முதுகில் ஆபரேஷன்.. கட் ஆன நரம்பு.. 5 ஆண்டுகளாக படுத்த படுக்கையான இயக்குநர் விக்ரமன் மனைவி
சென்னை: மருத்துவமனையின் அலட்சியம் காரணமாக இயக்குநர் விக்ரமனின் மனைவி 5 ஆண்டுகளாக படுத்தபடுக்கையாகவே இருக்கிறார். அவரை விக்ரமன் கண்ணுக்குள் வைத்து கவனித்து வருகிறார்.
புது வசந்தம், பூவே உனக்காக , சூர்யவம்சம், உன்னிடத்தில் என்னை கொடுத்தேன், வானத்தை போல , பிரியமான தோழி உள்ளிட்ட படங்களை இயக்கியவர் இயக்குநர் விக்ரமன். பெரும்பாலும் குடும்ப கதைகளையே இவர் எடுப்பதுண்டு. இவரது கதையில் ஆழமான மெசேஜ்களும் இருக்கும்.

இவருடைய மனைவி ஜெயப்பிரியா. இவர் குச்சிப்புடி நடன கலைஞராக இருந்தார். 1000 மேடைகளில் அபிநயத்துடன் நடனம் ஆடியுள்ளார். ஆனால் தற்போது 5 ஆண்டுகளாக இவர் படுத்தப்படுக்கையாக இருந்து வருகிறார். இவருக்கு திடீரென முதுகு வலி பிரச்சினை வந்தது. இதனால் பரிசோதனை செய்ய சென்ற போது புற்றுநோயாக இருக்கலாம் என கருதி அவருக்கு பயாப்சி செய்தார்கள்.
பின்னர் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் அதற்கு அரை மணி நேரம் ஆகும் என சொன்னார்களாம். ஆனால் மூன்றரை மணி நேரமாக அறுவை சிகிச்சை செய்தனர். இதையடுத்து ஜெயப்பிரியாவால் கால் விரலை கூட அசைக்க முடியவில்லை. இதையடுத்து அவரை டிஸ்சார்ஜ் செய்த மருத்துவமனை நிர்வாகம் பிசியோதெரபி செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தினார்களாம்.
மருத்துவமனையில் தவறான ஆபரேஷன் செய்து விட்டார்கள். எல்லாவிதமான சிகிச்சைகளையும் கொடுத்தும் அவரது கால்கள் சரியாகவில்லை, இதனால் அவருடன் எப்போதும் இரு நர்ஸ்கள் இருந்து கொண்டே இருப்பார்களாம். மனைவியின் இந்த நிலையை கண்டு கணவர் விக்ரமன் மிகுந்த மன வேதனையில் இருந்து வருகிறார்.
மனைவியை தனியே விட்டுவிட்டு எங்கும் செல்ல முடியாத நிலையில் விக்ரமன் இருக்கிறார். சூர்யவம்சம் 2 படத்திற்கான அழைப்பு வந்த போது கூட மனைவியை தனியாக விட்டுச் செல்ல முடியாது என்பதால் அவர் போக மறுத்துவிட்டார். ஜெயப்பிரியாவின் கால்கள் சரியாக அவர் நடக்கும் வரை பேனாவை கையில் தொட மாட்டேன் என்ற வைராக்கியத்துடன் விக்ரமன் இருக்கிறாராம்.
இதுவரை சம்பாதித்த பணம் முழுவதையும் மருத்துவத்திற்கே செலவு செய்துவிட்டாராம். சொத்துக்களை அனைத்தையும் விற்று அவரை கவனித்து வருகிறார். மனைவி வருத்தப்பட்டால் விக்ரமன் மனம் உடைந்து கண் கலங்குகிறாராம். இதனால் விக்ரமனின் மனைவி தன்னை தைரியமானவராகவே வைத்துக் கொள்கிறாராம்.
மருத்துவமனையிலிருந்து ஜெயப்பிரியாவுக்கு எந்த உதவியும் செய்வதில்லையாம். அவருடைய நம்பரை கூட பிளாக் செய்துவிட்டார்களாம். மருத்துவமனையில் சேரும் போது நன்றாக இருந்த நிலையில் அவர் உடல்நலக் குறைவுடன் மருத்துவமனையில் சேர்ந்ததாகவே டிஸ்சார்ஜ் சம்மரியில் எழுதியுள்ளனராம். இந்த பேட்டியை ஜெயப்பிரியா தினமலர் யூடியூப்புக்கு கொடுத்துள்ளார்.
-
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்! -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே












Click it and Unblock the Notifications