"சிறை" படத்தில் சமூக நீதியை காத்த நீதியரசர் ரத்தினவேல் பாண்டியனுக்கு கவுரவம்.. யார் இவர்! பின்னணி
சென்னை: சிறை படத்தைப் பார்த்த திராவிடக் கழகத்தைச் சேர்ந்த மதிவதனி, இளம் தலைமுறையினர் அனைவரும் நிச்சயம் பார்க்க வேண்டிய படம் எனக் குறிப்பிட்டார். மேலும், முன்னாள் நீதியரசர் நீதிபதி ரத்தினவேல் பாண்டியனின் பெயரை மிக சரியாக இந்தப் படத்தில் பயன்படுத்தியுள்ளதாகவும் அவர் பாராட்டினார்.
விக்ரம் பிரபு நடிப்பில் சுரேஷ் ராஜகுமாரி வெளியாகியுள்ள சிறை படத்திற்கு மிகப் பெரியளவில் வரவேற்பு கிடைத்துள்ளது. விமர்சன ரீதியாகவும் பாராட்டுகள் குவிந்து வருகிறது. இதற்கிடையே இப்படத்தின் சிறப்புக் காட்சி திங்கள்கிழமை திரையிடப்பட்டது. இதைச் சமூக செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள் கண்டனர்.

சிறை
இந்தப் படத்தைப் பார்த்த பிறகு திராவிடக் கழகத்தைச் சேர்ந்த மதிவதனி பேசுகையில், "படம் என்றாலே 2.30 மணி நேரம் உட்கார்ந்து இருக்கணும்.. அந்தச் சத்தம் மற்றும் காட்சிகளுக்குப் பயந்து கொண்டு தியேட்டர் பக்கமே வராத என்னைப் போன்ற இளைஞர்கள் இருந்தீர்கள் என்றால்.. நிச்சயமாக நீங்கள் இந்தப் படத்தை பார்க்கவேண்டும். இந்தப் படத்தில் நிறைய இடத்தில் சமூகத்தினுடைய குறியீடுகளைக் காட்டியுள்ளனர். குறிப்பாக நம் தலைமுறைக்கு மறைக்கப்பட்ட பெயர்களைத் திரும்ப எடுத்துள்ளனர்.
ரத்தினவேல் பாண்டியன்
முன்னாள் நீதியரசர் நீதிபதி ரத்தினவேல் பாண்டியனின் பெயரை எந்த இடத்தில் பயன்படுத்த வேண்டுமோ.. அந்த இடத்தில் ரொம்ப சரியாகப் பயன்படுத்தி உள்ளனர். ஒரு பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பட்டியலின சமூகங்களில் இருந் அதிகாரத்திற்கு வரக்கூடியவர்களுக்குத் தான் எளிய மனிதர்களைப் பற்றிய புரிதல் இருக்கும். ஆண்டாண்டு காலமா இருக்கக் கூடியவர்களைத் தாண்டி, மக்களிலிருந்து ஒருவர் அதிகாரத்துக்கு வரும்போது அவர்கள் சிந்தனை எப்படி இருக்கும் என்பதை இந்தப் படத்தில் காட்டியுள்ளனர்.
ரொம்ப நுணுக்கமாகவும் நுட்பமாகவும் பெயர்கள் எல்லாமே தேர்வு செய்துள்ளனர். அதிகாரத்திற்கு வரக் கூடியவர்கள் முடிந்தளவு எளியவர்கள் பக்கம் நிற்க வேண்டும் என்பதைச் சொல்லி இருக்கிறார்கள். குறிப்பாக இஸ்லாமியர் பெயர் என்று வந்தாலே.. இந்தச் சமூகம் அவர்களை என்னவாக பார்க்கிறது! அதுவும் கடந்த 10 முதல் 15 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் கூட இஸ்லாமியர்கள் மீதான பார்வையைக் குறிப்பிட்ட சமூகத்தினர் எப்படி மாற்றியுள்ளனர் என்பதை மிகத் தெளிவாகப் பதிவு செய்துள்ளனர்.
இஸ்லாமிய சிறைக் கைதிகள்
ஒரு பக்கம் மட்டும் கேட்டு எழுதப்படக்கூடிய தீர்ப்புகளோ அல்லது எந்தப் பக்கமுமே கேட்காமல் விசாரணைக் கைதியாகவே இருப்போர் பற்றி, அதுவும் அவர் இஸ்லாமியரா இருந்தால், அவர்கள் நிலை என்னவாக இருக்கும் என்பதைச் சொல்லி இருக்கிறார். எல்லா வகையிலும் சமூக கண்ணோட்டத்தோடு இன்றைய தலைமுறைக்குத் தேவையான ஒன்றை.. 10 புத்தகம் படித்துத் தெரிந்து கொள்வதை இரண்டு மணி நேரத்தில் சொல்லி இருக்கிறார்கள்" என்றார்.
யார் இந்த ரத்தினவேல் பாண்டியன்
திருநெல்வேலி மாவட்டத்தின் திருப்புடைமருதூர் பிறந்தவர் ரத்தினவேல் பாண்டியன். சட்டம் படித்து முதலில் வழக்கறிஞராக இருந்த இவர், 1971ல் சென்னை உயர் நீதிமன்றத்தின் அரசு வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார். அதன் பிறகு சென்னை உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாகப் பதவி உயர்வைப் பெற்றார். சென்னை ஐகோர்ட் (பொறுப்பு) தலைமை நீதிபதியாகவும் இருந்துள்ள ரத்தினவேல் பாண்டியன், 1988ல் உச்ச நீதிமன்ற நீதிபதியாகவும் பதவியேற்றார்.
இவர் நீதிபதியாக இருந்தபோது பல வழக்குகளில் மிக முக்கியமான தீர்ப்புகளை வழங்கியுள்ளார். சட்டப்பிரிவு 356ஐ பயன்படுத்தி கர்நாடகாவில் இருந்த எஸ்ஆர் பொம்மை அரசு கலைக்கப்பட்டதற்கு எதிரான வழக்கை விசாரித்த ஒன்பது நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்பு அமர்வில் ரத்தினவேல் பாண்டியன் இடம்பெற்று இருந்தார். மத்திய அரசு தனிச்சையாக மாநில அரசுகளைக் கலைப்பதற்கு எதிராகத் தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்தத் தீர்ப்பிற்குப் பிறகு, மத்தியில் உள்ள ஆளும் கட்சிகள் தங்களுக்குப் பிடிக்காத மாநில அரசுகளைத் தன்னிச்சையாகக் கலைப்பது பெருமளவு குறைந்தது.
இட ஒதுக்கீடு வழக்கு
அதேபோல இந்திரா சாஹினி வழக்கிலும் மண்டல் கமிஷன் பரிந்துரை மூலம் செயல்படுத்தப்பட்ட இடஒதுக்கீட்டை ஆதரித்துத் தீர்ப்பு அளித்த சுப்ரீம் கோர்ட் அரசியலமைப்பு அமர்விலும் ரத்தினவேல் பாண்டியம் இடம்பெற்று இருந்தார். அப்போது அவர் தனது தீர்ப்பில், "சமூகத்தின் எதார்த்த சூழல்கள் எப்போது உந்துகிறதோ.. அப்போது மரபுகளின்படி நீதித்துறை வாய்மூடி இருப்பதை விடுத்து நீதிபதிகள் வெளிப்படையாகப் பேசியே ஆகவேண்டும்.. இதன் காரணமாகவே உச்ச நீதிமன்றத்தில் இருந்து இட ஒதுக்கீட்டிற்காக எனது தீர்ப்பு மூலமாக நான் பேசுகிறேன்" என்று தனது தீர்ப்பில் குறிப்பிட்டார்.
-
வேட்புமனு தாக்கல் செய்ய.. 4 நாட்கள்தான்! அதிரடியாக அறிவித்த தேர்தல் ஆணையம்! -
மழையெல்லாம் ஓவர்.. இனி வறண்ட வானிலைதான்! உஷாரா இருங்க மக்களே! வெதர் அப்டேட்! -
AMMK: அமமுக போட்டியிடும் 11 தொகுதியின் உத்தேச பட்டியலை கொடுத்த தினகரன்! கோவில்பட்டி எங்கே? -
தமிழக சட்டசபையில் உங்கள் குரல் ஒலிக்குமா? நிருபர் கேட்ட கேள்வி! வைகோ சொன்ன ஸ்டன்னிங் பதில்! -
வேல்முருகனின் மெகா பிளான் இதுவா? வன்னியர் சமூக வாக்குகளை வளைக்க பார்க்கிறாரா? -
கங்கணம் கட்டிக்கொண்டு வேலை.. மொத்த தமிழக பாஜகவும் ஸ்டன் ஆகி நிற்குதே.. யாருங்க இந்த த பா ஜி? -
விலை பேசப்படும் காங்கிரஸ் சீட்டுகள்! ராகுல் காந்திக்கு பறந்த புகார்! -
கௌதம் மேனனுக்கு எதிராக திரும்பிய வழக்கு.. ரூ4.25 கோடியை வட்டியுடன் செலுத்த ஐகோர்ட் உத்தரவு! -
ஷாக்..ஏப்-1ல் வாகன ஓட்டிகளுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி! டோல் கட்டணத்தை உயர்த்தும் NHAI! எங்கெங்கே? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்!












Click it and Unblock the Notifications