இரவில் பரவிய வதந்தி.. உடைத்து நொறுக்கிய பிரேமலதா.. ஆனா.. விஜயகாந்த் போட்டோவில் இதை கவனிச்சீங்களா?
சென்னை: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தேமுதிக தலைவர் விஜயகாந்தின் புகைப்படத்தை அவரின் மனைவி, கட்சியின் பொருளாளர் பிரேமலதா வெளியிட்டு உள்ளார். இந்த புகைப்படம் விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.
தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அங்கே அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று இரவு அவரின் உடல்நிலை மோசமானதாக செய்திகள் வந்தன.

அவரின் உடல்நிலை பாதிக்கப்பட்டுவிட்டது.. மோசமாக்கிக்கொண்டு இருக்கிறது. அதனால் ரசிகர்கள், தொண்டர்கள் அங்கே குவிந்து வருகிறார்கள் என்று செய்திகள் வந்தன. தேமுதிக தலைவர் விஜயகாந்த் சிகிச்சை பெற்றுவரும் மியாட் மருத்துவமனைக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. தேமுதிக தலைவர் விஜயகாந்த் சிகிச்சை பெற்று வரும் மியாட் மருத்துவமனைக்கு சுமார் 10 போலீசார் பேரிகார்டுகளுடன் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டனர்.
அங்கே போலீஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட்டது மேலும் சந்தேகத்தை கொடுத்தது. இதையடுத்து நெட்டிசன்கள் பலரும் தங்கள் கற்பனைகளை, சோகமான போஸ்டுகளை போட தொடங்கினர். இது கடுமையான விவாதங்களை ஏற்படுத்தியது.
மருத்துவ சிகிச்சை: விஜயகாந்த் மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அங்கே அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவருக்கு அவ்வப்போது இப்படி உடல்நிலை மோசமானது வழக்கம். இதற்காக அவர் வெளிநாட்டில் சிகிச்சை பெறுவதும் வழக்கம். ஆனால் இந்த முறை அவரின் உடல்நிலை மிகவும் நலிவுற்றதாக கூறப்படுகிறது.
வருக்கு இதயத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்பு, ரத்த கொதிப்பு, மூச்சு விடுவதில் சிரமம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அவர் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். அவரின் உடலநிலை மோசமாகி வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
முக்கியமாக நுரையீரல் பாதிப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அது தொடர்பாக அவர் அனுமதிக்கப்பட்டு உள்ள மியாட் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், மியாட் மருத்துவமனையில் விஜயகாந்த் அவர்களின் உடல்நலத்தில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டது.
எனினும் கடந்த 24 மணி நேரத்தில் அவரது உடல்நிலை சீரான நிலையில் இல்லாததால், அவருக்கு நுரையீரல் சிகிச்சைக்கான உதவி தேவைப்படுகிறது. அவர் விரைவில் பூரண உடல்நலம் பெறுவார் என்று நம்புகிறோம். அவருக்கு இன்னும் 14 நாட்கள் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை தேவைப்படுகிறது, என்று கூறப்படுகிறது.

போட்டோ விவாதம்: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தேமுதிக தலைவர் விஜயகாந்தின் புகைப்படத்தை அவரின் மனைவி, கட்சியின் பொருளாளர் பிரேமலதா வெளியிட்டு உள்ளார். இந்த புகைப்படம் விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது. வதந்திகளை எல்லாம் உடைக்கும் வகையில், வதந்திகளுக்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இந்த புகைப்படத்தை விஜயகாந்த் வெளியிட்டு உள்ளார்.
அந்த புகைப்படத்தில் விஜயகாந்தின் தலை முடி பெருமளவில் கொட்டி உள்ளது. அதேபோல் கழுத்து பகுதியில் வீக்கம் போல பெரிதாக காணப்படுகிறது. பொதுவாக ஹெவி டோஸ் மருந்துகளை சாப்பிடும் போது இது போன்ற பக்க விளைவுகள் ஏற்படும். ஹெவி டோஸ் மருந்துகள் காரணமாக முடிகள் உதிர்வது , கழுத்தில், உடலில் , வயிற்றில் வீங்குவது போன்ற பக்க விளைவுகள் ஏற்படும்.
இது எல்லாம் ஒரு வலிமையான நபரை.. நோயாளி போன்று காட்டினாலும் சிகிச்சைக்கு பின்.. மருந்துகளை குறைக்க குறைக்க பக்க விளைவுகளும் குறையும். வீக்கங்களுக்கு குறையும். தற்போது அவரின் இந்த தோற்றமும் தற்காலிக மருந்தின் விளைவுகளாவே இருக்கும் என்று கருதப்படுகிறது.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications