படுத்த படுக்கையான மனைவிக்கு சிகிச்சை! மருத்துவர் குழுவுடன் வந்த அமைச்சர் மா.சு.! நெகிழ்ந்த விக்ரமன்
சென்னை: என் மனைவிக்கு சிறப்பான சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி என இயக்குநர் விக்ரமன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: எனது மனைவி 5 ஆண்டுகளாக உடல்நிலை சரியில்லாமல் படுத்த படுக்கையாக சிகிச்சை பெற்று வருகிறார். அவரது முதுகில் செய்யப்பட்ட தவறான அறுவை சிகிச்சையால் அவரால் நடிக்க முடியாது.

படுத்த படுக்கையாகதான் இருந்தார். இந்த நிலையை விளக்கி நான் பேட்டி கொடுத்திருந்தேன். அதன் எதிரொலியாக மருத்துவத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் வீட்டுக்கு வந்து நேரில் பார்த்தார். உடன் டாக்டர் பட்டாளத்தையே அழைத்து வந்திருக்கிறார்.
என் மனைவியை பரிசோதித்து பார்த்தனர். பின்னர் சிறப்பான சிகிச்சை அளித்து குணமடையச் செய்கிறோம் என உறுதியளித்தனர். இந்த நேரத்தில் முதல்வருக்கும் அமைச்சருக்கும் எனது நன்றிகள். என்னுடைய மனைவி குணமாக வேண்டும் , அதுதான் எனக்கு முக்கியம் என உருக்கத்துடன் தெரிவித்தார். வெள்ளி விழா திரைப்படங்களை கொடுத்தவர் இயக்குநர் விக்ரமன்.

இவர் ஆந்திராவை பூர்வீகமாக கொண்ட ஜெயப்பிரியாவை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். அவர் திரைப்படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். ஜெயப்பிரியா குச்சிப்புடி நடன கலைஞர் ஆவார். இதுவரை 1000 மேடைகளில் தொடர்ந்து நடனம் ஆடியுள்ளார். இதனால் அவருக்கு 5 ஆண்டுகளுக்கு முன்னர் உடல் வலி ஏற்பட்டது. உடனே பதறி போன விக்ரமன் அப்போது இயக்குநர் சங்கத் தலைவராக இருந்ததால் வடபழனியில் உள்ள பிரபல மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றார்.

அங்கு முதுகு பகுதியில் பயாப்சி செய்தனர். பிறகு ஒரு அறுவை சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டது. சுமார் 2 மணி நேரம் மேற்கொள்ளப்பட்ட அறுவை சிகிச்சையால் அவரால் கால் விரல்களை கூட அசைக்க முடியவில்லை. இதுகுறித்து கேட்ட போது ஆபரேஷன் செய்ததால் அப்படியிருக்கும் . போக போக சரியாகிவிடும் என்றனராம். ஆனால் 5 ஆண்டுகளாக ஜெயப்பிரியா இதே நிலையில்தான் இருக்கிறாராம்.
மேலும் தனது சொத்துகளை விற்று மனைவிக்கு விக்ரமன் சிகிச்சை அளித்து வருகிறார். மாதம் சிகிச்சைக்கு 5 லட்சம் செலவாகிறது. தற்போது கூட குற்றாலத்தில் உள்ள தோட்டத்தை விற்க பேசி வருகிறாராம். இத்தனைக்கு பிறகு தங்களுக்கு தவறான சிகிச்சை அளித்த மருத்துவமனை ஒரு உதவியையும் செய்யவில்லை என கூறுகிறார் ஜெயப்பிரியா.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications