Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வார்த்தையை விட்ட வைகோ.. திருமா ஏன் கோர்ட்டுக்கு போகல.. ஆ.ராசாவை விடமாட்டோம்: ஹிந்து மக்கள் கட்சி

இந்து மக்கள் கட்சியின் பொதுச்செயலாளர் பாரத மாதா செந்தில் ஸ்பெஷல் பேட்டி தந்துள்ளார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்து மதத்தில் ஏற்றத்தாழ்வுகள் இருக்கிறது என்றால், அதை நீக்குவதற்கு நீங்களும் செயல்பட வேண்டும், நாங்களும் செயல்பட வேண்டும்.. அதைவிட்டுட்டு, இந்துமதம், சனாதனம் இப்படியெல்லாம் பேசி மக்களை குழப்ப கூடாது என்று திமுக எம்பி ஆ.ராசாவுக்கு இந்து மக்கள் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

ஆ.ராசா பேசியபோது, "தனித் தமிழ்நாடு கேட்டார் பெரியார். ஆனால், பெரியாரை முழுமையாக ஏற்றுக் கொண்ட திமுக அதில் இருந்து விலகி ஜனநாயகத்துக்காக, இந்திய ஒருமைப்பாட்டுக்காக, இந்தியா வாழ்க என்று சொல்லிக் கொண்டிருக்கிறோம்.

இந்துவாக இருக்கும் வரை நீ சூத்திரன்... சூத்திரனாக இருக்கும் வரை நீ விபச்சாரியின் மகன். இந்துவாக இருக்கும் வரை நீ பஞ்சமன். இந்துவாக, இருக்கும் வரை நீ தீண்டத்தகாதவன். எத்தனை, பேர் விபச்சாரியின் மகனாக இருக்க விரும்புகிறீர்கள்" என்று பேசியிருந்தார்..

 SPECIAL பேட்டி

SPECIAL பேட்டி

இந்த பேச்சுக்குதான், தமிழக பாஜக, சென்னையில் டிஜிபியிடம் புகார் தந்துள்ளது. திமுக எம்பி ஆ.ராசாவுக்கு எதிராக, பாஜகவினரும் இந்து மத ஆதரவாளர்களும் கொந்தளித்துள்ளனர். முதல்வர் ஸ்டாலின், ராசா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டு வருகிறார்கள்.. ஆ.ராசாவும் தான் பேசியது குறித்து மன்னிப்பு குறித்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் சொல்லி வருகிறார்கள்.. இப்படிப்பட்ட சூழலில், இந்து மக்கள் கட்சியின் பொதுச்செயலாளர், பாரத மாதா செந்தில் ஒன் இந்தியாவுக்கு சிறப்பு பேட்டி அளித்துள்ளார். அவர் நம்மிடம் சொன்ன கருத்துக்கள்தான் இவை:

 வீரமணி

வீரமணி

"தமிழகத்தில் பாஜக ஆட்சி, இந்துத்துவா ஆட்சி, ஆன்மீக ஆட்சிக்காக உழைத்து கொண்டிருக்கிறோம்.. விரைவில் அந்த ஆட்சி வரப்போகுது.. ஆ.ராசா பேச்சுக்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவிப்பது ஜனநாயக உரிமை இல்லையா? அதைத்தான் நாங்கள் செய்து கொண்டிருக்கிறோம்.. ஆ.ராசா, அன்னைக்கு வீரமணி கூட்டத்துக்கு போனாரே, அங்கே போய், தன்னுடைய கட்சி கொள்கையை பேசவேண்டியதுதானே? மின்சார விலை உயர்வை பற்றி பேசாமல், சொத்து வரி உயர்வு பற்றி பேசாமல், வீட்டுவரிஉயர்வு பற்றி பேசாமல், தமிழக மக்களின் அவதி பற்றி பேசாமல், எங்கியோ இருக்கிற மனுஸ்மிருதியை எதுக்கு எடுத்துட்டு வர்றார்?

 மததுவேஷம்

மததுவேஷம்

நுபுர் ஷர்மா குரானில் உள்ளதை பேசும்போது மட்டும்,தேவையில்லாத மத துவேஷத்தை ஏன் பரப்புகிறீர்கள் என்று கேள்வி கேட்டார்கள்.. இன்னைக்கு ஆ.ராசா பேசும்போது ஏன் அமைதியாக இருக்கிறார்கள்? 1967-க்கு முன்பு, ஈவேராவுக்கும், திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் எவ்வளவு கருத்து போர்கள் நடைபெற்றன தெரியுமா? இரு தரப்பிலும் என்னென்ன வார்த்தைகளில் சண்டை போட்டுக் கொண்டார்கள் தெரியுமா? என்னெவெல்லாம் ஈவேரா திமுகவை திட்டினார் என்று இப்போது பேசுவாரா ஆ ராசா? அதுவும் வரலாறுதானே? அதுவும் நடந்த சம்பவம்தானே?

பைபிள்

பைபிள்

இன்னைக்கு என்னமோ வீரமணியுடன் ஒட்டி பிணைந்து கொண்டிருக்கிறார்களே? வைகோ அன்னைக்கு எவ்வளவோ திட்டிட்டு இருந்தாரே.. அத்தனை வார்த்தை விட்டும், அதை ஏன் கேள்வி கேட்கவில்லை? அப்போ கூட்டணி என்றால் அதையெல்லாம் விட்டுவிடுவீர்களா? ஆனால் மனுஸ்மிருதி மட்டும் வரலாறு என்கிறார்கள், தீண்டாமை என்கிறார்கள்.. என்ன நியாயம் இது? உங்களுக்கு தீண்டாமை தான் பிரச்சனை என்றால், நாங்களும்தான் தீண்டாமைக்கு எதிராகவேதான் இன்னமும் இருக்கிறோம்.. நீங்களும் தீண்டாமைக்கு எதிராக செயல்படுங்க.. நாங்களும் தீண்டாமைக்கு எதிராக செயல்படுகிறோம்.

 தேன்மிட்டாய்

தேன்மிட்டாய்

தேன்மிட்டாய் தரமாட்டான்னு சொன்னாங்களே, அவர்களை கைது செய்யுங்க.. நாங்களும் துணை நிற்கிறோம்.. அதைவிட்டுவிட்டு பாஜக என்னவோ தீண்டாமைக்கு ஆதரவாக இருப்பது போல் பேசிட்டு இருக்காங்களே? தீண்டாமையை எல்லாருமேதான் எதிர்த்தாக வேண்டும்.. ஆ.ராசா மட்டும்தான் தீண்டாமையை எதிர்ப்பதற்காக, புரட்சி செய்வது போல காட்டிக் கொள்ள அவர் என்ன மகானா? நாட்டில் என்ன பிரச்சனை இருக்கிறதோ, அதை பேசுங்க.. தேவையில்லாமல் மத விஷயத்தை எதுக்கு இழுக்கறீங்க?

சபரீசன்

சபரீசன்

கிறிஸ்தவ மதத்தில், பழைய ஏற்பாடு, புதிய ஏற்பாடு என்று 2 வகை உள்ளது.. புதிய ஏற்பாடு எதற்கு? அப்படின்னா பழைய ஏற்பாட்டில் தப்பு இருக்கிறது என்று தானே அர்த்தம்.. பழைய ஏற்பாட்டை பற்றி இப்போது நான் பேசினால், என்னை மதவாதி என்று முத்திரை குத்த மாட்டாங்களா? துர்கா ஸ்டாலினும், சபரீசனும் சூத்திரன் என்று திட்டக்கூடியவர்களிடம் ஆசீர்வாதம் வாங்குகிறார்களே? பார்ப்பனர்கள் எல்லாம் சனாதனத்தை திணிக்கிறார்கள் என்று திட்டிக்கொண்டிருக்கிறார்களே, அந்த பார்ப்பனர்களிடம் சென்று இவர்கள் ஆசீர்வாதம் மட்டும் வாங்கலாமா? சனாதனத்தை தவறு என்று சொல்வதற்கு உங்களுக்கு உரிமை இருக்கிறது என்றால், துர்கா ஸ்டாலின் அந்த சனாதனத்துக்கு ஆதரவாக பூஜை, புனஸ்வாரம் செய்வதெல்லாம் மூடநம்பிக்கை என்று சொல்ல முடியுமா?

 திருமாவளவன்

திருமாவளவன்

அதனால், ஆ ராசாவுக்கு எதிராக போராடுவது எங்கள் உரிமை.. எங்களை எதுக்கு அவர் கோர்ட்டுக்கு கூப்பிடுகிறார்? வேண்டுமானால், மனுதர்மத்தை தடை செய்ய ஆ.ராசா கோர்ட்டுக்கு போகட்டும்? மனுதர்மத்துக்கு எதிராக ஆ.ராசாவை கோர்ட்டுக்கு போக சொல்லுங்க.. முதலில், நுபுர் ஷர்மாவுக்கு எதிராக தெருதெருவாக போராடினாரே திருமாவளவன்.. அவர் ஏன் அன்னைக்கு கோர்ட்டுக்கு போகல?

வைகோ

வைகோ

மனுஸ்மிருதி என்பது முன்பு இயற்றப்பட்ட ஒரு சட்டம்.. அது 2000 ஆயிரம் முன்புக்கு இருந்த சட்டத்தை இப்போது கொண்டு வந்து பேச என்ன காரணம்? அப்படின்னா அரசியலமைப்பு சட்டம் நமக்கு எதுக்காக உள்ளது? இந்து மதமே தவறு என்று சொல்லி, கடவுள் வழிபாடே தவறு என்று சொல்லி, விநாயகர் சதுர்த்திக்கும் வாழ்த்து சொல்லாமல், தமிழும் சைவமும் வேறா என்ன? ஒருவேளை இந்து மதத்தில் ஏற்றத்தாழ்வுகள் இருக்கிறது என்றால், அதை நீக்குவதற்கு நீங்களும் செயல்பட வேண்டும், நாங்களும் செயல்பட வேண்டும்.. அதைவிட்டுட்டு, இந்துமதம், சனாதனம் இப்படியெல்லாம் பேசி மக்களை குழப்ப கூடாது.

 கல்வெட்டு

கல்வெட்டு

கடவுள் இருக்கிறார் அல்லது கடவுள் இல்லை என்பது அவரவர் விருப்பம்.. ஆனால், கடவுளை வணங்குபவர்களை காட்டுமிராண்டிகள், அயோக்கியன் என்ற வாசகத்தையெல்லாம் எழுதுவது ஜனநாயகத்துக்கு எதிரானது இல்லையா? அந்த வார்த்தைகளை எல்லாம் கல்வெட்டாக வைத்து, கோயிலுக்கு வழிபடுபவர் கண்ணில் படும்படியாக, வாசலுக்கு வெளியில் வைப்பது எந்தவகையில் ஜனநாயக ரீதியான நியாயம்? இதைதானே கனல் கண்ணன் சொன்னார்?

 காட்டுமிராண்டி

காட்டுமிராண்டி

அந்த சிலையை கோயிலுக்கு வெளியே திடீர்னு 2006-ல் தான் வைத்தார்கள்.. அன்னைக்கும் திமுக ஆட்சிதான்.. முதலில், நின்று கொண்டிருந்த ஈவேரா சிலையைதான் வைக்கப்பட்டிருந்தது. பிறகுதான் அது உடைத்து எறியப்பட்டுள்ளது.. ஈவேராவை நீங்கள் தலையில் தூக்கி வைத்துக் கொண்டு கொண்டாடி கொள்ளுங்கள்.. ஆனால், கோயிலுக்கு முன்னாடி சிலையை வைத்து கொண்டு, காட்டுமிராண்டி என்று சொல்லக்கூடாது..

 மெடிசின்

மெடிசின்

ஏற்றத்தாழ்வு மட்டுமே ஈவேராவுக்கு அன்று பிரச்சனை என்றால், "கோயில் அனைவருக்கும் சமம்.. அனைவரும் கோயிலுக்குள் சென்று வணங்க வேண்டும்" என்றுதானே அவர் எழுதியிருக்க வேண்டும்? அதைவிட்டுவிட்டு, கடவுளை வணங்குபவன் காட்டுமிராண்டி என்பதா? காட்டுமிராண்டி என்பதற்கும், கோயிலுக்குள் அனுமதி இல்லை என்று அவர் சொல்வதற்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கா? அடிபட்டால் மருந்து மட்டுமே வைக்கணும்.. அதைவிட்டுட்டு கொன்னுடுவீங்களா? அந்த மாதிரிதான் ஈவேரா சொல்கிறார்.. காட்டுமிராண்டி, முட்டாள் என்று சொல்கிறாரே?" என்று அடுக்கடுக்காக கேள்விகளை எழுப்பினார் பாரத மாதா செந்தில்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+