இயக்குனர் பாண்டிராஜ் சொன்ன "அந்த" ஒரு வார்த்தை.. சீறிய பிரேமலதா! விஜயகாந்த் பற்றி எப்படி பேசலாம்
சென்னை: விஜயகாந்த் உடல்நிலை தொடர்பாக இயக்குநர் பாண்டிராஜ் பதிவிட்ட கருத்துக்கு விஜயகாந்த் மனைவியும் தேமுதிக பொதுச் செயலாளருமான பிரேமலதா பதிலடி கொடுத்துள்ளார்.
கடந்த சில ஆண்டுகளாகவே உடல்நலப் பிரச்சினைகளால் அவதிப்பட்டு வந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த்திற்குக் கடந்த 18ஆம் தேதி மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, அவர் சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவரது உடல்நிலை சீராகவே இருப்பதாக தேமுதிக தரப்பில் கூறப்பட்டது. இருப்பினும், நவ, 18ஆம் தேதி மியாட் மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், விஜயகாந்த்தின் உடல்நிலை அப்போது சீராக இல்லை என்று கூறப்பட்டிருந்தது.
விஜயகாந்த்: இது அவரது ரசிகர்கள் மற்றும் தேமுதிக தொண்டர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நுரையீரல் சிகிச்சை வழங்கப்பட வேண்டும் என்பதால் அவர் இன்னும் 14 நாட்கள் மருத்துவமனையிலேயே இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். அவர் விரைவில் முழுமையாகக் குணமடைய வேண்டும் என்பதே அனைவரின் பிரார்த்தனையாக இருந்தது.
உடல்நிலை பாதிப்பு காரணமாக சில ஆண்டுகளாக விஜயகாந்த் கட்சி நடவடிக்கைகளில் இருந்து ஒதுங்கி இருந்த நிலையில், அவரது மனைவி பிரேமலதா தான் கட்சி பணிகளைக் கவனித்து வந்தார். இந்தச் சூழலில் கடந்த டிசம்பர் 14ஆம் தேதி தேமுதிக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் சென்னையில் நடைபெற்றது. மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆன விஜயகாந்த் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டார். அவரை ரோலிங் சேரில் தான் அழைத்து வந்தார்கள்.
இயக்குநர் பாண்டிராஜ்: அவரது உடல்நிலை மோசமாக இருப்பது அந்த வீடியோவில் தெளிவாகத் தெரிந்தது. வீல் சேரில் அமர்ந்திருந்த விஜயகாந்த் உடல்நிலையை பார்த்த தேமுதி தொண்டர்கள் கதறி அழுதனர். இந்தக் கூட்டத்தில் தான் தேமுதிக பொதுச்செயலாளராக பிரேமலதா விஜயகாந்த் அறிவிக்கப்பட்டார். இந்தக் கூட்டம் நடக்கும் போது விஜயகாந்த் திடீரென மேடையில் இருந்து சரிந்து விழப் போனார். நல்வாய்ப்பாக அங்கிருந்த சிலர் அவரை தாங்கிப் பிடித்தனர்.
இந்த காட்சிகள் பலருக்கும் சோகத்தை ஏற்படுத்துவதாக இருந்தது. இணையத்தில் பலரும் இது குறித்து கருத்து கூறினர். பசங்க, கடைக்குட்டி சிங்கம் உள்ளிட்ட படங்களை இயக்கி பாண்டிராஜும் இது குறித்து தனசு எக்ஸ் பக்கத்தில், "கேப்டன் திரு. விஜயகாந்த் அவர்களுக்கு , இப்பொழுது சரியான ஓய்வு தேவை . அவர் பூரண குணமடையும்வரை அவரை இப்படியெல்லாம் கஷ்டப்படுத்தாதீர்கள் please... பிடித்த ஒரு 'நல்ல மனிதரை'இப்படிப் பார்க்க ரொம்பவே கஷ்டமா இருக்கிறது" எனப் பதிவிட்டிருந்தார்.
பதிலடி: இதற்கிடையே இதற்கு பிரேமலதா விஜயகாந்த் பதிலடி கொடுத்துள்ளார். யூடியூப் சேனல் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், "கேப்டனின் முதுகில் குத்திவிட்டுப் போனதுதான் அனைத்துக்கும் முதல் காரணம்.. துரோகம் தான் அனைவர் வாழ்க்கையிலும் கொடுமையானது. அவர் பார்த்து வளர்த்து ஆளாக்கி எம்எல்ஏ ஆக்கிய சிலரே அவருக்கு எதிராகத் திரும்பினர். அவரது உடல்நிலை பாதிக்க அதுவே முக்கிய காரணம்.. கேப்டன் தன்னுடைய வேதனையை யாரிடமும் பகிர மாட்டார்.
அவர் மருத்துவமனையில் நல்ல நிலையில் இருக்கிறார் என நான் கூறிய போதே வெண்டிலேட்டர்.. அது, இது என ஏதேதோ சொன்னார்கள். அவர் செயற்குழு, பொதுக்குழுவுக்கு வரமாட்டார் என்றார்கள். ஆனால், நான் முதலில் இருந்தே கூறியது போல அவர் வந்தார்.. கட்சி வேட்டிக் கட்டிக் கொண்டு வந்தார். இயக்குநர் பாண்டிராஜ் என்ற ஒருத்தர் கேப்டனை கஷ்டப்படுத்தாதீர்கள் என்கிறார். கேப்டனை யார் கஷ்டப்படுத்தினார்கள். அந்த இயக்குநருக்கு கட்சி குறித்து என்ன தெரியும்.
மிஸ்டர் பாண்டிராஜ்: அவருக்கு சினிமா எடுக்க மட்டுமே தெரியும். சினிமாவில் கூட சின்ன விஷயம் மாற்ற வேண்டும் என்றால் பலரிடமும் மாற்றம் செய்ய வேண்டும். அப்போது கட்சி என்றால் எவ்வளவு முக்கியம். தட்டிவிட்டால் பத்திக்கும். அப்போ மிஸ்டர் பாண்டிராஜிடம் நான் கேட்டுக் கொள்கிறேன். ஏதோ ஒரு பதிவு போடணும் என பதிவிடாதீர்கள். இது சினிமா இல்லை.. கட்சி. செயற்குழு பொதுக்குழு என்றால் தலைவர் வர வேண்டும் என்பது விதி,
மேலும், அவரை யாரும் கஷ்டப்படுத்தவில்லை. அவர் வந்தார்.. நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.. கிளம்பிவிட்டார் அவ்வளவுதான்.. எங்களுக்குத் தெரியும் எப்படி அவரை பாத்துக்கணும் என்று. உங்கள் அறிவுரைக்கும், ப்ரீ அட்வைஸூக்கும் நன்றி மிஸ்டர் பாண்டிராஜ்" என்றார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications