சல்லி சல்லியா எகிறுது.. "நான் கடவுள் மோடி"யின் தினுசு தினுசு பேச்சு! பாஜக கனவை உடைச்சிட்டாரே "தோழர்"
தஞ்சாவூர்: பிரதமர் மோடியின் தியான நிகழ்ச்சி முடிவுற்ற நிலையிலும்கூட அதுகுறித்த சலசலப்புகள் இன்னமும் ஓடிக் கொண்டேயிருக்கிறது.
பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் சொல்லும்போது, விவேகானந்தர் பாறை என்பது விவேகானந்த கேந்திராவின் சொத்தாகும். இது தனியார் சொத்து. மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்... இதற்கு அரசு மற்றும் தேர்தல் ஆணையத்தின் அனுமதி தேவையில்லை.

தியானம்: பிரதமர் மோடி தியானம் செய்து வரும் நிலையில், விவேகானந்தர் பாறையை மக்களும் பார்வையிட்டு வருகிறார்கள்.. ஆனாலும், எதிர்க்கட்சிகள் விஷமத்தனமான அரசியல் செய்கின்றன. தேர்தல் நடைபெறும் வரை தான் இண்டியா கூட்டணி கட்சிகளின் நாடகங்கள் நடக்கும்..
இத்தனை நாளும், நாங்கள் வெற்றி பெறுவோம் என்று சொல்லி கொண்டிருந்தார்கள்.. ஆனால் 7 கட்ட தேர்தல் முடிந்த பிறகு, மோடி 3வது முறையாக பிரதமர் பதவி ஏற்பார் என்று அவர்களுக்கும் தெரிந்து விட்டது" என்றார் அண்ணாமலை.
ஆனால், அண்ணாமலையின் இந்த கருத்துக்களையும், பாஜகவின் நம்பிக்கையையும், திமுக கூட்டணி தொடர்ந்து நொறுக்கி கொண்டிருக்கிறது. நேற்றுகூட தஞ்சாவூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, பாஜகவை மட்டுமல்லாமல், பிரதமர் மோடி முன்னெடுத்த பிரச்சாரங்களை கடுமையாக விமர்சித்தார்.
விமர்சனம்: "இந்த தேர்தலில் மோடி மேற்கொண்ட பிரச்சாரங்கள் குறித்து பொதுமக்களிடம் கடும் விமர்சனம் உள்ளது... தமிழ்நாட்டுக்கு வந்த போது ஒரு வித பிரசாரத்தை மேற்கொண்டார் மோடி..
வடமாநிலங்களுக்கு சென்றபோது மதங்களை வேறுபடுத்தியும், பிறகு வடக்கு, தெற்கு என்றும் சொன்னார்.. பிறகு குழந்தை ராமர் குடிசையில் இருந்தார், அவரை நாங்கள் கொண்டு வந்து கோபுரத்தில் வைத்துள்ளோம் என்று பேசினார். இது எதுவுமே பயன்பெறாத நிலையில், "தானே கடவுள்" என்று சொல்லி கொண்டார்.. பிறகு, அந்த பிரச்சாரமும் போதவில்லை என்பதால், "நான் தியானம் மேற்கொள்கிறேன்" என்று சொல்லி குமரி முனையில் விவேகானந்தர் பாறையில் வந்து தியானம் செய்தார்.
நான் கடவுள்: ஆக மொத்தம், பிரதமர் கடந்த 10 வருடங்களில் செய்த சாதனைகளை பற்றி அவர் எங்குமே பிரச்சாரம் செய்யவில்லை. 2014, 2019 ஆண்டுகளில் கொடுத்த வாக்குறுதிகள் பற்றியும் எங்கியுமே பேசவில்லை. மாறாக மக்களின் கவனத்தை திசை திருப்பும் வகையில் மத, சாதி ரீதியான பிரச்சனைகளை பேசியுள்ளார்" என்று சாடியிருக்கிறார் மூத்த தலைவர் முத்தரசன்.
இதனிடையே, தேசபந்து நாளிதழ் வெளியிட்ட கருத்து கணிப்பினை, திமுக கூட்டணி இணையத்தில் ஷேர் செய்து வருகிறது.. இந்தியா கூட்டணிக்கு 255 முதல் 290 தொகுதிகள் வரை கிடைக்கும் என கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.. மத்தியில் ஆட்சியை பிடிக்க 273 தொகுதிகள் தேவை என்ற நிலையில் எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணிக்கு 290 தொகுதிகள் வரை கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது .
அதேசமயம், பாஜகவின் என்டிஏ கூட்டணி 207 முதல் 241 தொகுதிகளை மட்டுமே பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டிருப்பது, பாஜகவினருக்கு உச்சக்கட்ட அதிர்ச்சியையும், இந்தியா கூட்டணியினருக்கு புதிய எழுச்சியையும் தந்து வருகிறதாம்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அண்ணாமலை 'மும்மொழி' எதிர்ப்பு: நேபாளப் பயணம்... ரஜினியுடன் ரகசிய சந்திப்பா? விரைவில் புது கட்சி -
விஜய் கொடுத்த ரியாக்ஷன்..! மோடி - விஜய் இடையே வெறும் 10 நிமிட சந்திப்பு..! பேசியது என்ன? -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
நிர்மலா சீதாராமனை சந்தித்த விஜய்! நிதி விவகாரத்தில்.. தமிழ்நாடு வைத்த முக்கிய கோரிக்கை! -
நிர்மலா சீதாராமனை சந்திக்கும் விஜய்.. 20 நிமிடத்தை தாண்டுமா? மோடி சந்தித்த கையோடு அடுத்த முக்கிய அப்பாயின்மென்ட்! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
புதுச்சேரியில் அமைச்சர்கள் நியமனம்.. முதல்வர் ரங்கசாமியுடன் கருத்து வேறுபாடு? நமச்சிவாயம் விளக்கம் -
2 நாள் பயணமாக டெல்லி புறப்பட்டார் முதல்வர் விஜய்.. இன்று மோடியுடன் சந்திப்பு.. பக்காவாக ரெடியான மனு!












Click it and Unblock the Notifications