வருகிறது துணை முதல்வர் பதவி? ஆஹா அவருக்கா? சட்டென விசாரித்த ஸ்டாலின்.. ஸ்டன் ஆன சீனியர்கள்!
சென்னை: திமுக உயர் நிலை செயல்திட்ட குழு கூட்டத்தில் தமிழ்நாட்டில் துணை முதல்வர் பதவியை கொண்டு வருவது தொடர்பாக ஆலோசனை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னையில் திமுக உயர் நிலை செயல்திட்ட குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் பல முக்கிய தீர்மானமங்கள் நிறைவேற்றப்பட்டன.

அதன்படி சென்னையில் ஜூன் 3-ல் திமுக கூட்டணி கட்சிகள் கூட்டம் நடத்துவது. திருவாரூரில் கலைஞர் கோட்டம் ஜூன் 20-ல் திறப்பது. திருவாரூர் கலைஞர் கோட்டம்- நிதிஷ்குமார் திறந்து வைப்பது.
கிராமங்கள்தோறும் திமுக கொடி கம்பங்கள் அமைப்பது. தமிழ்நாடு முழுவதும் கருணாநிதி சிலைகள் அமைப்பது. தமிழ்நாடு முழுவதும் இணைய வசதியுடன் கலைஞர் படிப்பகங்கள் அமைப்பது போன்ற தீர்மானங்களை கொண்டு வந்தனர்.
ஆலோசனை:
இந்த நிலையில்தான் திமுக உயர் நிலை செயல்திட்ட குழு கூட்டத்தில் தமிழ்நாட்டில் துணை முதல்வர் பதவியை கொண்டு வருவது தொடர்பாக ஆலோசனை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
சமீபத்தில் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக பதவி ஏற்க போகிறார் என்று செய்திகள் வந்தன. அமைச்சரவை மாற்றத்தோடு துணை முதல்வர் பதவியும் உருவாக்கப்படும் என்று கூறப்பட்டது.
ஆனால் அமைச்சரவை மாற்றம் மட்டுமே செய்யப்பட்டது. தமிழ்நாடு நிதி அமைச்சராக தங்கம் தென்னரசு நியமனம் செய்யப்பட்டு உள்ளார். அமைச்சர் டிஆர்பி ராஜாவுக்கு தொழில்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. நிதி அமைச்சராக இருந்த பிடிஆர் பழனிவேல் தியாகராஜனுக்கு தகவல் தொழில்நுட்ப துறை ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
தமிழ்நாடு முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்று இரண்டு வருடங்கள் முடிந்துவிட்டன. இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் இரண்டு ஆண்டு முடிவில் சில அமைச்சர்களை மாற்ற முடிவு செய்துள்ளார். மேலும் ஐடி துறை அமைச்சராக இருக்கும் மனோ தங்கராஜ் பால்வளத்துறை அமைச்சராக மாற்றப்பட்டு உள்ளார்.
அதேபோல் அமைச்சர் சாமிநாதன் தமிழ் வளர்ச்சி துறைக்கு மாற்றப்பட்டு உள்ளார்.
ஆனால் துணை முதல்வர் பதவி உருவாக்கப்படவில்லை. இந்த நிலையில்தான் திமுக உயர் நிலை செயல்திட்ட குழு கூட்டத்தில் தமிழ்நாட்டில் துணை முதல்வர் பதவியை கொண்டு வருவது தொடர்பாக ஆலோசனை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
முதல்வர் ஸ்டாலின் உடல்நிலை, அவரின் வெளிநாட்டு பயணத்தை கருத்தில் கொண்டு துணை முதல்வர் பதவியை உருவாக்குவது பற்றி சீனியர்களிடம் ஸ்டாலின் ஆலோசனை செய்துள்ளார். ஸ்டாலின் இதை பற்றி கேட்டதும் நேற்று சீனியர்கள் ஸ்டன் ஆகி உள்ளனர். துணை முதல்வர் பதவி வேண்டாம் என்று சில சீனியர்கள் கூறியதாக கூறப்படுகிறது.
அதே சமயம் நேற்று மீட்டிங்கில் யாரை துணை முதல்வராக்குவது என்று ஆலோசனை செய்யப்படவில்லை.
இறுதியில் இப்போதைக்கு துணை முதல்வர் பதவி வேண்டாம் என்று முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
தேர்தல்:
இந்த பணிகள் ஒரு புறம் இருக்க இன்னொரு பக்கம் திமுக தரப்பு லோக்சபா தேர்தலுக்கும் தயாராக உள்ளதாம். இதை பற்றியும் நேற்று ஆலோசனை செய்துள்ளனர். அதன்படி லோக்சபா தேர்தலுக்காக பூத் கமிட்டியை அமைக்க ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார்.
50 ஆயிரம் உறுப்பினர்களை இணைக்க டார்கெட் வைத்துளோம். இதில் பாதி கிணறு தாண்டிவிட்டோம். ஆனால் மீதி கிணறு இன்னும் தாண்டவில்லை.
இன்னும் பூத் கமிட்டியை அமைக்காத மாவட்டங்களில் உடனே பூத் கமிட்டியை அமைக்க வேண்டும். சில மாவட்டங்களில் கட்சியில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கப்படவில்லை . அங்கே உடனே உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் இந்த மீட்டிங்கில் கூறி உள்ளார் என்று கூறப்படுகிறது.
-
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
இந்த லட்சணத்துல உங்களுக்கு பொ.செ பதவி வேற வேணுமா? தேர்தல் தோல்விக்குப் பின் ஸ்டாலின் ஆவேசம் -
Ilaiyaraja Birthday: ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்! இளையராஜாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து












Click it and Unblock the Notifications