துக்க வீட்டில் இப்படியா? கவுண்டமணி வீட்டில் சிரித்த விஜய்? வந்த விமர்சனங்களும்.. பறந்த விளக்கமும்!
சென்னை: பிரபல நகைச்சுவை நடிகரான கவுண்டமணியின் மனைவி நேற்று காலமான நிலையில் அவரது உடலுக்கு நடிகர் விஜய் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். இந்த நிலையில் துக்க வீட்டில் இருந்து விஜய் புறப்பட்டு சென்ற போது சிரித்ததாக சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்று பரவி வருகிறது. இதற்கு கடும் கண்டனங்கள் எழுந்த நிலையில், அதற்கு விஜய் ரசிகர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர்.
தமிழ் திரையுலகில் பல தசாப்தங்களாக காமெடியில் கலக்கி வருபவர் கவுண்டமணி. நொடிக்கு நொடி கவுண்டர் கொடுக்கும் அவரது ஸ்டைல் காரணமாக கவுண்டர் மணி என்ற பெயர் காலப்போக்கில் கவுண்டமணி என்று ஆனது.
சினிமாவில் எப்படி காதலிப்பது போலவும் காதலுக்கு உதவுவது போலவும் இருப்பாரோ நிஜ வாழ்க்கையிலும் அப்படித் தான். அந்த வகையில் சாந்தி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் கவுண்டமணி. இந்த தம்பதிக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கும் நிலையில் உடல் நலக்குறைவால் நேற்று கவுண்டமணியின் மனைவி சாந்தி காலமானார்.

இதை அடுத்து சென்னை தேனாம்பேட்டையில் உள்ள கவுண்டமணியின் இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது. கவுண்டமணி மனைவியின் திடீர் மரணம் திரையுலகினரை அதிர்ச்சி அடைய செய்திருக்கும் நிலையில் பலரும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்ததோடு, நடிகர் கவுண்டமணிக்கு ஆறுதல் கூறி வருகின்றனர். அந்த வகையில் நடிகரும் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் ஆன விஜய் தேனாம்பேட்டையில் உள்ள நடிகர் கவுண்டமணியின் வீட்டுக்குச் சென்று அவரது மனைவி சாந்தியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.
தொடர்ந்து நடிகர் கவுண்டமணியை கட்டி அணைத்து ஆறுதல் தெரிவித்தார். இந்த புகைப்படங்களும் வீடியோக்களும் சமூக வலைதளங்களில் அதிக அளவில் பகிரப்பட்டது. இந்த நிலையில் சாந்தியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி விட்டு விஜய் தனது காரில் புறப்பட்டுச் சென்ற போது அவர் சிரித்ததாக சமூக வலைதளங்களில் வீடியோவும் புகைப்படங்களும் பகிரப்பட்டு வருகிறது. ஒரு துக்க வீட்டில் கலந்துகொண்டு விட்டு வீட்டிற்கு செல்லும்போது சிரிக்கலாமா என பலரும் விமர்சனங்களை முன் வைக்கின்றனர். மேலும் விஜய் இது போல நடந்து கொள்ளக் கூடாது என சிலர் கண்டனம் தெரிவித்ததையும் பார்க்க முடிந்தது.
இந்த நிலையில் விஜய் சிரித்ததற்கு என்ன காரணம் என்பது குறித்தும் கவுண்டமணியே விஜயை சந்தித்தபோது லேசாக புன்னகைத்தார் என பதில் கொடுத்து வருகின்றனர் தமிழக வெற்றிக் கழகத்தினர். அதாவது கவுண்டமணி வீட்டிலிருந்து விஜய் புறப்பட்டுச் சென்ற போது ஒருவர் லேசாக அவரது காலை மிதித்து விட்டார். இருந்த போதும் விஜய் சாதாரணமாக அவரது காரை நோக்கி சென்று கொண்டிருந்தார்.
அப்போது கூட்டத்தில் யாரோ ஒருவர் விஜயின் காலை தெரியாமல் மிதித்து விட்டார். அப்போது மற்றொருவர், ”நீ தான் கால மிதிச்சிட்ட.. உன் மேல கேஸ் போட போறாங்க” என சொன்னார். இதனைக் கேட்டு விஜய் லேசாக புன்னகைத்து விட்டு தனது காரில் ஏறி சென்றார். மேலும் விஜய் கவுண்டமணியின் வீட்டுக்குள் அஞ்சலி செலுத்திய போது விஜயை பார்த்ததும் ஒரு நொடி கவுண்டமணியே புன்னகைத்தார்.. இதெல்லாம் ஒரு பிரச்சனையா என கேட்டு வருகின்றனர். இதனால் இரு தரப்பிலேயும் தற்போது ட்விட்டரில் வார்த்தை யுத்தம் ஏற்பட்டிருக்கிறது.
-
பனையூருக்கு பறக்கும் ராயப்பேட்டை எக்ஸ்பிரஸ்.. அடுத்தடுத்து தாவும் அதிமுக தலைகள்! சரிந்த ஜெ. கோட்டை! -
மகளிர் உரிமைத் தொகை ரூ 2500 எப்போது? பட்டென அப்டேட் கொடுத்த மரியவில்சன்! 2 வாரங்கள் கழித்தா? -
சட்டம் ஒழுங்கு காலி.. எங்கே போனது சிங்கப்பெண் படை? முதல்வர் விஜய் அரசை விளாசிய டிடிவி தினகரன்! -
விஜய் வெற்றி.. மக்கள் முடிவை தவறுன்னு சொல்ல நீங்க யார்? சிவக்குமார் சொன்னதும் சத்யராஜ் கொடுத்த ரியாக்ஷன் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
திருச்சி கிழக்கில் வெல்லமண்டி நடராஜன் போட்டி? அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் கொடுத்த க்ரீன் சிக்னல்! -
காஞ்சிபுரம் படப்பையில்.. முதியவருக்கு பட்டை நாமம் போட்ட தவெக பெண் நிர்வாகி! 9 லட்சம் அபேஸ்! -
பெங்களூரை பாருங்க பாஸ்! பரந்தூர் திட்டம் நிறுத்தப்பட்டால் தமிழ்நாடு இழக்கப்போவது என்ன? பெரிய லிஸ்ட்! -
பரந்தூர் ஏர்போர்ட் டிராப்? சென்னையை காவு கொடுக்க போகிறாரா விஜய்... நெட்டிசன் வெளியிட்ட பதிவு -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
விஜய்யுடன் டெல்லி பயணித்த அந்த இளைஞர் யார்? போகுமிடமெல்லாம் கூடவே இருந்தாரே.. பின்னணி -
மருத்துவமனை முதல் பேருந்து வரை.. ஆய்வு என்ற பெயரில் அதிகரிக்கும் அட்ராசிட்டி.. கடிவாளம் போடுமா தவெக?












Click it and Unblock the Notifications