"அறிவாலயம்" ரூட்டை பிடித்த ராமதாஸ்.. கருணாநிதி சினிமாவுக்கு வந்தாராமே.. என்னவா இருக்கும்? "அது"தானா?
திமுக பக்கம் பாமக சாய்வது போல சந்தேகம் ஏற்பட்டுள்ளது
சென்னை: திமுக பக்கம் மெல்ல "சாய்ந்து" கொண்டிருக்கிறதோ பாமக என்று சந்தேகிக்கும் அளவுக்கு டாக்டர் ராமதாஸ் பேச்சு அமைந்து வருவது கவனிக்கத்தக்கதாக உள்ளது.. காரணம், என்னவா இருக்கும்?
திமுக ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்தே, அரசியல் ரீதியாக பாமகவின் அணுகுமுறையில் மாறுபாடு தென்பட்டு வருகிறது.. முதல்வராக ஸ்டாலின் பதவியேற்றதுமே இந்த அறிகுறி பளிச்சென தென்பட துவங்கியது என்றே சொல்லலாம்.
காரணம், தேர்தலில் வெற்றி பெற்ற பாமக எம்எல்ஏக்கள், முதல்வர் ஸ்டாலினின் ரூமுக்குள் வலிய சென்று தங்கள் பாராட்டை சொல்லியிருந்தார்கள்..

திமுக
இத்தனைக்கும் கடந்த 5 வருடமாக திமுகவை அதிகமாக விமர்சித்தது பாமகதான்.. ஆனால், பாமக தலைவர்கள் ராமதாஸ் முதல் அன்புமணி வரை திமுக கொண்டு வரும், கொரோனா தடுப்பு நடவடிக்கை முதல், முக்கிய அறிவிப்புகள், திட்டங்கள் வரை அனைத்தையும் வரவேற்று வந்ததை மறுக்க முடியாது.. மேலும், டாஸ்மாக் பதிலாக அரசுக்கு வருமானம் ஈட்டக்கூடிய வழிமுறைகள் குறித்து டாக்டர் ராமதாஸ் பிரத்யேகமாக முதல்வர் தரப்பில் எடுத்த அக்கறையும் இங்கு நினைவுகூர வேண்டி உள்ளது.

பாமக கூட்டணி
மற்றொருபக்கம், கடந்த சட்டசபை தேர்தலின்போதே, திமுகவுடன் பாமக கூட்டணி வைக்கும் என்று கூட பேசப்பட்டது... அதற்கான முயற்சியையும் அன்புமணி ராமதாஸ் முன்னெடுத்தபோலவே தெரிந்தது.. என்ன ஆச்சு என்று தெரியவில்லை.. கூட்டணி அமைக்க முடியாமல் போய்விட்டது.. இப்போது மீண்டும் திமுக மீதான ஆதரவு அலை பாமக தரப்பில் இருந்து வீச ஆரம்பித்துள்ளது..

கருணாநிதி
சென்னையில் நேற்று முன்தினம், அக்கட்சியின் நிழல் பட்ஜெட்டை நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டிருந்தார்.. அப்போது திமுகவின் தேர்தல் அறிக்கையில் அறிவித்தபடி, குடும்ப தலைவியருக்கு மாதம் 1,000 ரூபாய் இன்னும் வழங்கப்படவில்லையே என்ற கேள்வி அவரிடம் எழுப்பப்பட்டது.. அதற்கு அவர், "அறிவிப்பார்கள்.. பட்ஜெட் தான் வரப்போகுது இல்லை.. இன்னும் சில நாட்களே இருக்கு.. பொறுமையா இருங்க.. நிழல் பட்ஜெட்டை விட, சிறப்பானதாக தமிழக அரசின் பட்ஜெட் இருக்கலாம்.. இருக்க வேண்டும் என்பதே என் விருப்பம்" என்றார் ராமதாஸ்..

கருணாநிதி சினிமா
அதுமட்டுமல்ல, ''என் அழைப்பை ஏற்று, இலக்கணம் என்ற படம் பார்க்க கருணாநிதி வந்தார்... இந்த படத்தில் தமிழ் இல்லாத வார்த்தையை கண்டுபிடித்தால், 1 லட்சம் ரூபாய் பரிசு என்று அவரிடம் சொன்னேன்.. அவரும் படத்தை முழுசாக பார்த்தார்.. என் மீது பெரும் அன்பு கொண்டவர் கருணாநிதி... அவர் மீது அளவு கடந்த மரியாதை கொண்டவன் நான்" என்று புகழ்ந்து தள்ளினார் ராமதாஸ்..

தைலாபுரம்
அதாவது, திமுகவை திட்டவில்லை, திமுகவை விமர்சிக்கவில்லை, திமுக பேச்சை எடுக்காமலும் இல்லை, மாறாக திமுக அரசு மீதான தன்னுடைய நம்பிக்கையையும், கருணாநிதி மீதான தன்னுடைய பாசத்தையும் வெளிப்படுத்தியிருந்ததை டாக்டர் ஐயாவிடம் கவனிக்க முடிந்தது.. இதெல்லாம் அரசியல் நாகரீகமா? அல்லது அரசியல் சாணக்கியத்தனமா? தெரியவில்லை.. எதுவாக இருந்தாலும் வரவேற்க கூடியதே.. ஆனால், தைலாபுர தோட்டத்தில் புது மாறுதல் தென்பட்டு வருகிறது.. பார்ப்போம்...!












Click it and Unblock the Notifications