“ஜாக்கிரதை”.. வாரிசுக்கு முன்! வாரிசுக்கு பின்! விஜய்காக தெலுங்கு சினிமாவை எச்சரித்த லிங்குசாமி
சென்னை: நடிகர் விஜய் நடிக்கும் "வாரிசு" திரைப்படத்தை தெலுங்கில் வெளியிட அம்மாநிலத்தில் எதிர்ப்பு கிளம்பி இருப்பதற்கு இயக்குநர்கள் லிங்குசாமி ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.
பீஸ்ட் திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் முன்னணி தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கும் திரைப்படத்தில் நடித்து இருக்கிறார்.
பிரபல நடிகை ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடிக்கும் இந்த திரைப்படத்தில் நடிகர்கள் சரத்குமார், பிரகாஷ்ராஜ், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.

வாரிசு
தமன் இசையமைத்து இருக்கும் இப்படத்தின் முதல் சிங்கில் பாடலான ரஞ்சிதமே கடந்த சில நாட்களுக்கு முன் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. ஐதராபாத் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று உள்ளது. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் வாரிசு படம் பொங்கலை முன்னிட்டு உலகம் முழுவதும் வெளியாகி உள்ளது.

படத்துக்கு சிக்கல்
தெலுங்கு இயக்குநரான வம்சியால் இயக்கப்பட்டு, தெலுங்கு தயாரிப்பாளரான தில் ராஜால் உருவாக்கப்பட்டு இருக்கும் இப்படம் ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் வரசுடு என்ற பெயரில் வெளியாகும் நிலையில், அங்கு மகா சங்கராந்தியாக கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நேரடி தெலுங்கு படங்கள் மட்டுமே வெளியிட வேண்டும் என அம்மாநில தயாரிப்பாளர்கள் சங்கம் திரையரங்குகளுக்கு அறிவுறுத்தி உள்ளது.

சீமான் கண்டனம்
இதுதான் தற்போது பெரும் பிரச்சனையாக உருவெடுத்து இருக்கிறது. வாரிசு படக்குழுவினர் மற்றும் விஜய் ரசிகர்கள் தெலுங்கு தயாரிப்பாளர்கள் சங்கத்தின் இம்முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்கள். கடந்த சில நாட்களுக்கு முன்பாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானும் விஜய்க்கு ஆதரவாக கருத்து தெரிவித்து இருந்தார்.

லிங்குசாமி
இந்த நிலையில் திரைப்பட டீசர் வெளியீட்டு விழா ஒன்றில் கலந்துகொண்ட பிரபல இயக்குநர் லிங்குசாமி, "தமிழ் படத்தை ரிலீஸ் செய்யக்கூடாது என்று வார்த்தையால் சொல்ல முடியாத அளவுக்கு பிரச்சனையாகும். ஆந்திராவில் பொங்கலுக்கு வாரிசு படம் வெளியாகாவிட்டால், தமிழ்நாட்டில் தெலுங்கு சினிமா நிலை, வாரிசுக்கு முன், வாரிசுக்கு பின் என்ற நிலை உருவாகும்.

நாங்கள் நிற்போம்
பாகுபலி, ஆர்.ஆர்.ஆர். போன்ற படங்கள் தமிழ்நாட்டில் ஹிட் ஆகி உள்ளது. ஆந்திராவில் ஷங்கரின் பல படங்களில் வெற்றிபெற்ரு உள்ளன. குறுகிய எண்ணத்தோடு யாரும் இருந்தால் அதை மாற்ற வேண்டும். இது தெலுங்கு தயாரிப்பாளர் தயாரித்து உள்ள படம். இந்த சிரிய சலசலப்பு விரைவில் விலகும். இல்லாவிட்டால் அதற்கு தேவையானதை நாங்கள் செய்வோம்." என்றார்.
-
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
Hey Everybody! ‘முதல்வன்’ அர்ஜுனான தவெக சமஉக்கள்! கேமராவைக் கண்டு அலறும் ஆபீசர்ஸ்! தவெகவுக்கு தலைவலி -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன் -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
விஜய் கையில் எடுக்கப்போகும் 2 மெகா திட்டங்கள்.. ஆதவ் அர்ஜுனா சர்ப்ரைஸ் அப்டேட் -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்? -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
இறுதிச் சடங்குகளை மேற்கொண்ட அஜித் குமாரின் சகோதரர்.. மோகினி மணி உடல் பெசன்ட் நகர் மயானத்தில் தகனம்!











Click it and Unblock the Notifications