என்ன நடக்குது? சென்னைக்கு வந்ததும்.. ஆளுநர் ரவிக்கு போனை போட்டு கேட்ட அமித் ஷா.. பேசியது என்ன?
சென்னை: தமிழ்நாடு வந்து இருக்கும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஆளுநர் ஆர்என் ரவியுடன் தொலைபேசியில் பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ்நாட்டில் ஆளுநர் ஆர். என் ரவி - முதல்வர் ஸ்டாலின் இடையிலான மோதல் உச்சம் பெற்றுள்ளது.ஆளுநர் ஆர். என் ரவியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு ஆளும் திமுக சார்பாக முன்பே குடியரசுத் தலைவரிடம் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. சமீபத்தில் தமிழ்நாடு சட்டசபையில் ஆளுநர் பேசிய உரைக்கு எதிராகவும் தமிழ்நாடு ஆளும் திமுக சார்பாக எம்பிக்கள் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் புகார் அளிக்கப்பட்டது.

இன்னொரு பக்கம் ஆளுநரின் செயல்பாடுகள் மீது ஆளும் திமுக கடுமையான விமர்சனங்களை வைத்து வருகிறது. ஆளுநர் ஆர். என் ரவி 20 மசோதாக்களை டெல்லிக்கு அனுப்பாமல் கிடப்பில் போட்டு உள்ளார். முக்கியமாக பல்கலைக்கழகங்களில் முதல்வரை வேந்தராக நியமிக்கும் மசோதாவை ஆளுநர் ஆர். என் ரவி டெல்லிக்கு அனுப்பாமல் கிடப்பில் போட்டுள்ளார். சில மசோதாக்கள் 1 வருடமாக கிடப்பில் இருக்கின்றன. இதனால் ஆளுநருக்கும் - ஆளும் தரப்பிற்கும் இடையில் கடும் மோதல் ஏற்பட்டுள்ளது.
அதோடு சட்டசபையிலேயே ஆளுநர் ஆர்.என் ரவியின் உரைக்கு எதிராக முதல்வர் ஸ்டாலின் மூலம் தீர்மானம் நிறைவேற்றி, அரசின் உரை அவை குறிப்பில் சேர்க்கப்பட்டது. ஆளுநர் ரவியின் உரை நீக்கப்பட்டு அரசின் உரை அதில் சேர்க்கப்பட்டது.
ஆளுநர் ஆர். என் ரவி - ஸ்டாலின் இடையிலான மோதல் உச்சத்தில் உள்ள நிலையில்தான் தமிழ்நாடு வந்து இருக்கும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஆளுநர் ஆர்என் ரவியுடன் தொலைபேசியில் பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது. வேலூரில் நடக்கும் 9 ஆண்டு பாஜக ஆட்சி சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று கலந்து கொள்ள இருக்கிறார்.
இதற்காக அமித் ஷா நேற்று தமிழ்நாடு வந்தார். சென்னை விமான நிலையம் வந்த அவருக்கு பிரம்மாண்ட வரவேற்பு கொடுக்கப்பட்டது. அதன்பின் அமைச்சர் அமித் ஷா சென்னையில் உள்ள கிண்டி ஐ.டி.சி ஹோட்டலுக்கு சென்று தங்கினார். அங்கு பாஜக தலைவர் அண்ணாமலையுடன் தனியாக ஆலோசனை நடத்தினார்.
ஆலோசனை: அமித் ஷா அமைச்சராக இல்லாமல்.. முழுக்க முழுக்க பாஜக சார்பான அரசியல் பணிக்காக்க அமித் ஷா தமிழ்நாடு வந்துள்ளார். இன்று 11.40 மணிக்கு பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்ய உள்ளார்.
இதற்கு இடையில்தான் தமிழ்நாடு வந்து இருக்கும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஆளுநர் ஆர்என் ரவியுடன் தொலைபேசியில் பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ்நாடு அரசின் செயல்பாடுகள் பற்றி ஆர்என் ரவியுடன், அமித் ஷா பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஸ்டாலின் - ரவிக்கு மோதல், சட்ட ஒழுங்கு, அரசின் மசோதாக்கள் உள்ளிட்ட விஷயங்கள் குறித்து இவர் ஆலோசனை செய்ததாக கூறப்படுகிறது. இன்று மதியம் வேலூர் பொதுக்கூட்டத்தில் மத்திய அரசின் சாதனைகளை அமித் ஷா பேசுகிறார். அதற்கு முன்பாக ஆளுநர் ஆர். என் ரவியுடன் அமித் ஷா பேசி உள்ளார்.
விமர்சனம்: முன்னதாக அமித் ஷாவின் தமிழ்நாடு பயணம் குறித்து முதல்வர் ஸ்டாலின் சில கேள்விகளையும், விமர்சனங்களையும் வைத்து இருந்தார். அதில், தமிழ்நாட்டுக்கு வந்திருக்கும் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா அவர்களே,
ஒன்றிய அரசில் தி.மு.க. பங்கேற்றிருந்தபோது தமிழ்நாட்டுக்குக் கொண்டு வந்த திட்டங்களை இன்று நான் சேலத்தில் பட்டியலிட்டேன். இதுபோல், 9 ஆண்டுகால பா.ஜ.க. ஆட்சியில் தமிழ்நாட்டுக்குக் கொண்டுவந்த சிறப்புத் திட்டங்களை உங்களால் பட்டியலிட முடியுமா?
தெற்கிலிருந்து எழுந்து, தேசிய அளவில் எதிரொலிக்கும் #DravidianModel குரலைப் பொறுத்துக்கொள்ள முடியாமல், வடக்கில் இருந்து அனுப்பப்படும் ஏவல் அமைப்புகளைக் கண்டெல்லாம் இந்த ஸ்டாலினும் அஞ்ச மாட்டான். தி.மு.க.வைச் சேர்ந்த யாரும் அஞ்ச மாட்டார்கள். வீரபாண்டியார் போல் நெஞ்சுரம் கொண்ட படைவீரர்களைக் கொண்டது திராவிட முன்னேற்றக் கழகம், என்று குறிப்பிட்டு உள்ளார்.
-
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி












Click it and Unblock the Notifications