கோட்டைக்கு போய் 10 வருஷமாச்சு.. டெல்லிய பார்த்ததேயில்ல! திமுகவுக்கு தேமுதிக ஓகே சொல்ல இதுதான் காரணம்
சென்னை: வரும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு நீண்டநாள் எதிர்பார்ப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், தேமுதிக திடீரென திமுக கூட்டணியில் இணைந்துள்ளது. இந்த முடிவு அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்நிலையில் திமுகவை மிகக் கடுமையாக விமர்சித்து வந்த நிலையில், குறைந்தபட்சம் கட்சிக்கு 5 எம்.எல்.ஏ.க்களாவது வேண்டுமெனவும், முதன்முறையாக நாடாளுமன்றத்துக்கு செல்ல வேண்டுமென்பதற்காக தான் திமுக கூட்டணிக்கு ஓகே சொன்னதாக சொல்கின்றனர் தேமுதிகவினர்.
தமிழக அரசியல் களத்தில் கூட்டணிகள் குறித்து பரபரப்பான சூழ்நிலை நீடித்து வரும் நிலையில், தேமுதிக எந்த அணியில் சேரும் என்ற கேள்வி நீண்ட நாட்களாக நிலவியது. பல்வேறு ஊகங்கள் வெளியான சூழலில், யாரும் எதிர்பாராத வகையில் திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கட்சி தொடங்கியதிலிருந்து 20 ஆண்டுகளில் முதன்முறையாக இந்த இரு கட்சிகளும் ஒன்றாகச் செயல்பட உள்ளன. முன்னதாக நடந்த மக்களவைத் தேர்தலில், தேமுதிக அதிமுக கூட்டணியில் இருந்தது. அப்போது பிரேமலதா விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் விருதுநகர் தொகுதியில் போட்டியிட்டு குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.

தேமுதிக திமுக
அதன் பின்னர், அடுத்த அரசியல் நகர்வு குறித்து கட்சிக்குள் ஆலோசனைகள் தொடர்ந்து நடந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், மாநிலங்களவை உறுப்பினர் பதவி உள்ளிட்ட கோரிக்கையுடன் தேமுதிக தரப்பு திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல்கள் வெளியாகின. இதன் தொடர்ச்சியாக, சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற சந்திப்பில், மு.க.ஸ்டாலின் மற்றும் பிரேமலதா விஜயகாந்த் ஆகியோர் கலந்துரையாடினர். இந்தச் சந்திப்பின் போது, இரு கட்சிகளும் கூட்டணியை உறுதி செய்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தல்
இதற்கு முன்பு கோவையில் நடைபெற்ற மகா சிவராத்திரி நிகழ்வில், அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மற்றும் பிரேமலதா விஜயகாந்த் ஒரே வரிசையில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தது அரசியல் வட்டாரத்தில் பல்வேறு ஊகங்களுக்கு வழிவகுத்தது. மேலும், அந்நிகழ்வில் பங்கேற்ற மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் எல். முருகன் ஆகியோரை பிரேமலதா சந்தித்ததாகவும் செய்திகள் வெளியாகின. இதனால் தேசிய ஜனநாயக கூட்டணியில் தேமுதிக இணைய வாய்ப்பு உள்ளது என்ற கருத்தும் பேசப்பட்டது. ஆனால், பின்னர் இந்த தகவல்கள் உறுதியாகவில்லை.
முதல்வர் ஸ்டாலின்
இந்நிலையில், திமுக தலைமையகத்தில் நடைபெற்ற சந்திப்பில் முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், மூத்த அமைச்சர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் தேமுதிக கூட்டணி உறுதி செய்யப்பட்டது. இந்த முடிவு கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் விரும்பியதற்கேற்ப எடுக்கப்பட்டதாக பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார். வரும் சட்டமன்ற தேர்தலில் தேமுதிக எத்தனை தொகுதிகளில் போட்டியிடும் என்பது குறித்து பின்னர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
தொகுதி பங்கீடு
தொகுதி பங்கீடு தொடர்பாக இரு கட்சிகளும் இணைந்து ஆலோசனை நடத்தும் வகையில் குழு அமைக்கப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதே நேரத்தில், திமுக கூட்டணியில் தேமுதிகக்கு சில தொகுதிகளுடன் மாநிலங்களவை இடமும் வழங்கப்படலாம் என்ற அரசியல் வட்டார தகவல்களும் வெளியாகியுள்ளன. கூட்டணி உறுதியானதையடுத்து, தேர்தல் பணிகளை ஒருங்கிணைக்க இரு கட்சிகளும் அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளன.
கூட்டணி காரணம்
இந்த நிலையில் திமுக கூட்டணியை பிரேமலதா தேர்ந்தெடுக்க காரணம் என்ன என்பது குறித்தான சில தகவல்கள் வெளியாகி உள்ளது. விஜயகாந்த் இருந்தபோது 2011 தேர்தலில் வெற்றி பெற்ற போது எம்.எல்.ஏ.வானார். அதற்கு பிறகான தேர்தல்களில் படுதோல்வியை சந்தித்தது தேமுதிக. இதனால் கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு மேலாக தேமுதிகவுக்கு சட்டமன்ற உறுப்பினர்கள் இல்லாத சூழல் நிலவியது. மேலும் இதுவரை தேமுதிக எம்பிக்கள் என யாரும் டெல்லிக்கு சென்றதே இல்லை. தற்போது திமுக கூட்டணியில் இணைந்தால் கிடைக்கும் மூன்று முதல் ஐந்து எம்எல்ஏக்கள் கிடைப்பார்கள். மேலும் முதல் முறையாக திமுக தேமுதிகவுக்கு எம்பி பதவியும் கிடைக்கும் என்பதால் தான் திமுக கூட்டணியை தேர்ந்தெடுத்துள்ளார் என்கின்றனர் தேமுதிக.
-
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
“தேமுதிக கண்டிப்பாக விட்டுக்கொடுக்கும்” பிரேமலதா சொன்ன வார்த்தையால் திமுக தலைமை குஷி! -
TN Election: 1-ல்தான் பாஜக ஜெயிக்குமா? திமுக 180-ஆ? டெல்லியை அதிர வைத்த ANS அதிர்ச்சி சர்வே! -
“ஒரு கார் வாங்குற தகுதி கூட கேப்டன் குடும்பத்திற்கு இல்லையா?”.. பிரேமலதா விஜயகாந்த் ஆவேசம்! -
2026 தேர்தலே டல் அடிக்குது.. என்னதான் ஆச்சு திமுக, அதிமுகவுக்கு! 2021ல் இந்நேரம் எல்லாமே பினிஷ்! -
6 சீட் கேட்டு அடம் பிடிக்கும் மார்க்சிஸ்ட்.. 5ல் உறுதியாக ஸ்டாலின்! இன்று திமுகவுடன் மீண்டும் பேச்சு -
பாமக வரலாற்றிலேயே முதல் முறையாக.. 35 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக் குறைவான தொகுதிகளில் போட்டி! -
Election Exclusive: அணில் மோட் ஆக்டிவேட் பண்ணுங்க.. நண்பா நண்பீஸ் ரெடியாகுங்க! எலக்சனுக்கு முன் விஜய் போடும் மெகா ப்ளான் -
ADMK: பாஜக 27, பாமக 18, அமமுக 11! அப்போ அதிமுக 172? வெளியான உத்தேச பட்டியல்? -
திமுக எங்களுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கியதில் திருப்தி இல்லை.. இருந்தாலும்! சிபிஎம் சண்முகம் பேட்டி! -
Srirangam: அந்த செவுரு எத்தனை பேர பலி வாங்க போகுதோ? ஜெ. அரசியல் வாழ்வை காலியாக்கிய ‘ஸ்ரீரங்கம் சென்டிமென்ட்’ -
அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வீட்டில் தேர்தல் பறக்கும் படையினர் பரபர சோதனை!












Click it and Unblock the Notifications