"கஸ்டடியில்" செந்தில் பாலாஜி.. "இதை" கவனிக்காம விட்டுட்டோமே.. அப்படினா அடுத்து நடக்க போவது "இதுதானா"
சென்னை: புதிய சந்தேகம் ஒன்றுகிளம்பி உள்ளது.. நிஜமாகவே, அமைச்சர் செந்தில்பாலாஜி கைது செய்யப்பட்டுள்ளாரா? அதுகுறித்து அதிகாரிகள் தரப்பு இதுவரை அதிகாரப்பூர்வமான தகவலை வெளியிடவில்லையே ஏன்? என்ற சந்தேகங்கள் வலம்வருகின்றன.
தொடர் ரெய்டுகள் நடத்தப்பட்ட நிலையில், அமைச்சர் செந்தில்பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் வாகனத்தில் மத்திய துணை ராணுவப்படை பாதுகாப்புடன் வீட்டில் இருந்து வெளியே அழைத்து செல்ல முயன்றனர். அப்போது அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. காரில் படுத்துக் கொண்டு கதறியுள்ளார்..

அட்மிட்: அதனால் அவர் அங்கிருந்து ஓமந்தூரார் மருத்துவமனைக்கு அழைத்து சென்று அட்மிட் செய்ததாக சொல்கிறார்கள்.. வழக்கமாக, அமைச்சராக இருக்கும் ஒருவரை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தால், அதுகுறித்து உடனடியாக சட்டப்பேரவை செயலகத்திற்கு தகவல் தெரியப்படுத்தப்படும்... பிறகு, சட்டப்பேரவை செயலகம் மூலம், சபாநாயகருக்கு தெரியப்படுத்தப்படும். ஆனால், இங்கு மனித உரிமை மீறல் நடந்துள்ளது என்று திமுக குற்றஞ்சாட்டுகிறது.
விசாரணை நடத்துவதற்காக அழைத்துச் செல்வதாக வீட்டில் இருந்து செந்தில் பாலாஜியை அழைத்து செல்ல முயன்றபோதுதான், அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டிருக்கிறது.. அதற்குபிறகுதான், அவரது கைது குறித்து செந்தில் பாலாஜி சகோதரரிடம் தெரிவிக்கப்பட்டதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் சொல்லியிருக்கிறார்கள்..
விசாரணை: அதுமட்டுமல்ல, தற்போது செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டுள்ளாரா? அல்லது அது தடுப்பு காவலா? என்பது தெரியவில்லை.. இதுகுறித்து, இதுவரை அமலாக்கத்துறை அதிகாரிகளும் அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்தவில்லை..
அதேபோல் தமிழக அரசு தரப்பிலும் இதுவரை அமைச்சர் கைது செய்யப்பட்டதாக அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை.. அமைச்சர் செந்தில்பாலாஜி கைது செய்யப்பட்டிருந்தால் அவர் எந்த வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கிறார் என்பதும் அமலாக்கத் துறை அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிட்டால்தான் தெரியவரும்... இதைதான், அமைச்சர் நாடாளுமன்ற உறுப்பினர் என்.ஆர்.இளங்கோ கேள்வி எழுப்புகிறார். "செந்தில் பாலாஜியை எந்த வழக்கில் அமலாக்கத்துறையினர் கைது செய்துள்ளனர் என தெரியவில்லை" என்கிறார்.
சட்ட விதிமீறல்கள் இருப்பதாகவும் சட்டத்துறை அமைச்சர் ரகுபதியும் சொல்கிறார்.. இதனிடையே, அமைச்சர்கள் ஒவ்வொருவராக மருத்துவமனைக்கு சென்று, பேட்டிகளையும் தந்து வருகிறார்கள்.. அந்த பேட்டிகள் எல்லாம் அதிர்ச்சிகரமாகவே உள்ளன.. காது கேட்கவில்லை.. நாலைந்து முறை கூப்பிட்டாலும் திரும்பி பார்க்கவில்லை.. கண் அசைக்கவில்லை என்றெல்லாம் சொன்னார்களே தவிர, கைது நடவடிக்கை குறித்த அதிகாரத்தகவல்களை வெளியிடவில்லை..
பேட்டிகள்: அதுமட்டுமல்ல, மருத்துவமனையில் ஐசியூவில் செந்தில் பாலாஜி இருக்கிறார்.. வழக்கமாக யாரையுமே ஐசியு-வில் அனுமதிக்க மாட்டார்கள்.. ஆனால், கட்சிக்காரர்கள் அசால்ட்டாக சென்று வந்து, பேட்டிகளை தந்து வருகிறார்கள்.. இத்தனைக்கும் சிஆர்பிஎஃப் வீரர்கள் மருத்துவமனையில் குவிக்கப்பட்டுள்ளனர்... ஆனால், செந்தில்பாலாஜியை சந்திக்க சென்ற தமிழக அமைச்சர்கள் யாருமே அவரை நேரில் சந்திக்க அனுமதியளிக்கப்படவில்லையாம்..
அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாலும், அவரைக் காண யாரும் அனுமதிக்கப்படாத காரணத்தாலும் அவர் கைது செய்யப்பட்டிருக்கிறார் என்று விவரமறிந்தவர்கள் தரப்பு சொல்கிறார்கள்.. அதனால், செந்தில்பாலாஜி உண்மையிலேயே கைது செய்யப்பட்டுள்ளாரா? என்பது அதிகாரபூர்வமாக உறுதி செய்யப்படாததால் குழப்பம் நிலவுகிறது.
குழப்பம் : இனி அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பும் கிளம்பி உள்ளது.. அமைச்சர் செந்தில்பாலாஜி இன்றைக்குள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்கிறார்கள்.. ஒருவேளை அவர் உடல்நிலை அதற்கு ஒத்துழைக்கவில்லை என்றால் எழும்பூர் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி மருத்துவமனைக்கு நேரில் அழைத்து வரப்பட வாய்ப்புள்ளதாகவும் சொல்கிறார்கள்.. இதற்கு நடுவில் எய்ம்ஸ் டாக்டர்கள் வருகிறார்கள்.. அவர்கள் என்ன சொல்லப்போகிறார்களோ தெரியவில்லை..
எப்படி பார்த்தாலும், இன்று மாலைக்குள் செந்தில்பாலாஜி கைது பற்றி அமலாக்கத் துறை அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிடலாம் என்றே நம்பப்படுகிறது.
இதனிடையே, செந்தில் பாலாஜி கைதினை தொடர்ந்து, முதல்வர் ஸ்டாலின் அமைச்சர்கள், அதிகாரிகள், சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தியிருக்கிறார்.. வழக்கறிஞர் வில்சனிடம் இதுகுறித்து விவாதித்துள்ளார்.. இந்நிலையில், திமுக சார்பில் நீதிமன்றத்தை நாடலாம் என்றும் முடிவு செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.. திமுகவின் இந்த நடவடிக்கைக்கு, அமலாக்கத்துறை என்ன ரியாக்ட் செய்யப்போகிறது என்பதையும் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications