சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நாங்க அப்பவே கேட்டோம்.. நியாபகம் இருக்கா.. சமயம் பார்த்து கேட்ட தேமுதிக.. இபிஎஸ் "ஸ்மார்ட்" வியூகம்!

Google Oneindia Tamil News

சென்னை: கூட்டணி பேச்சுவார்த்தையில் அதிமுகவிடம் தேமுதிக இரண்டு முக்கியமான கோரிக்கைகளை தொடர்ந்து வைத்து வருகிறது.. தேமுதிகவின் இந்த இரண்டு கோரிக்கைக்கும் இன்னும் அதிமுக சம்மதம் தெரிவிக்கவில்லை. இதுதான் தொகுதி பங்கீடு செய்வதில் குழப்பம் ஏற்பட காரணம்.

திமுக, அதிமுக இரண்டும் சட்டசபை தேர்தல் கூட்டணிக்கான தொகுதி பங்கீட்டை இறுதி செய்ய உள்ளது. இரண்டு கட்சிகளும் தங்களின் கூட்டணி கட்சிகளோடு கடைசி கட்ட பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகிறது. அதிமுக கூட்டணியில் பாஜகவிற்கு 20 இடங்களும், திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு 25 இடங்களும் கொடுக்கப்பட்டுள்ளது.

அதிமுக இன்னும் தேமுதிகவுடன் பேச்சுவார்த்தை நடத்தி ஒப்பந்தத்தை நிறைவு செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இதற்காக இறுதிக்கட்ட பணிகள் தற்போது நடந்து கொண்டு இருக்கிறது. ஆனால் இந்த பேச்சுவார்த்தையில் இரண்டு சிக்கல்கள் உள்ளன.

எடுத்த எடுப்பிலேயே திமுகவுக்கு அதிமுக 20 இடங்களை விட்டுக்கொடுத்திருச்சு.. திருமாவளவன் எடுத்த எடுப்பிலேயே திமுகவுக்கு அதிமுக 20 இடங்களை விட்டுக்கொடுத்திருச்சு.. திருமாவளவன்

எப்படி

எப்படி

இந்த கூட்டணி பேச்சுவார்த்தையில் தேமுதிக மொத்தம் 2 கோரிக்கை வைத்துள்ளது. முதலில் அதிமுகவிடம் தேமுதிக 40 தொகுதிகள் கேட்டது. ஆனால் அதிமுக அதை கொடுக்க முன்வரவில்லை. இதையடுத்து 30 தொகுதிகள் இறங்கி வந்த தேமுதிக பின்னர் 25 தொகுதிகளை கொடுக்க வேண்டும் என்று கடைசியாக இறங்கி வந்தது.

கோரிக்கை

கோரிக்கை

25 தொகுதிகள் தர வேண்டும், அதோடு ஒரு ராஜ்யசபா சீட் கொடுக்க வேண்டும் என்பதே தேமுதிகவின் கோரிக்கை. லோக்சபா தேர்தல் நேரத்திலேயே ராஜ்ய சீட் கேட்டோம்.. அப்போதுதான் கொடுக்கவில்லை.. இப்போது கொடுங்கள் என்று தேமுதிக பழைய விஷயத்தை நியாபகப்படுத்தி உள்ளது. எப்படியாவது ராஜ்யசபா சீட் வாங்கிவிட வேண்டும் என்பதில் தேமுதிக உறுதியாக இருக்கிறது.

காரணம்

காரணம்

இதுதான் தேமுதிகவின் முதல் கோரிக்கையாக இருந்துள்ளது. அடுத்ததாக எப்படியாவது பாமக, பாஜகவிற்கு இணையான இடங்களை பெற வேண்டும் என்று தேமுதிக நினைக்கிறது. கூட்டணியில் இருக்கும் பாமக 23, பாஜக 20 இடங்களை பெற்றுள்ளது. அவர்களுக்கு இணையாக 20+ இடங்களை பெற வேண்டும், முடிந்த அளவு 23+ இடங்களை கேட்கும் திட்டத்தில் தேமுதிக உள்ளது.

முடிவு

முடிவு

இதுதான் பேச்சுவார்த்தை இழுபறிக்கு காரணம். இதில் முதலில் ராஜ்யசபா சீட் கொடுக்கும் எண்ணத்தில் அதிமுக இல்லை. ஆனால் தற்போது இந்த ராஜ்யசபா சீட் விஷயத்தில் அதிமுக கொஞ்சம் இறங்கி வந்துள்ளது. ஆனால் உறுதியான இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட் கொடுத்துவிட்டு.. 15- 18 தொகுதிகளை மட்டும் கொடுக்கலாம் என்ற திட்டத்தில் இபிஎஸ் - ஓபிஎஸ் இருப்பதாக கூறுகிறார்கள்.

சம்மதிக்க வைக்கலாம்

சம்மதிக்க வைக்கலாம்

ராஜ்யசபா சீட் கொடுப்பதால் தேமுதிகவை சம்மதிக்க வைக்க முடியும் என்று அதிமுக உறுதியாக நம்புகிறது. தேமுதிகவை 18 இடங்களுக்குள் சம்மதிக்க வைத்தால் 160+ இடங்களில் அதிமுக போட்டியிட முடியும். இது அதிமுகவிற்கு பெரிய அளவில் சட்டசபையில் பலம் கொடுக்கும்.

பலம் கொடுக்கும்

பலம் கொடுக்கும்

திமுக இன்னொரு பக்கம் 175+ இடங்களில் போட்டியிட போகிறது. இதனால் திமுகவிற்கு இணையாக போட்டி அதிமுகவும் போட முடியும், இது தனிப்பெரும்பான்மைக்கு வாய்ப்பாக இருக்கும் என்று முதல்வர் இபிஎஸ் நம்புகிறார்.. இதன் காரணமாக தேமுதிகவுக்கு 18 இடங்கள் வரை கொடுக்கும் திட்டம் அதிமுகவிடம் உள்ளது. இதனால் கூட்டணி பேச்சுவார்த்தை அதற்கு ஏற்றபடி நடத்தப்பட்டு வருகிறது.

English summary
DMDK asks for 25 seats and 1 Rajya Sabha seat in AIADMK alliance for Tamilnadu Assembly elections.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X