கடைசியில் மாறிய க்ளைமேக்ஸ்! குதிரை காட்சியில் கீழே விழுந்த விஜய்! விக்ரமன் சொன்ன ‘பூவே உனக்காக’ சீக்ரெட்
சென்னை: 'பூவே உனக்காக' படத்திற்காக 2 க்ளைமேக்ஸ் தயாரிப்பாளருக்குத் தெரியாமலே எடுத்தோம் என்று இயக்குநர் விக்ரமன் தெரிவித்திருக்கிறார்.
நடிகர் விஜய்க்கு மிகப்பெரிய ஹிட் கொடுத்தவர் இயக்குநர் விக்கிரமன். கொடுத்த திரைப்படம். இவரது இயக்கத்தில் விஜய் நடித்திருந்த 'பூவே உனக்காக' பெரிய அளவில் அடி.

'பூவே உனக்காக' படத்தில் விஜய் பேசிய 'காதல் ஒருதடவை பிஞ்சிவிட்டால் ஒட்டவைக்க முடியாது' என்ற அதே டயலாக்கை இப்போது வந்த 'வாரிசு' படத்தில் கூட பேசி இருப்பார்.
அந்தளவுக்குப் பலரது மனதில் அழுத்தமாக ஒட்டிக்கொண்ட திரைப்படம் இது. இந்தளவுக்கு குடும்ப படங்களை எடுப்பதில் பெரிய கில்லாடி எனப் புகழப்பட்டவர் விக்ரமன். இப்போது அவரது மகன், விஜய்கனிஷ்கா கதாநாயகராக அறிமுகமாகிறார்.
மகன் நடிக்க உள்ள 'ஹிட் லிஸ்ட்' படத்தின் கதையை ஒப்புக் கொள்வதற்கு முன்னால் நண்பர்களைப் பலரைக் கேட்கச் சொல்லி இருக்கிறார். அதன் பின்னர்தான் சம்மதித்திருக்கிறார்.
மகனை ஹீரோவாக அறிமுகமாவதை அடுத்து விக்ரமன், தனது இயக்கத்தில் நடித்த அனைத்து நடிகர்களிடமும் மகன் விஜய் கனிஷ்காவை அழைத்துக் கொண்டு சென்று அறிமுகம் செய்து வைத்துள்ளார்.
ரஜினி, இவரது மகனின் நடிப்பைப் பார்த்துவிட்டு 'ஆக்ஷன் காட்சிகள் அற்புதமாக உள்ளது. சின்ன பட்ஜெட்டில் இந்தளவுக்குக் காட்சிகளை எடுத்திருப்பது ஆச்சரியம்' என்று சொன்னதாகச் சொல்கிறார் விஜய்கனிஷ்கா.

"விஜய் என் மகனைப் பார்த்தவுடனேயே 'ரொம்ப ஸ்மார்ட்டா இருக்கீங்க பிரதர்' என்று பாராட்டினார். இந்த ஒரு வார்த்தையைத் திரும்பத் திரும்பச் சொன்னார். அவருக்குச் சின்ன டீசர் போட்டுக் காட்டினோம். அவர், 'பையன் நன்றாக நடித்திருக்கிறார்' என்றும் சொன்னார்" என்கிறார் இயக்குநர் விக்ரமன்.
தொடர்ந்து பேசிய அவர், "இப்போது ரீ ரிலீஸ் கலாச்சாரம் தலைதூக்கி இருக்கிறது. இந்த நேரத்தில் நான் விஜய்யை வைத்து இயக்கிய 'பூவே உனக்காக' ரீ ரிலிஸ் செய்யலாம்.
அதே போல 'சூரிய வம்சம்' கூடச் செய்யலாம். ஆனால், தயாரிப்பாளர் செளத்ரியிடம் சொன்னேன். அவர், 'அந்த நெகடிவ் எல்லாம் எங்கே இருக்கிறது என்றே தெரியவில்லை. தேடிப் பார்க்கிறேன். கிடைத்தால் ரீ ரிலீஸ் செய்யலாம்' என்று சொல்லி இருக்கிறார்.
'பூவே உனக்காக' படத்திற்கு மலை உச்சியில் விஜய்யை வைத்து ஒரு பாடல் காட்சி எடுத்தோம். விஜய் அதில் குதிரையில் வருவதைப் போன்ற காட்சி. அப்படி அவர் குதிரையிலிருந்து வரும்போது விஜய் கீழே தவறி விழுந்துவிட்டார். உடனே நான் இந்தக் காட்சியே வேண்டாம் என்று முடிவெடுத்து விட்டேன்.

ஆனால், விஜய் விடவே இல்லை. 'நான் நடித்துக் காட்டுகிறேன்' என்று அடம்பிடித்தார். 'உங்களை என்னை நம்பி விட்டுள்ளார்கள். உங்கள் அப்பா, அம்மாவுக்கு நான் பதில் சொல்ல முடியாது' என மறுத்தேன்.
விடாப்பிடியாக இருந்து அந்தக் காட்சியில் நடித்து கொடுத்தார். விஜய் குதிரை பயிற்சி எல்லாம் கற்றுக்கொண்டுதான் சினிமாவுக்கு வந்தார். படத்தில் 'சிக்லெட் சிக்லெட்' என்று ஒரு பாடல் இருக்கும். அந்தக் காட்சி அதில் வருவதை நீங்கள் பார்க்க முடியும்.
இதை ஏன் சொல்கிறேன் என்றால், அப்போதே அவர் சினிமாவில் அந்தளவுக்கு ஆர்வமாக இருந்தார்.
'பூவே உனக்காக' படத்திற்காக இரண்டு க்ளமேக்ஸ் எடுத்தோம். ஒன்று மகிழ்ச்சியாக முடிவதைப் போல எடுத்தோம். மற்றொன்று இப்போது படத்தில் உள்ள க்ளைமேக்ஸ். எனக்குப் படத்தை மகிழ்ச்சியாக முடிப்பது பிடிக்கவில்லை. கட்சியில் ஒரு பாரம் இருக்க வேண்டும் என நினைத்தேன். அதனால் முதல் க்ளைமேக்ஸை படத்தில் வைக்கவில்லை.
ஆனால், 2வது க்ளைமேஸ் வேண்டாம் என்றார் தயாரிப்பாளர் செளத்ரி. அவருக்குத் தெரியாமலே அதை ஷூட் செய்தேன். அதுவும் ஒரு மணி நேரத்திற்கு அவசர அவசரமாக எடுத்தேன்.
அதைக் கடைசிவரை செளத்ரி ஏற்கவே இல்லை. பலருக்கும் போட்டுக்காட்டிய பிறகு க்ளைமேஸ் அபாரம் எனக் கருத்து வந்தது. அதன்பின்னர் தான் வெளியிடச் சம்மதித்தார் " என்கிறார் விக்ரமன்.
அடுத்ததாகப் பேசிய அவரது மகன் விஜய், "இந்தப் படத்தின் ஷூட்டிங் என்னவோ 40 நாட்கள்தான் நடந்தது. ஆனால், படம் வெளியாக நிறைய நாட்கள் ஆகிவிட்டது. அப்போது எல்லாம் மன அழுத்தத்திலிருந்தேன். படம் எப்போது வரும் என்ற தவிப்பு இருந்தது.
இந்தக் காலகட்டத்தில் ஒன்றைப் புரிந்துகொண்டேன். பாராட்டினாலும் மண்டையில் ஏற்றிக் கொள்ளக் கூடாது. யாராவது விமர்சித்தாலும் மண்டையில் ஏற்றிக் கொள்ளக் கூடாது. இரண்டையும் சம தூரத்தில் நின்று பார்க்கக் கற்றுக்கொள்ள வேண்டும்' என்பதைப் புரிந்துகொண்டேன்.
விக்ரமன் படங்களில் அதிகம் பேசப்பட்டது படத்தின் இசை. படத்தில் உள்ள எல்லா பாடல்களும் ஹிட் என்பது முன்கூடியே உறுதி செய்யும் அளவுக்கு விக்ரமன் - எஸ்.ஏ.ராஜ்குமார் கூட்டணி அந்தக் காலத்திலிருந்தது.
இந்த வெற்றி எப்படி சாத்தியம் என்று கேட்டால், அதற்கு மிக இயல்பாக ஒரு விசயத்தைச் சொல்கிறார் விக்ரமன். 'நாங்கள் பாட்டுக்கு ட்யூன் போட எந்த நாட்டுக்கும் போனதே இல்லை. ஆபீஸ் ரூமில் உட்கார்ந்து அங்கேயேதான் ட்யூன் போட்டிருக்கிறோம்' என்கிறார்.
-
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
தன்னை கேலி செய்தாலும்.. கர்நாடகா முதல்வரானதும் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து கூறிய விஜய் -
புதிய டிஜிபி-யுடன் விஜய் தலைமைச் செயலக சேம்பரில் 'ஒரு மணிநேர' க்ளோஸ் டோர் மீட்டிங்.. 3 முக்கிய அசைன்மென்ட்! -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
மகள் பற்றி விஜய் சந்தோஷமாக பேசினாரு.. அவ்ளோ மகிழ்ச்சி அவருக்கு! சர்ச்சைகளுக்கு மத்தியில் நடிகை ஓபன் -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
கேள்வியே கேட்க கூடாதா.. 6 மாசத்துல என்ன நடக்குதுனு பாருங்க.. விஜயை சாடிய அனிதா ராதாகிருஷ்ணன் -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி












Click it and Unblock the Notifications