சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இன்றைக்குள் ஆசிரியர்கள் பணிக்கு திரும்ப வேண்டும்.. இல்லாவிட்டால் நடவடிக்கை பாயும்- பள்ளி கல்வி துறை

Google Oneindia Tamil News

Recommended Video

    Jactto-Geo Protest: ஜாக்டோ-ஜியோ வேலைநிறுத்தம் மற்றும் ஆர்ப்பாட்டம்- வீடியோ

    சென்னை: ஜாக்டோ ஜியோ அமைப்பினர் போராட்டத்தை கைவிட்டுவிட்டு இன்றைக்குள் பணிக்கு திரும்ப வேண்டும் என்றும் இல்லாவிட்டால் கடும் நடவடிக்கை பாயும் என பள்ளிக் கல்வித் துறை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்துசெய்து, 2004-இல் ரத்து செய்யப்பட்ட பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். 21 மாத ஊதிய மாற்ற நிலுவைத்தொகையை உடனே வழங்க வேண்டும். இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்பட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் 22-ஆம் தேதி முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    Directorate of School Education warns that all teachers should go back to their work

    7-ஆவது நாளாக போராட்டம் நடத்தி வருவதால் கல்வியும் அரசு பணிகளும் வெகுவாக பாதிப்படைந்துள்ளன. இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் உடனே பணிக்கு திரும்ப வேண்டும் என அமைச்சர் ஜெயக்குமார் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பரபரப்பு அறிக்கையை வெளியிட்டார்.

    தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை போராட்டம் தொடரும் என ஆசிரியர்கள் தெரிவித்தனர். இந்த நிலையில் இன்றுக்குள் திரும்ப வேண்டும் என்றும் அவ்வாறு திரும்பாவிட்டால் அவர்களது பணியிடம் காலியானதாக அறிவிக்கப்படும்.

    அந்த இடத்தில் அவர்களுக்கு பதில் தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படுவர். அவ்வாறு பணியில் சேர வரும் ஆசிரியர்களை யாரேனும் தடுத்தால் அவர்கள் மீது நடவடிக்கை பாயும் என பள்ளிக் கல்வித் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

    English summary
    Directorate of School Education , Chennai warns all the teachers to join back to their works. Otherwise severe action will be taken.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X