அதிமுக போலி பொதுக்குழு கலைப்பு..தேர்தல் மூலம் தேர்வு செய்வோம்.. புதுவேகத்தில் கிளம்பும் ஓபிஎஸ்
சென்னை: அதிமுகவின் போலி பொதுக்குழு கலைக்கப்படும் என்றும் புதிய பொதுக் குழு தேர்ந்தெடுக்கப்படும் வகையில், உண்மையான கழக உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகள் விரைவில் வழங்கப்படும் என்றும் ஓ பன்னீர் செல்வம் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதிமுகவில் தலைமைப் பதவியை யார் கைப்பற்றுவது என்ற போட்டியில் எடப்பாடி பழனிசாமியின் கை ஓங்கியது. தேர்தல் ஆணையமும் அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை அங்கீகரித்ததால் அதிமுக முழுமையாக அவரது கட்டுப்பாட்டிற்குள் சென்றுள்ளது.

அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச்செயலாளர் தேர்தலுக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்ற டிவிஷன் பெஞ்சில் ஓ பன்னீர் செல்வம் செய்த மேல் முறையீட்டு மனு மீதான விசாரணை நிலுவையில் உள்ளது. இந்த உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பையே பெரிதும் ஓபிஎஸ் தரப்பு எதிர்பார்த்து வருகிறது. அதேவேளையில் மறுபக்கம் திருச்சியில் முப்பெரும் விழா மாநாடு நடத்திய ஓபிஎஸ், எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அடுத்தடுத்து காய்களை நகர்த்தி வருகிறது.
அடுத்து கொங்கு மண்டலத்திலும் ஒரு மாநாடு நடத்த ஒபிஎஸ் தரப்பு ஆயத்தமாகி வருவதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில், அதிமுக போலி பொதுக்குழுவை கலைப்பதாக ஒரு அறிவிப்பை வெளியிட்டு அதிமுக வட்டாரத்தை அதிரவைத்து இருக்கிறார் ஓபிஎஸ். இது தொடர்பாக ஓ பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
அதிமுக பொதுச் செயலாளர் அடிப்படை உறுப்பினர்களால்தான் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்ற எம்.ஜி.ஆர். அவர்கள் வகுத்த அடிப்படை விதிக்கு முற்றிலும் முரணாகவும், உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப் பெற்ற ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வத்தை அப்பதவியிலிருந்து இயற்கை நியதிக்கு புறம்பாக நீக்கியும்; கழகத்தின் நிரந்தரப் பொதுச் செயலாளர் ஜெயலலிதா அவர்கள்தான் என்ற விதியை மாற்றியும்;
அடிப்படை உறுப்பினர்கள் யார் வேண்டுமானாலும் பொதுச் செயலாளராக வர முடியும் என்கின்ற அடிப்படை விதியை மாற்றி 10 மாவட்டக் கழகச் செயலாளர்கள் முன்மொழிய வேண்டும், 10 மாவட்டக் கழகச் செயலாளர்கள் வழிமொழிய வேண்டும், ஐந்து ஆண்டுகள் தலைமைக் கழக நிர்வாகியாக பணியாற்றி இருக்க வேண்டும் என்ற நிபந்தனைகளை விதித்து அடிப்படை தொண்டர்களின் உரிமையை பறித்து,
அதிமுக சட்டதிட்ட விதிகளின் அடிப்படைக்கு நேர் விரோதமாக செயல்பட்டும் வந்த, நியமிக்கப்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட தற்போதைய போலி பொதுக் குழு அறவே கலைக்கப்பட வேண்டும் என்றும் உண்மையான தேர்ந்தெடுக்கப் பெற்ற உறுப்பினர்களைக் கொண்ட பொதுக் குழு அமைக்கக்கப்பட வேண்டும் என்றும் 24-04-2023 அன்று திருச்சியில் நடைபெற்ற அடிப்படை உறுப்பினர்களின் மாநாட்டில் ஓ பன்னீர் செல்வத்திற்கு பரிந்துரை செய்யப்பட்டது.
அடிப்படை உறுப்பினர்களின் பரிந்துரையை ஏற்று, ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில், நியமனம் செய்யப்பட்ட போலிப் பொதுக் குழு இன்று முதல் (01-05-2023) கலைக்கப்படுகிறது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். உறுப்பினர்கள் யாரும் அந்த போலி பொதுக் குழு உறுப்பினர்களோடு தொடர்பு கொள்ளக் கூடாது.
புதிய பொதுக் குழு தேர்ந்தெடுக்கப்படும் வகையில், உண்மையான உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகள் விரைவில் வழங்கப்படும் என்பதையும், அதன்பிறகு முறையான, நேர்மையான தேர்தல்கள்மூலம் பொதுக் குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications