இங்கிலாந்து கம்பெனிக்கு மாடல் வேணும்! ’அந்த’ போஸ் கொடுத்த இளம்பெண்! தொக்காய் சிக்கிய வக்கிர டைரக்டர்
சென்னை : இங்கிலாந்து நிறுவனத்துக்கு மாடலிங் பெண் தேவை என விளம்பரம் கொடுத்து அதன் மூலம் தொடர்பு கொண்ட பெண்ணின் ஆபாட படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவதாகக் கூறி 3 லட்சம் ரூபாய் பணம் கேட்டு மிரட்டிய இயக்குனரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர்.
சமூக வலைதளங்களின் ஆதிக்கம் பெருகிவிட்ட எந்த காலத்தில் இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் உள்ளிட்ட வலைதளங்களில் வீடியோக்களையும் போட்டோக்களையும் வெளியிட்டு பிரபலமாக துடிக்கும் இளம் பெண்கள் சிக்கலில் சிக்கிக் கொள்ளும் சம்பவங்கள் அரங்கேறி வருவது பெற்றோர்களையும் சமூக ஆர்வலர்கள் கவலையில் ஆழ்த்தியுள்ளது.
இன்ஸ்டாகிராமில் நான்கு வீடியோக்களை வெளியிட்டவுடன் சூப்பர், பிரமாதம், அருமை என கமெண்ட் செய்து அவர்களை தனது வலையில் வீழ்த்தி வாழ்க்கையை சீரழிக்கும் கொடூரர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

மாடலிங் ஆசை
அந்த வகையில் ஆன்லைனில் வந்த விளம்பரத்தை நம்பி தனது அந்தரங்கங்களை பகிர்ந்து கொண்ட பெண்ணிடம் பணம் கேட்டு மிரட்டிய குறும்பட இயக்குனர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. சென்னையைச் சேர்ந்த கல்லூரி மாணவியான இளம் பெண் ஒருவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து பல வீடியோக்களை வெளியிட்டு வந்திருக்கிறார். மேலும் மாடலிங் துறையில் சாதிக்க வேண்டும் என்பதும் அவரது எண்ணமாக இருந்திருக்கிறது.

வாட்ஸ் அப் விளம்பரம்
தொடர்ந்து மாடலிங் துறையில் வாய்ப்புகளைத் தேடிக் கொண்டிருந்தபோது கடந்த சில நாட்களுக்கு முன்பு அவரது வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரு விளம்பரம் வந்தது. அந்த விளம்பரத்தில் இங்கிலாந்து நாட்டில் பிரபல நிறுவனத்தில் நடிக்க மாடல் ஒருவர் தேவைப்படுவதாகவும் ஆர்வம் இருப்பவர்கள் இந்த எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தீக்ஷா ஜோதி என்பவருடைய பெயர் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஏற்கனவே மாடலிங் கனவில் இருந்த அந்த இளம் பெண் குறிப்பிட்ட அந்த என் மூலம் தீக்ஷா ஜோதி என்பவரை தொடர்பு கொண்டு இருக்கிறார்.

நிர்வாண மாடல்
இதை அடுத்து அந்த பெண்ணிடம் கலர் கலராக ரீல்விட்ட அந்த மர்ம நபர் தற்போது இங்கிலாந்து நிறுவனத்தின் மாடலிங் விளம்பரத்தில் நடித்தால் பல லட்சங்கள் சம்பாதிப்பதோடு உலக அளவில் பிரபலமாகலாம் என ஆசை வார்த்தை கூறியுள்ளார். மேலும் 'போல்ட் மாடலிங்' எனப்படும் அரை நிர்வாண மற்றும் நிர்வாண மாடல் தேவைப்படுவதாகவும் இதுகுறித்த சில புகைப்படங்களை தனக்கு அனுப்பி வைக்குமாறு கூறியிருக்கிறார்.

பணம் கேட்டு மிரட்டல்
இங்கிலாந்து மாடல் ஆசையில் அந்த நபர் கூறிய வார்த்தைகளை நம்பிய இளம் பெண் தனது அரை நிர்வாண மற்றும் முழு நிர்வாண புகைப்படங்களை அந்த நபருக்கு அனுப்பி இருக்கிறார். இந்த நிலையில் தான் சில நாட்களுக்குப் பிறகு அந்த இளம் பெண்ணை தொடர்பு கொண்ட தீக்ஷா ஜோதி என்ற பெயர் கொண்ட மர்ம நபர் தனக்கு மூன்று லட்சம் ரூபாய் பணம் தர வேண்டும் எனவும் இல்லையேல் நீ அனுப்பிய புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவேன் என கூறி மிரட்டி இருக்கிறார். இதை அடுத்துதான் ஒரு மோசடிப் பேர்வழியிடம் சிக்கி இருக்கிறோம் என்பதை உணர்ந்த அந்த பெண் இதுகுறித்து சென்னை மாநகர காவல் துறையில் புகார் அளித்தார்.

அதிரடி கைது
இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்திய போது அது தமிழகத்தைச் சேர்ந்தவருடைய எண் என்பது தெரிய வந்தது. அவரை பிடித்து விசாரித்த போது அந்த செல்போன் எண் தன்னிடம் இல்லை எனக் கூறியிருக்கிறார். இதை தொடர்ந்து செல்போன் சிக்னலை வைத்து விசாரணை நடத்திய போலீசார் திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த ரஞ்சித் என்பவனை கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

குறும்பட இயக்குனர்
இளம் பெண்ணுடன் இன்ஸ்டாகிராம் மூலம் ஏற்கனவே தொடர்பில் இருந்ததும் சில பிரச்சனைகளால் அந்த பெண் தன்னை பிளாக் செய்ததால் அவரை பழிவாங்க இப்படி திட்டம் தீட்டியதாக கூறியிருக்கிறார். சினிமா துறையில் இயக்குனர் கனவோடு சென்னைக்கு வந்த அவர் ஒரு சில குறும்படங்களை இயக்கியதும் செலவுக்கு பலம் இல்லாததால் தற்போது அந்த பெண்ணை வைத்து பணம் சம்பாதிக்க திட்டமிட்டதும் தெரியவந்தது. இதையடுத்து ரஞ்சித்தை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்துள்ளனர். மேலும் இளம் பெண்ணுக்கும் அறிவுரை வழங்கி உள்ளனர்.
-
சென்னை.. தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய "ஏகே 47.." விசாரணையில், யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு!












Click it and Unblock the Notifications