Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சசிகலா வீட்டில் நுழைந்த "பிரபலம்".. மாறும் அரசியல் கணக்கு.. 3 சிக்கல்கள்.. பின்னணியில் அவரா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுகவில் புயல் அடித்து கொண்டிருக்கிறது.. ஓபிஎஸ் ஒன்று நினைக்க, தினகரன் வேறு ஒன்று நினைக்க, இவர்களுக்கு நடுவில் சசிகலாவின் அரசியல் எந்த திசையில் நகர்கிறது என்று தெரியாமல் குழப்பம் மேலோங்கி வருகிறதாம்.. நாளை மூத்த தலைவர் வைத்திலிங்கம் வீட்டு திருமணம், நடக்க உள்ள நிலையில், தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்பு கிளம்பி உள்ளது.

மூத்த தலைவரும், ஓபிஎஸ் ஆதரவாளருமான வைத்திலிங்கத்தின், மகன் திருமணம் நாளை நடக்க போகிறது.. ஜூன் 7ம் தேதி தஞ்சாவூரில் மகன் சண்முக பிரபுவுக்கும், யாழினி என்பவருக்கும் திருமணம் நடக்க உள்ள நிலையில், இந்த கல்யாணத்தில்,ஓபிஎஸ் + சசிகலா + டிடிவி தினகரன் + ஓபிஎஸ் என 3 பேரையும் ஒன்றாக இணைக்க போவதாக பிளானில் இருந்தார் வைத்திலிங்கம்.

அதாவது, சசிகலா, டிடிவி தினகரன், ஓபிஎஸ், ஆகியோர் இந்த விழாவுக்கு தலைமை தாங்க வேண்டும் என்றும் வைத்திலிங்கம் ஆசைப்பட்டார்.. அந்தவகையில், திருமண மேடையில் சசிகலா, ஓபிஎஸ், டிடிவி தினகரன் ஆகியோரை ஒன்றாக மேடையேற்றவும் முடிவு செய்திருந்தார்.

Did Divakaran speak against AMMK TTV Dinakaran and What is VK Sasikalas plan

வைத்தி அழைப்பு: இதற்காக, அரசியல் தலைவர்கள் பலரையும் அழைப்பு விடுத்தபடியே இருந்தார் வைத்திலிங்கம்.. அப்படித்தான் கடந்த வாரம், அமமுக பொதுச்செயலாளர் தினகரனையும் சந்தித்து திருமண பத்திரிகையை தந்து அழைத்துள்ளார் வைத்தி.. இந்த சந்திப்பு மொத்தம் 30 நிமிடங்கள் நீடித்துள்ளது.. அப்போது, வைத்திலிங்கத்திடம், "காதல் திருமணமா? பெற்றோர்கள் பார்த்து நடத்தும் திருமணமா?" என்றெல்லாம் விசாரித்திருக்கிறார் தினகரன்.

இதனையடுத்து, "சின்னம்மாவுக்கு பத்திரிகை வைத்து விட்டீர்களா? "என்று தினகரன் கேட்டாராம்.. அதற்கு வைத்திலிங்கம், "இன்னும் இல்லை.. இனி தான் வைக்க வேண்டும்" என்று தெரிவித்திருக்கிறார்.. அதேபோல், சசிகலாவையும் வீடு தேடி சென்று, வைத்திலிங்கம் அழைப்பு விடுத்திருக்கிறார்.. ஆனால், அப்போது அவர் உறுதியாக, எந்த பதிலையும் வைத்திலிங்கத்திடம் சொல்லவில்லையாம்.. உடல் நலக்குறைவு காரணமாக தன்னால் திருமண விழாவில் கலந்துகொள்ள முடியாது. மற்றொரு நாள் வீட்டுக்கு வந்து மணமக்களை வாழ்த்துகிறேன் என்று வைத்திலிங்கத்திடம் சொன்னாராம்.

சின்னம்மா சசிகலா: "சின்னம்மாவுக்கு அழைப்பு விடுத்தேன்.. அதைத்தவிர வேறு எதுவும் சொல்வதற்கில்லை" என்று மட்டும் தன்னுடைய ஆதரவாளர்களிடம் வைத்திலிங்கம் சொன்னாராம்.. இப்படிப்பட்ட சூழலில்தான், தஞ்சாவூர் வீட்டில் தங்கியுள்ள சசிகலாவுக்கு, திடீரென கையில் சதை பிசைவு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.. சசிகலா கையில் "கட்டு" போடப்பட்டுள்ளதாம்.. கையில் லேசான எலும்பு முறிவு ஏற்பட்டிருப்பதால், அதற்கான சிகிச்சையிலும் இருக்கிறார்.

அதனால், கல்யாணத்துக்கு அவர் செல்லவில்லை என்றும், அவருக்கு பதிலாக உதவியாளர் கார்த்திகேயனை அனுப்பி வைக்க உள்ளதாகவும் செய்திகள் கசிந்துள்ளன. ஆனால், சசிகலாவின் ஆதரவாளர்களோ இதற்கு வேறு காரணம் சொல்கிறார்கள்..

Did Divakaran speak against AMMK TTV Dinakaran and What is VK Sasikalas plan

முதல் தடை: அதாவது, சமீபத்தில் டிடிவி தினகரனை ஓபிஎஸ் சந்தித்து பேசியிருந்தார்.. இருவரும் ஒன்றிணைந்த நிலையில், விரைவில் சசிகலாவை சந்திக்க போவதாக ஓபிஎஸ் செய்தியாளர்களிடம் பலமுறை சொல்லினார்.. ஆனால், அந்த சந்திப்பு இதுவரை நடக்கவே இல்லை.. எப்படியும், ஓபிஎஸ் நடத்தும் திருச்சி மாநாட்டுக்கு சசிகலா செல்வார் என்றும் நம்பப்பட்டது.. ஓபிஎஸ் தரப்பிலும் அழைப்பு விடுக்கப்பட்டது.. ஆனால், சசிகலா இந்த மாநாட்டுக்கும் செல்லவில்லை.

இரண்டாவது தடை இதற்கு பிறகு வைத்திலிங்கம் வீட்டு விசேஷத்தில், இவர்கள் சந்திப்பதாக தகவல்கள் கசிந்தன.. அதுவும் நடக்கவில்லை.. இதற்கெல்லாம் பின்னணியில், மன்னார்குடி தரப்பு குறிப்பாக, திவாகரன் உள்ளதாக சொல்கிறார்கள்.. இதுவரை ஓபிஎஸ்ஸை சந்திக்க அனுமதி தராமல் போனது, மாநாட்டுக்கு போகாதது, நாளை கல்யாணத்துக்கு வராமல் போவது, என அனைத்துக்கும் பின்னணியில் திவாகரன் உள்ளதாக சொல்கிறார்கள்..

மூன்றாவது தடை: இன்னொரு காரணமும் சொல்கிறார்கள்.. எடப்பாடி பழனிசாமி தரப்புடன், திவாகரன் இணக்கமான போக்கை கடைப்பிடிப்பதாக, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் அவ்வப்போது கசிந்தபடியே வந்து கொண்டிருக்கின்றன.. இப்படிப்பட்ட சூழலில், 3 பேரின் சந்திப்புக்கும், திவாகரனை வைத்து, எடப்பாடி தரப்பு முட்டுக்கட்டை போட்டுவிட்டதாகவும் சொல்கிறார்கள்.

இந்த 3 முறையும் முன்னெடுக்கப்பட்ட பிளான்களுமே சொதப்பலாகிவிட்ட நிலையில், நாளை சசிகலா கல்யாணத்துக்கு செல்வாரா? என்ற எதிர்பார்ப்பு கூடிவருகிறது.. நாளை இல்லாவிட்டாலும்கூட, அடுத்தடுத்த நாட்களில், ஓபிஎஸ் + தினகரன் + சசிகலா மூவருமே இணைய மாட்டார்களா? என்ற ஏக்க கேள்வி, டெல்டா + தென்மண்டலங்களை வட்டமடிக்க துவங்கி உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+