சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நடிகர் தாமு பேசப் பேச.. தேம்பி தேம்பி அழுத மாணவிகள்.. அரங்கில் கேட்ட விசும்பல் சத்தம்.. என்னாச்சு

நடிகர் தாமு பேச பேச மாணவிகள் கண்ணீர் விட்டு கதறி அழுத சம்பவம் நடந்துள்ளது

Google Oneindia Tamil News

சென்னை: நடிகர் தாமுவின் விழிப்புணர்வு பேச்சு ஒன்று இணையத்தில் பலராலும் ஈர்க்கப்பட்டு வருகிறது.. இதில் தாமு பேச பேச, மாணவிகள் தேம்பி தேம்பி அழுத சம்பவம் நடந்துள்ளது.

Recommended Video

    நடிகர் தாமு பேசப் பேச.. தேம்பி தேம்பி அழுத மாணவிகள்

    தமிழ் சினிமாவில் கடந்த 30 வருடங்களாக, நகைச்சுவை பங்களிப்பை தந்து வருபவர் நடிகர் தாமு.. டாக்டர் ஏ.வி.தாமோதரன் என்றுதான் இவரை சொல்ல வேண்டும்.

    டைரக்டர் பாலசந்தரின் சீடர் என்பது உட்பட சினிமாவில் இவருக்கான அங்கீகாரம் நிறைய உண்டு என்றாலும், யாரும் அறிந்திராத பல முகங்கள் தாமுவுக்கு உண்டு.

    சமூகநீதியாளர்கள் புறக்கணிப்பு.. சனாதானிகளுக்கு உபசரிப்பா? திமுக அரசுக்கு நடிகர் கவிதா பாரதி கேள்வி சமூகநீதியாளர்கள் புறக்கணிப்பு.. சனாதானிகளுக்கு உபசரிப்பா? திமுக அரசுக்கு நடிகர் கவிதா பாரதி கேள்வி

    அவார்டுகள்

    அவார்டுகள்

    இவர் ஒரு கல்வி சேவையாளர்... 10 வருடத்துக்கு மேல் இந்த சேவையை செய்து வருகிறார்... சேவைசெம்மல், மாணவர் தளபதி, டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம்விருது, சர்வதேச தமிழ் பல்கலைக்கழகம்-(அமெரிக்கா) டாக்டர் ஆஃப் லெட்டர்ஸ், "ராஷ்டிரிய சிக்ஷா கவுரவ் புரஸ்கார் 2021" என்கிற தேசிய கல்வியாளருக்கான கவுரவ விருது உட்பட நூற்றுக்கும் அதிகமான விருதை பெற்றவர். முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாமின் ஆலோசனையுடன், 2011 முதல் சர்வதேச பெற்றோர் ஆசிரியர்கள் மாணவர் பேரவையை (IPTSA) தொடங்கியவர். இது ஒரு அரசு சாரா கல்வி சேவை வழங்கும் அமைப்பு ஆகும்.

     நடிகர் தாமு

    நடிகர் தாமு

    இளைஞர்களின் மனதில் நேர்மறையான மாற்றத்தை உருவாக்க பாடுபட்டு வருபவர்.. கல்வியில் தரமான மாணவர்களை உருவாக்கிடவும் முயன்று வருபவர்.. இப்படிப்பட்ட சேவைகளுக்காக, டாக்டர் கலாமிடம் நேரடி பயிற்சி பெற்று பணியாற்றியவர் தான் நடிகர் தாமு.. தமிழகம் உட்பட, நாட்டின் ஒரு லட்சம் பேராசிரியர்கள், 30 லட்சம் பெற்றோர்களை கொண்ட தன்னுடைய அமைப்பின் மூலம் 20 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்களுக்கு ஊக்கமும் பயிற்சியும் அளித்து வரும் சேவை அளப்பரியது.

     ஸ்டன் ஆன மாணவிகள்

    ஸ்டன் ஆன மாணவிகள்

    அதிலும், கலாமின் முக்கோணக் கல்விக் கோட்பாட்டை இந்தியா முழுவதும் அறிமுகப்படுத்தியவர் தாமுதான்.. அந்தவகையில் தாமுவின் விழிப்புணர்வு வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.. சென்னையில் மகளிர் கல்லூரியில் போதை விழிப்புணர்வு நிகழ்ச்சியில், தாமு கலந்து கொண்டார்.. தமிழகத்தில் போதையால் குற்றச்சம்பவங்கள் நடைபெறுவது அதிகரித்துள்ளதால், அவற்றைத் தடுக்கும் விதமாக, மாநிலம் முழுவதும் காவல் துறையினர் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்...

     கண்ணீர் - அழுகை

    கண்ணீர் - அழுகை

    அதன்படி சென்னை குரோம்பேட்டையில் உள்ள வைஷ்ணவா மகளிர் கல்லூரியில், கருத்தரங்கு நடந்தது.. இந்த நிகழ்வுதான் கடந்த 2 நாட்களாகவே பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.. இதில்தான், நடிகர் தாமு கலந்து கொண்டு பேசினார். மாணவிகள் அனைவரும் உணர்ச்சிப்பெருக்குடன் போதை விழிப்புணர்வை ஏற்படுத்துவோம் என்று உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். போதையில் சிக்கும் மாணவர்களின் வாழ்க்கை மட்டுமின்றி, அவர்களின் பெற்றோர் படும் கஷ்டங்களையும் தாமு விளக்கிய விதம், அந்த அரங்கத்தையே உலுக்கி எடுத்துவிட்டது..

    விசும்பல்

    விசும்பல்

    ஒவ்வொரு நிஜ நிகழ்வையும் விலாவரியாக தாமு எடுத்துரைத்தார்.. அதில் தான் கண்ணில் நேரடியாகவே பார்த்த மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் குறித்து விவரித்தார்.. அப்போது தாமு பேச பேச, அவரது உரையைக் கேட்ட மாணவிகள் தங்களை மறந்து தேம்பி தேம்பி அழ ஆரம்பித்து விட்டனர்.. மாணவிகள் வழிந்தோடும் கண்ணீரை துடைத்துக் கொண்டே இருந்தனர்.. நிசப்த அரங்கில் மாணவிகளின் விசும்பல் சத்தம் கேட்டுக் கொண்டேயிருந்தது..!

    English summary
    Did the girl students shed tears when actor Dhamu spoke and what happened chennai awareness function நடிகர் தாமு பேச பேச மாணவிகள் கண்ணீர் விட்டு கதறி அழுத சம்பவம் நடந்துள்ளது
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X