"மிட்நைட்டில்" சவுண்டு விட்ட சசிகலா.. "அவர்.. இப்போ.. இங்கே.. வந்தாகணும்".. ஒரே பரபரப்பு.. என்னாச்சு
சசிகலா நள்ளிரவில் தஞ்சை செல்லும் வழியில் போராட்டம் செய்துள்ளார்
சென்னை: சசிகலா நள்ளிரவில் போராட்டம் செய்துள்ளார்.. அவருடன் அவருடைய ஆதரவாளர்களும் மறியலில் ஈடுபட்டுள்ளனர்.. தஞ்சை செல்லும் வழியில் என்ன நடந்தது?
விகே சசிகலா சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.. அந்த வகையில், திருச்சி வழியாக தஞ்சைக்கு சென்றுள்ளார்.
அப்பொழுது துவாக்குடி சுங்கச்சாவடியில் செல்லும்பொழுது 5 கார்களுடன் சென்று உள்ளார். முன்னாள் சென்ற கார் ஸ்கேன் செய்யப்பட்டு சென்றுவிட்டது..

சசிகலா
அதற்கு பின்னால், சசிகலாவின் கார் சென்றிருக்கிறது.. அப்பொழுது சசிகலாவின் கார் கண்ணாடியில் சுங்கசாவடி ஸ்கேன் ஸ்டிக் தட்டியுள்ளது... இதை பார்த்ததும் சசிகலாவுக்கு கோபம் வந்துவிட்டது.. அதனால், தன்னுடைய காரை சிறிது தூரம் தள்ளி நிறுத்தி உள்ளார். உடனே அவரது ஆதரவாளர்களும் சுங்கச்சாவடியில் உள்ள கட்டண நுழைவாயில்களில் ஆங்காங்கே கார்களை அடுத்தடுத்து நிறுத்தி உள்ளனர்.

செக்போஸ்ட்
கோபம் விலகாத சசிகலா, "ஏற்கனவே, எனக்கு இதற்கு முன்பு இப்படித்தான் 2 முறை நடந்துள்ளது.. இந்த செக்போஸ்ட்டில் இப்படி நடத்துவது 3வது முறை.. பழிவாங்கும் நோக்கில் இப்படியெல்லாம் நடத்துகிறீர்களா" என்று ஆவேசத்துடன் சசிகலா கேட்டதாக தெரிகிறது.. இதையடுத்து, சசிகலா ஆதரவாளர்களுடன் சுங்கச்சாவடி ஊழியர்கள் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்... ஆனால், மேனேஜர் வரவில்லை.. இதனால் ஆதரவாளர்கள் ஆத்திரமடைந்து, மேனேஜர் இப்போதே வரவில்லை என்றால் போராட்டம் தொடரும் என்று சொல்லி நடுராத்திரியில் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.

மேமேனஜர் எங்கே?
இது குறித்து தகவல் கிடைத்ததும், ரோந்து பணியில் இருந்த திருவெறும்பூர் போலீசார் விரைந்து வந்து, சசிகலா தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், அவர்கள் பேச்சு வார்த்தையில் கொஞ்சம்கூட உடன்படவில்லை.. மேனேஜர் வந்தாகணும் என்பதில் பிடிவாதமாக இருந்துள்ளனர்.. அதற்கு பிறகு, சுங்கச்சாவடி மேலாளர் அமர்நாத்ரெட்டியை சம்பவ இடத்திற்கு போலீசார் வரவழைத்துள்ளனர்.. பேச்சுவார்த்தையிலும் ஈடுபடுத்தி உள்ளனர்.. அப்போது அவர் நடந்த சம்பவத்திற்கு "மன்னிப்பு" கேட்டுள்ளார்.

ஹைவேஸில் பாதிப்பு
அதுமட்டுமல்லாமல், இந்த பிரச்சனை குறித்து எழுத்துப்பூர்வமாக புகார் தந்தால், நடவடிக்கை எடுக்கிறோம் என்று போலீஸ் தரப்பில் சசிகலா தரப்பினரிடம் சொல்லப்பட்டுள்ளது.. அதற்கு சசிகலா தரப்பினரும், புகார் கொடுப்பதாக சொல்லி உள்ளனர்.. இதற்கு பிறகுதான் மறியல் கைவிடப்பட்டு, சசிகலா ஆதரவாளர்கள் கிளம்பி சென்றுள்ளனர். இதனால் சுமார் ஒன்றரை மணி நேரம் திருச்சியில் தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது...

விஐபி வழி
இது பற்றி சுங்கச்சாவடி தரப்பினர் சொல்லும்போது, "சசிகலா விஐபி செல்லும் வழியில் வராமல் நார்மலாக செல்லும், பொது வழியில் வந்தார். அதனால்தான் இதுபோன்ற பிரச்சனை ஏற்பட்டது" என்றார்கள். இதை சசிகலா ஆதரவாளர்களும் ஒப்புக் கொண்டனர்.. எப்போதுமே சசிகலா, விஐபி வழியை பயன்படுத்த மாட்டாராம். பொது வழியில் தான் செல்வாராம்.. 3வது தடவை சசிகலாவுக்கு இப்படி நடந்தது என்பதால்தான், விவகாரம் முற்றி விட்டது என்றும், இது தொடர்பாக முறைப்படி புகார் கொடுக்க உள்ளதாகவும் கூறியுள்ளனர்.

மேனேஜர்
ஆனால் இவ்வளவும் நடந்தபோது, சசிகலா காரை விட்டு ஒரு செகண்ட் கூட கீழே இறங்கவில்லை.. காருக்குள்ளேயே இருந்து போராட்டத்தில் ஈடுபட்டதுதான் ஹைலைட்டே.. அப்போது மணி நள்ளிரவு 1:15. இதற்கு பிறகுதான், சசிகலாவும், அவரது தரப்பினரும் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர்... அதுவும் அந்த மேனேஜர் நேரில் வந்து மன்னிப்பு கேட்ட பிறகுதான், பிரச்சனை முடிவுக்கு வந்துள்ளது.. அதான் சசிகலா..!
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications