தருமபுரம் மடத்தையும் எங்களையும் ரவுடிகளிடம் இருந்து காத்த முதல்வருக்கு நன்றி- தருமபுரம் ஆதீனம்
சென்னை: தருமபுரம் மடத்தையும் எங்களையும் ரவுடிகளிடம் இருந்து காத்த முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி என தருமபுரம் ஆதீனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஆதீனத்தின் 27ஆவது தலைமை மடாதிபதி மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சாமிகள் கூறியிருப்பதாவது: தருமபுரம் மடத்தையும் எங்களையும் ரவுடிகளிடம் இருந்து மீட்டெடுத்த முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்,

ரவுடிகள் தருமபுரம் ஆதீனம் சம்பந்தமாக போலி ஆடியோக்களையும் வீடியோக்களையும் தயாரித்து மடத்தில் வேலை செய்வோருக்கு மன உளைச்சலை உண்டாக்கியுள்ளனர். இதை சட்டரீதியாக எதிர்கொள்ள வேண்டும் என்பதால் காவல் துறையை நாங்கள் நாடினோம்.
தமிழக முதல்வரின் ஆணைப்படி சம்பந்தப்பட்டவர்கள் மீது துரிதமாக நடவடிக்கை எடுக்கப்பட்டது. மிகத் துரிதமாக நடவடிக்கை எடுத்து எங்களையும் மடத்தின் பெருமையையும் காத்த காவல் துறைக்கு நன்றி. இவ்வாறு தருமபுரம் ஆதீனம் தெரிவித்துள்ளார்.
மயிலாடுதுறையில் பழமைவாய்ந்த தருமபுரம் ஆதீனம் சைவ மடம் அமைந்துள்ளது. இந்த ஆதீனத்தின் 27ஆவது தலைமை மடாதிபதியாக மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சாமிகள் இருந்து வருகிறார். இந்த நிலையில் மடாதிபதியின் சகோதரரும் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான தேவஸ்தானத்தின் கணக்காளராகவும் உள்ள விருத்தகிரி என்பவர் மயிலாடுதுறை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது: தஞ்சை மாவட்டம் ஆடுதுறை சார்ந்த வினோத் என்பவரும், மடாதிபதியின் உதவியாளர் செந்தில் என்பவரும் என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டும், நேரில் சந்தித்தும் ஆதீன மடாதிபதியின் ஆபாச வீடியோ, ஆடியோ தங்களிடம் இருப்பதாகவும், இதனை சமூக வலைதளங்கள் மற்றும் தொலைக்காட்சிகளில் வெளியிடாமல் இருக்க வேண்டுமென்றால் பணம் தர வேண்டும் என்றும் கூறி கழுத்தை நெரித்து கொலை செய்ய முயற்சி செய்தார்கள்.
இந்த சம்பவத்தில் செம்பனார்கோயிலைச் சேர்ந்த கலைமகள் கல்வி நிறுவனங்களின் தாளாளர் குடியரசு, மயிலாடுதுறை மாவட்ட பாஜக தலைவர் அகோரம், மதுரையை சேர்ந்த வக்கீல் ஜெயசந்திரன், செம்பனார்கோயில் திமுக மத்திய ஒன்றிய செயலாளர் அமிர்த. விஜயகுமார் ஆகியோர் தூண்டுதலாக இருந்துள்ளனர் என்றும் புகார் தெரிவித்திருந்தார்.
இந்தச்சம்பவம் தொடர்பாக சிறப்புப் படை போலீசார் விசாரணை மேற்கொண்டதில் சம்பவம் உண்மை என்று தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து தஞ்சை வடக்கு மாவட்ட பா.ஜ.க. பொதுச் செயலாளர் ஆடுதுறை வினோத்(32), சீர்காழி ஒன்றிய பா.ஜ.க. முன்னாள் தலைவர் திருவெண்காடு விக்னேஷ்33), செம்பனார்கோவில் கலைமகள் கல்வி நிறுவனங்களின் தாளாளர் குடியரசு(39), தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் தாலுகா நெய்குப்பை கிராமத்தைச் சேர்ந்த ஸ்ரீநிவாஸ் (28) ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.
அவர்களை நேற்று இரவு 10 மணிக்கு மயிலாடுதுறை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவர்களை 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி கலைவாணி உத்தரவிட்டிருந்தார். இதையடுத்து 4 பேரும் மயிலாடுதுறை கிளைச் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த வழக்கு தொடர்பாக பாஜக மாவட்ட தலைவர் அகோரம், தி.மு.க. ஒன்றிய செயலாளர் விஜயகுமார், ஆதீனம் உதவியாளர் செந்தில், மதுரையைச் சேர்ந்த வக்கீல் ஜெயச்சந்திரன், பிரபாகரன் ஆகிய 4 பேரையும் போலீஸார் தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் மயிலாடுதுறையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தலைமறைவாக உள்ள அகோரம், ராதாநல்லூர் பகுதியை சேர்ந்தவர். ஊராட்சி மன்றத் தலைவர் உள்ளிட்ட பல பொறுப்புகளை வகித்தவர். பாமகவில் இருந்து பாஜகவில் இணைந்தவர். கடந்த தேர்தல்களில் மயிலாடுதுறை தொகுதியில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவியர். அகோரம் மீது ஏற்கெனவே 30-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.
-
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.!












Click it and Unblock the Notifications