பட்டென செய்தியாளர் கேட்ட அந்த கேள்வி.. பதறிப்போன கனிமொழி.. நாசூக்காக தவிர்த்து.. அப்ப அவ்ளோதானா?
கனிமொழி தன்னிடம் கேட்ட கேள்விக்கு பதிலளிக்காமல் நாசூக்காக தவிர்த்துவிட்டார்
சென்னை: கனிமொழியிடம் திடீரென அந்த கேள்வியை செய்தியாளர் கேட்பார் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை.. ஆனால், அந்த கேள்வியை நாசூக்காக தவிர்த்துவிட்டார் திமுக எம்பி கனிமொழி.
திமுகவின் தேர்தல் அறிக்கையில், மதுவிலக்கு தொடர்பாக எந்த அறிவிப்புமே வெளியாகவில்லை.. மது விலக்கு அறிவிப்பை திமுக தவிர்த்திருந்தது, மக்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருந்தது.
அதேசமயம், கடந்த முறை அதிமுக ஆட்சியின்போது, மதுக்கடைக்கு எதிரான போராட்டத்தையும் முன்னெடுத்தது. கருப்பு டிரஸ் அணிந்து திமுக தலைவர் ஸ்டாலின், உட்பட அனைவருமே மாநிலம் முழுக்க தங்கள் எதிர்ப்பையும் தெரிவித்திருந்தனர்.

கனிமொழி பேட்டி
அந்த வகையில், கடந்த அதிமுக ஆட்சியின்போது கனிமொழி ஒரு பேட்டி தந்திருந்தார்.. அதில், அதிமுக ஆட்சியில் இளம் விதவைகளின் எண்ணிக்கை அதிகமாகி விட்டது.. காரணம், இங்கே குடிப்பழக்கம் மதுவுக்கு அடிமையாகும் நிலைமை அதிகரித்துக்கொண்டே போகிறது... அதை பற்றி இந்த அரசாங்கத்துக்கு கொஞ்சம் கூட அக்கறை இல்லை.. கவலையும் கிடையாது என்று விமர்சித்திருந்தார்.

பார்த்திபன்
அன்று கனிமொழி சொன்ன வார்த்தை, இன்று அவரிடமே திருப்பி கேட்கும் சூழலை அரசியல் களம் ஏற்படுத்தி உள்ளது.. திமுகவின் மகளிர் அணி செயலாளரும் தூத்துக்குடி எம்பியுமான கனிமொழி, காங்கிரஸ் எம்பி ஜோதிமணி, பொள்ளாச்சி எம்பி சண்மூக சுந்தரம், சேலம் எம்பி பார்த்திபன் உள்ளிட்டோர் மத்திய ஜவுளித்துறை அமைச்சர் பியூஸ் கோயலை டெல்லியில்நேரில் சந்தித்தனர். அப்போது, பருத்தி நூல் விலை உயர்வால் நெசவாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் அதற்கு, உரிய தீர்வு காண வேண்டும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் எழுதிய கடிதத்தை அவரிடம் தந்தனர்.

மேடம் ஒரு கேள்வி
இதற்கு பிறகு எம்பிக்கள் அனைவரும் சேர்ந்து செய்தியாளர்களை சந்தித்தனர்.. அப்போது செய்தியாளர் ஒருவர் கனிமொழியிடம், கடந்த அதிமுக ஆட்சியின்போது, நீங்க ஒரு பேட்டி தந்தீங்க.. அதில், தமிழகத்தில் விதவைகள் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாக சொன்னீங்க.. இப்போ திமுக ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது.. இந்த ஆட்சியில் விதவைகள் எண்ணிக்கை குறைந்துவிட்டதா? என்று கேட்டார். இந்த கேள்வியை கனிமொழி கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.

கனிமொழி
இது என்ன கேள்வி? நான் இப்போ பேசியதற்கும், இந்த கேள்விக்கும் என்ன சம்பந்தம்? என்று சொல்லிவிட்டு நகர்ந்தார்.. உடனே பக்கத்தில் இருந்த ஜோதிமணியிடம், மேடம் உங்க கிட்ட ஒரு கேள்வி என்றார் அந்த செய்தியாளர்.. ஆனால், கனிமொழியும் ஜோதிமணியும் அங்கிருந்து வேகமாக கிளம்பி காரில் புறப்பட்டு சென்றனர்... இந்த வீடியோ சோஷியல் மீடியாவில் வைரலாகி கொண்டிருக்கிறது.

கலந்துரையாடல்
இப்படித்தான், கடந்த ஏப்ரல் மாதம் இதுபோன்ற சம்பவம் ஒன்று நடந்தது.. கன்னியாகுமரி மாவட்டம் தொலையாவட்டம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் கலை கல்லூரி மாணவிகளுடன் தூத்துக்குடி எம்பி கனிமொழி கலந்து கொண்டு, கலந்துரையாடினார்.. அப்போது ஒரு மாணவி, தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படுமா? மது காரணமாக பல குடும்பங்கள் சீர்குலைந்து உள்ளதே.. போலீஸ்காரர்களே மது பழக்கத்திற்கு ஆளாகி வருவது வேதனையாக இருக்கிறது.. தமிழகத்தில் மது விற்பனை ஒரேடியாக நிறுத்தப்படுமா என்று கேள்வி எழுப்பினார்..

ஏக்க குரல்
இந்த கேள்வியை சற்றும் எதிர்பாராத கனிமொழி, "திமுக தேர்தல் வாக்குறுதியில் மது ஒழிப்பு என்று எதுவுமே சொல்லவில்லை.. அதனால், மதுக்கடைகளை மூடுவது என்பது இயலாத விஷயம்.. அதற்கு பதிலாக, அந்த கடைகளின் எண்ணிக்கையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்" என்று பதிலளித்திருந்தது இங்கு நினைவுகூரத்தக்கது.. எது எப்படியோ, "பூரண மதுவிலக்கு என்பது இனிமேல் சாத்தியமே இல்லையா?" என்ற ஏக்கக் குரல் தமிழக குடும்பங்களில் இருந்து கேட்டுக் கொண்டே இருக்கிறது..!
-
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா?












Click it and Unblock the Notifications