ஐபிஎல்லுக்கு இடையில் இப்படியா? சென்னையில் பெரிய டீலிங்கை முடிக்கும் தோனியின் நிறுவனம்? நடந்தது என்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஐபிஎல் 2022 சீசனுக்கு இடையில் தோனிக்கு சொந்தமான நிறுவனம் ஒன்று சென்னையில் முக்கியமான டீலிங் ஒன்றை முடித்துள்ளது.

2022 ஐபிஎல் சீசனில் சிஎஸ்கே அணி மிக மோசமாக ஆடி வருகிறது. இந்த சீஸனின் தொடக்கத்தில் இருந்து வரிசையாக தோல்விகளை சிஎஸ்கே அணி சந்தித்து வருகிறது.

இதுவரை 4 போட்டிகளில் ஆடி 4 போட்டிகளிலும் சிஎஸ்கே மிக மோசமான தோல்வியை சந்தித்துவிட்டது.

சிஎஸ்கே தோல்வி

சிஎஸ்கே தோல்வி

இந்த சீசன் தொடங்குவதற்கு முன்புதான் சிஎஸ்கே அணியின் கேப்டனாக ஜடேஜா நியமிக்கப்பட்டார். ஜடேஜா கேப்டன் ஆன பின் சிஎஸ்கே அணி ஒரு போட்டியில் கூட வெற்றி பெறவில்லை. சிஎஸ்கே அணியின் பவுலிங் மிக மோசமாக இருக்கிறது, முக்கியமாக அணியில் நல்ல வேகப்பந்து வீச்சாளர்கள் இல்லை. இதுவே அணியின் தோல்விக்கு முக்கியமான காரணங்களில் ஒன்றாக உள்ளது.

தோனி பிளான்

தோனி பிளான்

சிஎஸ்கே அணி 2022 ஐபிஎல் தொடரில் மோசமாக சொதப்பி வரும் நிலையில்தான்.. இன்னொரு பக்கம் அணியின் முன்னாள் கேப்டன் தோனி தனது பிஸ்னஸ்களில் கவனம் செலுத்தி வருகிறார். தோனி அதிக அளவில் முதலீடு செய்துள்ள நிறுவனங்களில் ஒன்று 7ink Brews என்னும் பீர் நிறுவனம் ஆகும். தோனியின் ஜெர்சி எண் 7 என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிறுவனம் Copter7 என்ற பெயரில் பீர்களை தயாரித்து வருகிறது.

முதலீடு

முதலீடு

அதாவது தோனியின் ஜெர்சி எண் 7 மற்றும் ஹெலிகாப்டர் ஷாட் இரண்டையும் குறிக்கும் வகையில் Copter7 என்ற பெயரில் பீர் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த பீர் சென்னையில் கிடைக்காது. சென்னையில் இதன் உற்பத்தி இல்லை. டெல்லி, மும்பை, பெங்களூரில் இந்த ஸ்டிராங் பீர் கிடைக்கும். இந்த நிலையில்தான் சென்னையில் இந்த பீர்களை விற்பனை செய்ய இந்த நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளதாம்.

என்ன நிறுவனம்

என்ன நிறுவனம்

இதற்காக அக்கார்ட் குழுமத்துடன் (Accord Group) அந்த நிறுவனம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிறுவனம் மூலம் தமிழ்நாட்டில் சென்னையில் மட்டும் இந்த பீர் விற்பனை செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது/ஏற்கனவே முதல் கட்ட ஒப்பந்தங்கள் முடிந்த நிலையில் இறுதிக்கட்ட ஒப்பந்தம் விரைவில் மேற்கொள்ளப்படும் என்று கூறப்படுகிறது. கிரிக்கெட் தாண்டி தோனி பல்வேறு நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+