தன் இறுதி சடங்குல கூட சமஸ்கிருதமோ மற்ற மொழிகளோ வரக்கூடாது.. தமிழில் மட்டுமே செய்ய சொன்ன விஜயகாந்த்
சென்னை: தன்னுடைய இறுதி சடங்குல கூட சமஸ்கிருதமோ மற்ற மொழிகளோ வரக்கூடாதுன்னு சொல்லி தமிழில் மட்டுமே செய்ய சொல்லியிருக்கிறார் விஜயகாந்த் .. இதை தனியார் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் பிரோகிதம் செய்தவர் கூறியிருக்கிறார்.
தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் கடந்த டிசம்பர் 30ம் தேதி காலை உடல் நலக்குறைவால் காலமானார். கடந்த இரண்டு நாட்களாக சென்னையில் அவரது உடலுக்கு பலரும் அஞ்சலி செலுத்தினார்கள். பொதுமக்கள் லட்சக்கணக்கானோர் திரண்டு வந்து அவருக்கு விடை கொடுத்தனர்.

இரண்டு நாட்களாக விஜயகாந்த் தான் மக்களின் பேசுபொருளாக இருந்தார். அவர் செய்த தர்மங்கள், உதவிகள், காட்டிய அன்புகள் எல்லாமே நேற்று தான் தெரிந்தது. அவரை திட்டமிட்டு தவறாக சித்தரித்தவர்கள் கூட நேற்று விஜயகாந்தை புகழ்ந்து பாராட்டினார்கள். விஜயகாந்த் உடல் அரசு மரியாதையுடன் அவர் பெரிதும் நேசித்த கோயம்பேடு மண்டபத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
வாழ்நாள் முழுவதும் பலரது பசியை போக்கிய விஜயகாந்த், தன்னால் முடிந்த அத்தனை உதவிகளையும் திரைக்கலைஞர்கள், ஏழைகளுக்கு செய்தார். சினிமாவில் சாதித்த அவர், அரசியலில் சாதிக்க முடியாமல் போக, இங்குள்ள சூழ்ச்சிகளை பற்றி தெரியாதது தான். விஜயகாந்த் தீவிர அரசியலில் இருந்த காலக்கட்டத்தில் அவரை, சிலர் தெலுங்கன் என்று விமர்சனமும் செய்தார்கள். மேலும் குடிகாரர் என்றும் இழிவான விமர்சனங்களை வைத்தார்கள். வெள்ளந்தியான அந்த மனிதரை கோபப்பட வைத்து அதை ஊடகங்களில், சமூக ஊடகங்களில் ஜோக்கர் போல சித்தரிக்க முயன்றார்கள்.
இந்நிலையில் தன் மீதான மோசமான விமர்சனங்களை மிகவும் பக்குவமாக கையாண்டார். தன்னை தனிப்பட்ட முறையில் மோசமாக விமர்சித்தவர்களை ஒருபோதும் அவர் விமர்சிக்கவே இல்லை. அவரது பக்குவம் நிச்சயம் ஆச்சர்யமான ஒன்று. விஜயகாந்த் மறைந்த பின்னர் அவரது இறுதி சடங்கு குறித்து வெளியான தகவல் ஒன்று பலரையும் நெகிழ வைத்துள்ளது.
தன்னுடைய இறுதி சடங்குல கூட சமஸ்கிருதமோ மற்ற மொழிகளோ வரக்கூடாதுன்னு சொல்லி தமிழ்ல மட்டுமே செய்ய சொல்லியிருக்கிறார் விஜயகாந்த் .. இதை தனியார் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் பிரோகிதம் செய்தவர் கூறியிருக்கிறார். இது தொடர்பாக புரோகிதம் செய்தவர் அளித்த பேட்டியில், கேப்டன் விஜயகாந்த், நாயுடு என்ற சமூகத்தைச் சேர்ந்தவர். அவர்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்றால், வைணம் என்று சொல்லக்கூடிய பெருமாளுக்கு உரிய நாமங்களை படித்து அவருக்கு மேற்கொள்ள வேண்டிய இறுதி சடங்கை மேற்கொள்ள சொல்லியிருந்தார்கள்.
அதேசமயம் அந்த வைணவ சமயத்தில் பாடக்கூடிய பாடல்கள் அனைத்துமே தமிழில் மட்டுமே இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டு சொல்லியிருந்தார்கள்.. உதாரணத்திற்கு சமஸ்கிருதமோ, தெலுங்கோ இல்லாமல் தமிழ் முறைப்படி மட்டுமே செய்ய வேண்டும் என்று அவர்கள் என்னிடம் வேண்டுகோள் வைத்திருந்தார்கள்.. நாங்கள் அதற்கு ஏற்றார் போல், எம்பெருமான் நாராயணனின் திருவடியை போற்றியும் , சிவ பெருமான் திருவடியை போற்றியும் திருப்பாவை என்று சொல்லக்கூடிய திவ்ய பிரபந்தம், தேவராமும், திருவாசகமும் படித்து அய்யாவின் (விஜயகாந்தின்) இறுதி சடங்கை மேற்கொண்டோம் என்றார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications