"மாப்பிள்ளை".. எகிறி அடிக்கும் எடப்பாடி.. கோட்டையில் என்னாச்சு.. அப்ப ஓபிஎஸ்.. பரபரக்கும் பிளான்
சென்னை: ஓபிஎஸ் தன்னை முன்னிலைப்படுத்தி கொள்ளவும், கட்சியை தன் கட்டுப்பாட்டில் கொண்டுவரவும் மும்முரமாக முயன்று வருகிறார்.. ஆளும் தரப்பு, பாஜக மேலிடம் என இரு பக்கமும் உதவி கோரியும் அது பெரிதும் கைகொடுக்கவில்லை என்றே கூறப்படுகிறது.
Recommended Video
கடந்த 23-ந் தேதி அதிமுகவில் ஏற்பட்ட ரணகள சம்பவத்தின் அதிர்ச்சி இன்னும் விலகவில்லை.. குழப்பங்களும் தீரவில்லை.. வெறும் 30 நிமிடத்தில் அந்த பொதுக்குழு நடந்து முடிந்த ஆச்சரியமும் இன்னும் நீங்கவில்லை..
ஒற்றை தலைமை விவகாரத்துக்கும் எந்தவித தீர்வும் எட்டப்படவில்லை.. இதனிடையே ஓபிஎஸ் டெல்லிக்கு பறந்தார்.. எதற்காக என்று இதுவரை தெரியவில்லை என்றாலும், நேற்று மாலையே சென்னை திரும்பிவிட்டார்.

எடப்பாடி பழனிசாமி
இப்போதைய சூழலில், எடப்பாடிக்கு பெரும்பாலான ஆதரவு கிடைத்துள்ளதாக தெரிகிறது.. ஏராளமான நிர்வாகிகள் எடப்பாடி பக்கம் சாய்ந்துள்ளனர்.. இதுவரை மைத்ரேயன் ஓபிஎஸ் ஆதரவாளராக பார்க்கப்பட்ட நிலையில், அவரும் எடப்பாடி பழனிசாமி பக்கம் சாய்ந்ததெல்லாம், மிகப்பெரிய ட்விஸ்ட்டாக கருதப்படுகிறது.. ஆரம்பத்தில் கொங்கு மண்டலத்தில் மட்டுமே தனக்கான ஆதரவை சம்பாதித்து வைத்திருந்த எடப்பாடி, நாளடைவில், தென் மண்டலங்களிலும் தன்னுடைய செல்வாக்கை நிலைநாட்டி உள்ளார்.. அங்குள்ள பெரும்பாலான ஓபிஎஸ் ஆதரவாளர்களும் எடப்பாடி பக்கம் தாவி வருகின்றனர்.

பரிதாபம்
இதனால், ஓபிஎஸ் நிலைமை பரிதாபத்தை நோக்கி செல்வதாகவும், அவருக்கான ஆதரவுகள் குறைந்து வருவதாகவும் செய்திகள் பரபரத்தன.. தனக்கான ஆதரவு குறைந்துள்ளது தெரிந்துதான், ஓபிஎஸ் லேசான கலக்கம் அடைந்ததாக கூறப்பட்டது.. பொதுக்குழு நடந்தால், பெருவாரியான ஆதரவு எடப்பாடிக்கே செல்லும் என்பதையும் உணர்ந்தே உள்ளதால்தான், பொதுக்குழு நடக்காமல் இருக்க சில முயற்சிகளையும் 4 நாட்களுக்கு முன்பு கையில் எடுத்ததாக கூறப்பட்டது.

ஒற்றை தலைமை
அதில் ஒன்றுதான், ஆளும் தரப்பை சந்தித்து பேசியதாம்.. தன் சார்பாக, "நம்பிக்கையானவர்களை' அனுப்பி, திமுக மேலிட மருமகனிடம் பேச்சு நடத்தப்பட்டதாக கூறுகிறார்கள்.. பொதுக்குழு நடந்தால், சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்பதால், அதற்கு தடை விதிக்க முடியுமா? என்று கோரிக்கை வைக்கப்பட்டதாம்.. அதுமட்டுமல்ல, ஒற்றை தலைமை உருவாகிவிட்டால், காங்கிரஸ் கட்சி, நிச்சயம் அதிமுகவுடன் கூட்டணி வைக்க முற்படுவார்கள்.. இரட்டை தலைமையே நீடித்தால், காங்கிரஸ் அந்த முயற்சியை எடுக்காது, எனவே ஒற்றை தலைமை நீடிக்கவும், சட்டரீதியான நடவடிக்கை ஏதாவது எடுக்கும்படியும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. ஆனால் இதற்கு திமுக மேலிடம் பிடிகொடுக்காமல் நழுவிவிட்டதாம்..

மாப்பிள்ளை
அதெல்லாம் உங்களின் உட்கட்சி அரசியல்.. நாங்கள் தலையிட முடியாது.. என்று நாசூக்காக பதிலளித்து தவிர்த்துவிட்டதாம்.. அதேசமயம், பாஜகவைவிட அதிமுகதான் முக்கியம் என்பதையும் அழுத்தமாக திமுக வலியுறுத்தியதாக தெரிகிறது. இதற்கு பிறகுதான், ஓபிஎஸ் டெல்லி விசிட்டை மேற்கொண்டாராம்.. ஆனால், டெல்லியிலும் ஓபிஎஸ்ஸுக்கு பச்சை சிக்னல் கிடைக்கவில்லை என்றே சொல்கிறார்கள்.. கட்சி ஒன்றாகவும், தலைவர்கள் ஒற்றுமையாகவும் இருப்பதையே பாஜக மேலிடம் விரும்புவதால், ஓபிஎஸ் புலம்பலை சரியாக காதில் போட்டுக் கொள்ளவில்லை என்று தகவல்கள் கூறுகின்றன..

வாக்கு வங்கி
அதிமுகவின் இந்த உட்கட்சி பிரச்சனையை மேலிட தலைவர்கள் விரும்பவில்லையாம்.. கட்சி ஒன்றாக இருந்தால்தான், வாக்கு சதவீதம் அப்படியே கூட்டணிக்கு திருப்ப முடியும், திமுகவை பலவீனப்படுத்த முடியும் என்று பாஜக கணக்கு போடுகிறது.. அதுமட்டுல்ல, எடப்பாடி பழனிசாமி பக்கம், பெரும்பாலான ஆதரவாளர்கள் தற்போது இருப்பதால், இந்த முறையும் ஓபிஎஸ்ஸுக்கு டெல்லி ஆதரவு தருமா என்பது சந்தேகம்தானாம்.. என்ன நடக்க போகிறதென்று தெரியவில்லை.. பார்ப்போம்..!
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications