இக்கட்டான நேரத்தில் இழைக்கப்பட்ட துரோகம்! ரஷ்யாவுமா? இந்தியாவிற்கு எதிராக இப்படி ஒரு செயலை செய்ததா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்தியா - பாகிஸ்தான் போர் இந்த மாத தொடக்கத்தில் நடந்தது. போர் என்று அறிவிக்கப்படாமல்.. கிட்டத்தட்ட 3 நாட்களுக்கு முழுமையான தாக்குதல்கள் சரமாரியாக நடத்தப்பட்டன. இப்படிப்பட்ட போர் சமயத்தில்தான் ரஷ்யா இந்தியாவிற்கு எதிராக ஒரு வேலையை பார்த்ததாக விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன.

இந்த மோதல் முழுக்கவே இந்தியாவின் கையே ஓங்கி இருந்தது. இந்தியாவின் தாக்குதலில், பஹாவல்பூரில் உள்ள மர்காஸ் சுப்ஹான் அல்லா, தெஹ்ரா கலனில் உள்ள சர்ஜால், கோட்லியில் உள்ள மர்காஸ் அப்பாஸ் மற்றும் முசாஃபராபாத்தில் உள்ள சையத்னா பிலால் முகாம் ஆகிய முகாம்கள் தாக்கப்பட்டன. இதில் பஹாவல்பூரில் உள்ள மர்காஸ் சுப்ஹான் அல்லா மிக முக்கியமான இடங்கள் ஆகும்.

இந்திய ஏவுகணைகளால் மூன்று விமானப்படை தளங்கள் தாக்கப்பட்டதாக பாகிஸ்தான் இராணுவமே அறிவித்தது. 3 விமானப்படை தளங்கள் இந்திய ஏவுகணைகளால் தாக்கப்பட்டதாக பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்தது. நூர் கான் தளம், முரித் தளம் மற்றும் ஷோர்கோட் தளம் ஆகியவை தாக்கப்பட்டது என்று பாகிஸ்தான் ராணுவ செய்தித் தொடர்பாளர் அகமது ஷெரீப் சவுத்ரி அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.

இந்திய ராணுவத்தால் தகர்க்கப்பட்ட விமானப்படை தளங்கள் பின்வருமாறு,

1.. நூர் கான் விமான தளம், ராவல்பிண்டி
2. PAF ரஃபிகி விமான தளம், ஷோர்கோட்
3. ⁠PAF முரிட் விமான தளம், சக்வால்

Did Russia spread wrong news against Rafale during the India Pakistan war

முக்கியமான இடங்கள் அழிப்பு

இப்படி பாகிஸ்தானின் முக்கியமான இடங்கள் எல்லாம் தாக்கி அழிக்கப்பட்டன. ஆனால் பாகிஸ்தானால் இந்தியாவை அப்படி தாக்க முடியவில்லை. இந்தியாவின் பல இடங்களை தாக்க முயன்றது. இந்தியா மீது பாகிஸ்தான் அணு ஆயுதத்தையே ஏந்தி செல்லும் திறன் கொண்ட ஏவுகணை ஒன்றை ஏவியதாக தகவல் வெளியாகி உள்ளது. இதை இந்தியாவின் எஸ் .400 ஏவுகணை தடுப்பு அமைப்பு தடுத்து அழித்துள்ளது.

இந்திய ராணுவத்தின் மேற்கு கமெண்ட் பிரிவு அதிகாரிகள் வெளியிட்ட வீடியோ மூலம் இது உறுதியாகி உள்ளது. பாகிஸ்தான் தனது தாக்குதலில் சீன ட்ரோன்களை பாகிஸ்தான் பயன்படுத்தியதாகச் சொல்லப்பட்ட நிலையில், சீன ட்ரோன்களுடன் சேர்த்து துருக்கி ட்ரோன்களையும் பாகிஸ்தான் பயன்படுத்தியது. 36 இடங்களைக் குறிவைத்து சுமார் 300 முதல் 400 ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டன. இந்தியப் பாதுகாப்புப் படை கைனடிக் (kinetic) மற்றும் நான் கைனடிக் (non-kinetic) முறையில் ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியது. இவை துருக்கி மற்றும் சீனாவின் டிரோன்கள், என்று இந்திய ராணுவம் தெரிவித்தது.

பாகிஸ்தான் பொய்

இதில் பாகிஸ்தான் பல பொய்களை கூறியது. முக்கியமாக இந்தியாவின் 5 ரபேல் விமானங்களை சுட்டு வீழ்த்திவிட்டதாக பொய் சொன்னது. இது உலக அளவில் வேகமாக பரப்பப்பட்டது. இதையடுத்து ரபேல் பங்கு மதிப்புகளும் கூட சரிந்து பின்னர் மீண்டது. இது பொய் என்பது பலருக்கும் தெரிந்ததே. ஆனால் இந்த பொய்யை வேகமாக பரப்ப ரஷ்யா ஒரு காரணமாக இருந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

ரஷ்யா தனது Su-57E ஸ்டெல்த் விமானத்தை பல உலக நாடுகளுக்கு விற்க முயன்று வருகிறது. இந்தியா, வியட்நாம், மலேசியா, அரபு நாடுகளுக்கு விற்பனை செய்ய திட்டமிட்டு வருகிறது. இதற்கு பிரான்சின் ரபேல் போட்டியாக உள்ளது. ரபேல் ஸ்டெல்த் இல்லை என்றாலும் அவர்கள் தரும் டீலிங் பல நாடுகளுக்கு பிடித்துள்ளதால் ரபேலை வாங்க பல நாடுகள் ஆர்வம் காட்டுகின்றன .

இதனால் Su-57E ஸ்டெல்த் விமானத்தை விற்க முடிவது இல்லை. இப்படிப்பட்ட நிலையில்தான் ரபேலுக்கு எதிராக பாகிஸ்தானின் பொய்யான செய்திகளை பரப்ப ரஷ்யா உதவி இருக்கலாமோ என்ற சந்தேங்கங்கள் உலக அரங்கில் எழுந்துள்ளன. பல்வேறு பாதுகாப்புத்துறை வல்லுனர்கள் இந்த கேள்விகளை எழுப்பி உள்ளனர். Su-57E ஸ்டெல்த் விமானத்தை விற்க முடியாமல் இழப்பை சந்திக்க வேண்டி இருப்பதால் ரபேலுக்கு எதிராக பொய்யான தகவலை ரஷ்யா பரப்பியதாக குற்றஞ்சாட்டப்படுகிறது.

இதில் இந்தியாவிற்கு நேரடியாக ரஷ்யா தீங்கு விளைவிக்கவில்லை என்றாலும் போர் சமயத்தில் பொய்யான செய்தி ஒன்று பரவ ரஷ்யா மூளையாக இருந்துவிட்டது என்ற சந்தேகங்கள் எழுந்துள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+