கிய தனிப்படை -
சென்னையில் முதல்வர் விஜய் தொகுதியான பெரம்பூரில் அடிக்கடி மின் வெட்டு.. பொங்கி எழுந்த மக்கள் -
திமுக ஆட்சியில் போடப்பட்ட டெண்டர் ரத்து? ரூ.2,100 கோடி ECR திட்டத்திற்கு முட்டுக்கட்டை போட்ட விஜய் -
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்!












Click it and Unblock the Notifications