நெற்றியில் "விபூதி" அழித்தாரா அண்ணாமலை? பழங்குடி பெண் நிற்கும்போதே? வீடியோவுடன் வந்த காயத்ரி ரகுராம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கர்நாடக மாநில தேர்தல் பிரச்சாரத்தில் தற்போது பிஸியாகி உள்ளார். இந்த நேரத்தில் ஒரு பரபரப்பு கிளம்பியிருக்கிறது.

விறுவிறுப்பான நாடாளுமன்ற தேர்தல் தமிழகத்தில் நடந்து முடிந்தநிலையிலும்கூட, இன்னமும் பரபரப்புகள் அடங்கவில்லை... பதிவான வாக்கு சதவீதம் இந்த முறை குறைவு என்கிறார்கள்.. மற்றொருபுறம் அரசியல் கட்சிகள், ஒருவருக்கொருர் குற்றச்சாட்டுகளை அள்ளி வீசிக் கொண்டிருக்கின்றன.. இது தொடர்பான புகார்களும் ஆணையத்துக்கு சென்று கொண்டிருக்கின்றன.

Did BJP Annamalai insult the Kovai Tribal Woman and why did Gayatri Raguram criticize Annamalai

இதனிடையே, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழகத்தில் தேர்தலை முடித்துக்கொண்டு, கேரளா, கர்நாடகம் என பிரச்சாரத்தில் மும்முரமாகி உள்ளார்.. தமிழ்நாட்டில் எங்கெல்லாம் பிரச்சாரம் செய்தாரோ, அங்கெல்லாம் திமுக - காங்கிரஸ் கூட்டணியை விமர்சித்த அண்ணாமலை, கேரளா, கர்நாடகாவில், இந்தியா கூட்டணியையே கடுமையாக விமர்சித்து வருகிறார்.

இந்தியா கூட்டணி: "இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார்? என்றால் தெரியாது... இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக யாருக்கு தகுதி இருக்கிறது? என்றாலும் தெரியாது.. அப்படின்னா ராகுல் காந்தி பிரதமரா? என்றால், அதற்கு இங்குள்ள கம்யூனிஸ்ட் கட்சியே ஏற்றுக்கொள்ளவில்லை... அப்படின்னா, இந்திய மக்கள் மட்டும் எப்படி ஏற்றுக்கொள்வார்கள்?

தங்களின் சொத்துகளை பாதுகாக்கவே இவர்கள் எல்லாரும் ஒன்று சேர்ந்திருக்கிறார்கள்.. அவர்களிடம் ஒருங்கிணைப்பு என்று எதுவுமே கிடையாது.. சீட்டுக்கட்டை குலுக்கிப்போட்டு தேர்வு செய்வதா பிரதமர் பதவி? இப்போது ஒரெயொரு பிரதமராகவும், பிரதமர் வேட்பாளராகவும் நரேந்திர மோடி மட்டுமே நமக்கு உள்ளார். வலிமையாக, பலமாக இந்த நாட்டை வழிநடத்தக்கூடிய தலைவராக நரேந்திர மோடி மட்டுமே இருக்கிறார்" என்று அண்ணாமலையின் பிரச்சாரங்கள் 2 மாநிலங்களிலும் அனலடித்து கொண்டிருக்கின்றன.

வரவேற்பு: அதிலும் கேரளாவைவிட கர்நாடகாவில் அண்ணாமலைக்கு பெருத்த வரவேற்புகள் கிடைத்து வருகின்றன.. செல்லுமிடமெல்லாம் கன்னடம் + தமிழ் என இரண்டு மொழிகளிலும் பேசி அசத்தி வாக்கு சேகரித்து கொண்டிருக்கிறார் அண்ணாமலை..

இந்நிலையில், அண்ணாமலையின் பிரச்சார வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது. கடந்த வாரம் அண்ணாமலை கோவையில் பிரச்சாரம் செய்தபோது எடுக்கப்பட்ட வீடியோ என்கிறார்கள்..

ஆரத்தி: கோவை தொகுதியில் பல்வேறு கிராமங்களுக்கு நேரடியாக சென்று கடந்த வாரம் வாக்கு சேகரித்தார். அப்போது பழங்குடி இனத்தை சேர்ந்த பெண் ஒருவர் அண்ணாமலை வரவேற்று ஆரத்தி எடுத்துள்ளார். அண்ணாமலை அப்பகுதி மக்களிடம் கோரிக்கை கேட்டுக்கொண்டிருந்தபோது அந்த பழங்குடி இன பெண், அண்ணாமலையை ஆரத்தி எடுத்து வரவேற்று, பிறகு நெற்றியில் திலகம் வைத்திருக்கிறார்..

ஆனால், அடுத்த செகண்டே நெற்றியில் வைத்த திலகத்தை அண்ணாமலை அழித்துவிட்டாராம். இப்படி ஒரு பகீர் குற்றச்சாட்டு தற்போது புதிதாக கிளம்பி உள்ளது.

வீடியோ: அண்ணாமலை என்றதுமே, இந்த வீடியோ ஆதாரத்துடன் கிளம்பி வந்துவிட்டார் காயத்ரி ரகுராம்.. பிரபல நடிகையும், அதிமுக நிர்வாகியுமான காயத்ரி ரகுராம் இந்த வீடியோவை பதிவிட்டு, "கோவை பகுதிகளில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை அப்போது அப்பகுதியைச் சேர்ந்த மலை கிராம பழங்குடியின பெண்கள் அண்ணாமலைக்கு ஆரத்தி எடுத்து நெற்றியில் பொட்டு வைத்தனர்.

பழங்குடியின பெண்கள் நெற்றியில் திலகமிட்ட அடுத்த சில நிமிடங்களில் அதனை அண்ணாமலை அழிக்கவே அங்கிருந்த பெண்கள் கடும் அதிருப்தி அடைந்தனர்" என்று பதிவிட்டுள்ளார்.

பதிலடி: காயத்ரியின் இந்த பதிவிற்கு, பாஜகவினர் பதிலடி தந்துள்ளனர்.. அண்ணாமலை தன்னுடைய நெற்றியில் வைத்த பொட்டை எங்கே அழித்தார்? நெற்றி பொட்டில் நீர் வடிந்துவிட்டது.. அந்த தண்ணீரைதான், அண்ணாமலை அழித்தாரே தவிர, பொட்டை அழிக்கவில்லை" என்று பதிலளித்து வருகிறார்கள். இந்த வீடியோ இப்போது வைரலாகி கொண்டிருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+