கவனம்.. ரெடியாக இருங்க.. கூட்டம் முடிந்ததும் குஜராத் பற்றி பேசிய ஸ்டாலின்.. ஆஹா.. "அப்படி" சொன்னாரா?
சென்னை: நேற்று நடந்த திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் முக்கியமான சில விஷயங்களை பேசியதாக கட்சி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
குஜராத்தில் கடந்த 27 வருடமாக பாஜக ஆட்சி செய்து வருகிறது. குஜராத் பாஜகவின் கோட்டையாக உள்ளது. 1995ல் இருந்து அங்கு பாஜக ஆட்சிதான் உள்ளது. இந்த நிலையில்தான் இந்த முறை பாஜக - காங்கிரஸ் - ஆம் ஆத்மி இடையே கடுமையான மும்முனை போட்டி நிலவி வருகிறது.
இந்த முறை பாஜக ஆட்சி முடிவிற்கு வருமா.. அல்லது காவி கொடி மீண்டும் ஏற்றப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனால் குஜராத் சட்டசபை தேர்தல் அதிக கவனம் பெற்றுள்ளது.

என்ன நடந்தது?
குஜராத் மாநில சட்டசபை தேர்தலின் முதல்கட்ட வாக்குப்பதிவு நேற்று நடந்தது. 182 தொகுதிகளில் மொத்தம் 89 தொகுதிகளுக்கு நாளை தேர்தல் நடந்தது . 14,382 வாக்குச்சாவடிகளில் இந்த தேர்தல் நடந்தது. இரண்டாம் கட்ட தேர்தல் அங்கு டிசம்பர் 5ம் தேதி நடக்க உள்ளது. தேர்தல் முடிவுகள் டிசம்பர் 8ம் தேதி வெளியாகும். இந்த தேர்தலில் 60 சதவிகித வாக்குகள் பதிவாகி உள்ளன. அங்கே தேர்தல் நடக்கும் நிலையில் இன்னொரு பக்கம் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் சென்னை அறிவாலயத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடந்தது. தமிழ்நாட்டில் அரசியல் நிலவரம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. 2024 லோக்சபா தேர்தலுக்கு இன்னும் 17 மாதங்களுக்கும் மேல் இருக்கிறது. ஆனால் தேர்தலுக்கு இப்போதே கட்சிகள் தயாராக தொடங்கிவிட்டன. தேர்தல் வெற்றிபெறுவது தொடர்பான வியூகங்களை வகுக்க மாநில கட்சிகள் பல தயாராகிவிட்டன.

ஸ்டாலின்
இந்த நிலையில்தான் நேற்று நடந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் இதை பற்றி பேசி இருக்கிறாராம். மாவட்ட செயலாளர்கள் கூட்டம் முடிந்ததும், குஜராத் தேர்தல் பற்றி நேற்று முதல்வர் ஸ்டாலின் பேசி இருக்கிறாராம். சில நிர்வாகிகளுடன் அமர்ந்து பேசிய முதல்வர் ஸ்டாலின்.. குஜராத் தேர்தல் முக்கியமானது. நமக்கு எந்த விதத்திலும் இந்த தேர்தல் உதவாது. ஆனால் நாடாளுமன்ற தேர்தலுக்கான முன்னோட்டமாக இதை பாஜக பார்க்கிறது. இந்த தேர்தலில் வெற்றிபெற பாஜக தீவிரமாக முயன்று கொண்டு இருக்கிறது. இங்கே தோல்வி அடைந்தால் பாஜகவிற்கு அது பெரிய வீழ்ச்சியாக இருக்கும். அதோடு பல மாநிலங்களில் பாஜக வீழ இது காரணமாக அமைந்துவிடும்.

திமுக கூட்டம்
அதே சமயம் இங்கே வெற்றி அடைந்தால் அது பாஜகவிற்கு மிகப்பெரிய நம்பிக்கையை கொடுக்கும். பாஜக இந்த வெற்றியை வைத்துக்கொண்டே அப்படியே தேசிய அளவில் வெற்றிபெற பார்க்கும். இதற்காக தீவிரமான முயற்சிகளை பாஜக எடுக்கும். குஜராத்தில் பாஜக வென்றால் லோக்சபா தேர்தல் கூட முன்கூட்டியே வர வாய்ப்பு உள்ளது. 2024க்கு பதிலாக 2023 இறுதியிலேயே இவர்கள் தேர்தலை நடத்த திட்டம் போடலாம். அதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

குஜராத் தேர்தல்
அதனால் குஜராத் தேர்தலை நாம் தீவிரமாக கண்காணிக்க வேண்டும், என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்து உள்ளதாக கூறப்படுகிறது. அதோடு நிர்வாகிகளிடம் பேசிய ஸ்டாலின்.. பூத் கமிட்டியை நாம் மேலும் வலிமைப்படுத்த வேண்டும். பூத் கமிட்டியில் புதிதாக ஆட்களை சேருங்கள். அதுதான் முக்கியம். 2024ல்தான் லோக்சபா தேர்தல் என்று பொறுமையாக இருக்க வேண்டாம். நான் சொன்னதை மனதில் வைத்துக்கொண்டு இப்போதே தேர்தலுக்கான பணிகளை தொடங்குங்கள், என்று முதல்வர் ஸ்டாலின் கூறி இருக்கிறாராம்.












Click it and Unblock the Notifications