தீபாவளிக்கு பட்டாசு வெடிக்கிறீங்களா.. சென்னைவாசிகளே.. மேயர் பிரியா சொன்னதை நோட் பண்ணுங்க
சென்னை: தீபாவளி பண்டிகை நாட்களில் பட்டாசு வெடிப்பவர்கள் அந்த கழிவு குப்பைகளை தனியே சேகரித்து தூய்மை பணியாளர்களிடம் வழங்க வேண்டும் என்று சென்னை மேயர் பிரியா தெரிவித்துள்ளார்.
தீபாவளி பண்டிகை ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட உள்ளது. சொந்த ஊர் செல்பவர்கள் சென்னையில் இருந்து இன்று முதல் புறப்பட தயாராகி விடுவார்கள். சென்னையில் வசிப்பவர்கள் வழக்கமான உற்சாகத்தோடு பட்டாசுகளை வெடித்து பண்டிகை கொண்டாடுவார்கள்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சேகரமாகும் பட்டாசுக் கழிவுகளை தனியாக சேகரித்து அப்புறப்படுத்துதல் மற்றும் தீ விபத்து பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மேயர் பிரியா ராஜன் தலைமையில் நேற்று ரிப்பன் கட்டட அலுவலகத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் துணை மேயர் மகேஷ்குமார், மாநகராட்சி ஆணையாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் பேசிய மேயர் பிரியா ராஜன், "தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சேகரமாகும் பட்டாசுக் கழிவுகளை தனியாக அதற்காக வைக்கப்பட்டுள்ள பைகளில் சேகரித்து, முறையாக பதப்படுத்தும் நிலையங்களுக்கு கொண்டு செல்ல வேண்டும்.
இதற்காக ஒவ்வொரு மண்டலத்திற்கும் கனரக வாகனங்களை இப்பணிகளுக்காக ஒதுக்கி பணிகளை மேற்கொள்ள வேண்டும். தினந்தோறும் சேகரமாகும் பட்டாசுக் கழிவுகள் அன்றைய தினமே சாலை மற்றும் தெருக்களில் இருந்து அப்புறப்படுத்தி, பதப்படுத்தும் நிலையங்களுக்கு கொண்டு செல்ல வேண்டும். அதன் பின்னர் இந்தக் கழிவுகள் முறையாக கும்மிடிப்பூண்டியில் உள்ள நிலையத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று கூறினார்.
குப்பை கொட்டும் வளாகங்களில் தீ விபத்து ஏற்படாமல் தடுத்திட தீயணைப்புத் துறையின் மூலம் தகுந்த பாதுகாப்பு வாகனங்களை தயார் நிலையில் வைத்து உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திட வேண்டும். பொதுமக்கள் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, அரசின் வழிகாட்டுதலின்படி குறிப்பிட்ட நேரத்தில் தகுந்த பாதுகாப்புடன் பட்டாசுகளை வெடித்திட வேண்டும். பட்டாசுக் கழிவுகளை தனியே சேகரித்து, அதனை தூய்மைப் பணியாளர்களிடம் வழங்கி மாநகராட்சிக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் சென்னை மேயர் பிரியா கேட்டுக்கொண்டுள்ளார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications