"மிஞ்சிடுச்சே".. காம்ரேடுகளுக்கும் "திருட்டுத்தனம்".. வசதியா மறைச்சிட்டாரே வெங்கடேசன்.. பொங்கும் பாஜக
இராம சீனிவாசன் மதுரை எம்பி வெங்கடேசனின் ட்வீட்டுக்கு பதிலடி தந்துள்ளார்
சென்னை: மதுரை எம்பி சு.வெங்கடேசன், பொங்கல் திருநாளை முன்னிட்டு தேநீர் விருந்தில் கலந்துகொள்ள ஆளுநர் அலுவலகம் அனுப்பிவைத்திருக்கும் அழைப்பிதழ் குறித்து கருத்து தெரிவித்திருந்ததற்கு, தமிழக பாஜக பதிலடி தந்துள்ளது.. அத்துடன் காமரேட்டுகளையும் சரமாரியாக விமர்சித்துள்ளது.
வரும் ஜனவரி 15ம் தேதி பொங்கல் திருநாள் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி தமிழக ஆளுநர் பொங்கல் விழா அழைப்பிதழை வெளியிட்டுள்ளார்.
அந்த அழைப்பிதழில் கடந்த ஆண்டு தமிழ்நாடு இலச்சினை இருந்த நிலையில், இந்த வருடம் இந்திய அரசின் இலச்சினை இடம்பெற்றுள்ளது.

இன்விடேஷன்
இதுகுறித்து பல்வேறு கட்சி தலைவர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள். அந்தவகையில், சு.வெங்கடேசன் எம்பி, மதுரையில் நேற்றைய தினம் செய்தியாளர்களிடம் பேசும்போது, ஆளுநரின் தேநீர் விருந்து அழைப்பிதழ் குறித்து விமர்சித்திருந்தார். அப்போது "ஆளுநரின் தேநீர் விருந்து அழைப்பிதழில் தமிழ்நாடு ஆளுநர் என்று குறிப்பிடாமல் "தமிழக ஆளுநர்" என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், தமிழ்நாட்டு அரசின் இலட்சினையும் புறக்கணிக்கப்பட்டு, மத்திய அரசின் இலட்சினை இடம் பெற்றுள்ளது. ஆளுநர் அரசியலமைப்பு அட்டவணையை மீறி செயல்படுகிறார்.

நிர்மலா போட்டோ
ஆளுநர் அரசியல் சாசன எல்லையை மீறுவது என முடிவெடுத்து செயல்படுகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு தெலங்கானாவில், மத்திய நிதியமைச்சர் ரேஷன் கடையில் பிரதமரின் போட்டோ இல்லை என்று சொல்லி பிரச்சினை செய்தனர்... இப்போது, தமிழ்நாடு ஆளுநரின் அழைப்பில் தமிழ்நாட்டு அரசின் இலட்சினை இல்லாததற்கு அவர்கள் என்ன பதில் சொல்லப்போகின்றனர். ஆளுநர் ஆறரை கோடி தமிழர்களின் உணர்வோடு விளையாடுகிறார்" என்று காட்டமாக கூறியிருந்தார். இதைதவிர, ஒரு ட்வீட்டையும் வெங்கடேசன் பதிவிட்டிருந்தார்.

இலட்சினை
அதில், "கடந்த முறை வந்த அழைப்பிதழில் தமிழ்நாடு அரசின் இலட்சினை இருந்தது. இந்த முறை வந்துள்ள அழைப்பிதழில் மூன்று இடங்களிலும் இந்திய அரசின் இலட்சினை மட்டுமே இருக்கிறது. நமது இலட்சினையில் தமிழ்நாடு என்று எழுதப்பட்டுள்ளதால் அதனைப் பயன்படுத்த மறுத்துள்ளார். கடந்த முறை வந்த அழைப்பிதழில் தமிழ்நாடு' அரசின் இலட்சினை இருந்தது. இந்த முறை வந்திருக்கும் அழைப்பிதழில் மூன்று இடங்களிலும் இந்திய அரசின் இலட்சினை மட்டுமே இருக்கிறது. நமது இலட்சினையில் தமிழ்நாடு என்று எழுதப்பட்டிருப்பதால் அதைப் பயன்படுத்த மறுத்திருக்கிறார். இதேபோல தமிழ்நாட்டு மக்களின் வரிப்பணத்திலிருந்தும் வாடகை வீட்டிலிருந்தும் ரோசப்பட்டு வெளியேறுவார் என்று எதிர்பார்க்கலாமா?" என்று கேள்வி எழுப்பியிருந்தார் வெங்கடேசன்.

காம்ரேட்டுகள்
இதற்கு பாஜக மாநில பொதுச்செயலாளர் இராம ஸ்ரீநிவாசன் பதிலடி தந்துள்ளார்.. மேதகு தமிழக ஆளுநர் அனுப்பிய பொங்கல் விழா அழைப்பிதழ், தமிழிலும் ஆங்கிலத்திலும் அச்சாகியிருக்கிறது. அதில், தமிழ் அழைப்பிதழில் 'தமிழக ஆளுநர் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது' என்பதை சுட்டிக்காட்டிய மதுரை மார்க்சிஸ்ட் எம்.பி சு.வெங்கடேசன், ஆங்கிலத்தில் கவர்னர் ஆஃப் தமிழ்நாடு' என்று இருப்பதை வசதியாக மறைத்தது ஏன்? திராவிட மாடல் ஆட்சி என்பதால் காம்ரேடுகளுக்கும் திருட்டுத்தனம் அதிகமாகிவிட்டது. 'உண்மையை மறைப்பவர்கள் தோழர்கள்' என்பதற்கான இன்னோர் உதாரணம் இது!" என்று சற்று காட்டமாகவே தெரிவித்திருக்கிறார்.












Click it and Unblock the Notifications