அண்ணன் சொல்லிட்டாரு.. சட்டென களத்திற்கு வந்த பிரேமலதா.. இல்லத்தரசி கூப்பன் பற்றி செம அப்டேட்!
சென்னை: தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் இல்லத்தரசி கூப்பன் பற்றி பேசியது கவனம் பெற்றுள்ளது.
தமிழ்நாடு தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மும்முரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். கேப்டன் பாணியிலேயே அதே கம்பீரத்துடன் மைக் பிடித்த பிரேமலதா, திரண்டிருந்த தொண்டர்கள் மற்றும் பொதுமக்களிடையே தேர்தல் வாக்குறுதிகளை அடுக்கினார்.

பிரச்சாரத்தைத் தொடங்கிய பிரேமலதா, முதலில் தனது பின்னணியைப் பகிர்ந்து கொண்டார். "நானும் ஆம்பூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் பிறந்து வளர்ந்தவள் தான். இன்றைக்குச் சென்னையில் கேப்டனின் மனைவியாக, உங்கள் அண்ணியாக உங்கள் முன்னால் நிற்கிறேன். அதனால் கூட்டுறவு சர்க்கரை ஆலை என்பது மக்களுக்கு எந்த அளவு முக்கியமான தொழில் என்பது எனக்கு நன்றாகத் தெரியும்" என சென்டிமென்ட் டச் கொடுத்தார்.
வாக்குறுதி மழை:
பிரேமலதா தனது பேச்சில்,
மகளிருக்கு ஜாக்பாட்: மகளிர் உரிமைத் தொகை 1,000 ரூபாயிலிருந்து 2,000 ரூபாயாக உயர்த்தப்படும். அத்துடன் 8,000 ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் வாங்கும் கூப்பன்களும் வழங்கப்படும். அண்ணனின் வாக்குறுதியில் இதுதான் ஹைலைட் என்றார்.
மாணவர்களுக்கு சலுகை: புதுமைப் பெண் மற்றும் தமிழ்ப் புதல்வன் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் தொகை 1,500 ரூபாயாக உயர்த்தப்படும்.
விவசாயிகளுக்கு குட் நியூஸ்: நெல் கொள்முதல் விலை குவிண்டால் ஒன்றுக்கு 3,000 முதல் 4,500 ரூபாய் வரை உயர்த்தப்படும். பால் கொள்முதல் விலை லிட்டருக்கு 5 ரூபாய் உயர்த்தப்படும்.
வேலைவாய்ப்பு: இளைஞர்களுக்காக 2 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். 10 கைத்தறி பூங்காக்கள் அமைக்கப்படும்.
அண்ணனின் வாக்குறுதி:
"முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் மக்களுக்காக ஏராளமான வாக்குறுதிகளை வழங்கியிருக்கிறார். 10 லட்சம் வீடுகள் கட்டித் தரும் திட்டம், மருத்துவக் காப்பீடு 10 லட்சமாக உயர்வு எனப் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. அனைத்தையும் நாங்கள் நிச்சயமாக நிறைவேற்றுவோம்" என உறுதியளித்தார்.
சுய உதவிக் குழு பெண்களுக்கு 5 லட்சம் ரூபாய் வரை மானியத்துடன் கூடிய கடன் வழங்கப்படும் என்ற அறிவிப்பை அவர் வெளியிட்டபோது, கூட்டத்தில் பலத்த கைதட்டல் எழுந்தது. கேப்டனின் மறைவுக்குப் பிறகு பிரேமலதா விஜயகாந்த் எடுத்துள்ள இந்த அரசியல் வேகம், திருத்தணி களத்தில் தேமுதிக - திமுக கூட்டணியினரிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இல்லத்தரசி கூப்பன் திட்டம்
திமுக-வின் தேர்தல் அறிக்கையில் 'ஹீரோயின்' ஆக ஜொலிக்கும் 'இல்லத்தரசி' கூப்பன் திட்டம், இப்போது தமிழகத் தேர்தல்களத்தின் ஹாட் டாபிக். ஒரு முறை வழங்கப்படும் இந்த 8,000 ரூபாய் மதிப்பிலான கூப்பனை வைத்து, 'வீட்டு உபயோகப் பொருட்களை (Electronic Appliances) வாங்கிக் கொள்ளலாம்' என முதல்வர் அறிவித்திருந்தார்.
இல்லத்தரசி கூப்பன் என்ற பெயரில் 8 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான கூப்பனைப் பயன்படுத்தி வாஷிங் மெஷின், டி.வி., ஃபிரிட்ஜ், மிக்சி, மைக்ரோவேவ் அவன் மற்றும் மின் அடுப்புகள் போன்றவை ஏற்கனவே பயன்படுத்தி வரும் பழைய பொருட்களுக்கு புதிய பொருட்களை பெற்றுக்கொள்ளலாம் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். வீட்டு உபயோகப் பொருட்களை, வருமான வரி செலுத்தாத குடும்பங்களைச் சேர்ந்த இல்லத்தரசிகள் புதிதாக வாங்கிக்கொள்ளலாம் அல்லது
எளிமையாகச் சொன்னால், ரேஷன் கார்டு வைத்திருக்கும், வருமான வரி செலுத்தாத குடும்பங்களின் பெண் தலைவிகளுக்கு 8,000 ரூபாய் மதிப்புள்ள ஒருமுறை பயன்படுத்தக்கூடிய (One-time) கூப்பன் வழங்கப்படும். இந்த கூப்பனை வைத்துக்கொண்டு உங்கள் வீட்டுக்குத் தேவையான எலக்ட்ரானிக் பொருட்களை நீங்களே வாங்கிக்கொள்ளலாம்.
-
அடம்பிடித்து ஈரோடு கிழக்கை கேட்டு வாங்கிய காங்கிரஸ்.. இப்போ எங்க போச்சு! நெட்டிசன்கள் சரமாரி கேள்வி! -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
பொருளாக தராமல் ரூ.8,000 கூப்பன் கொடுப்பது ஏன்? மக்களிடம் முதல்வர் ஸ்டாலின் சொன்ன விளக்கம்! -
181–189 தொகுதிகளில் வெற்றி.. மீண்டும் வெல்லும் திமுக கூட்டணி.. அதிமுக – தவெகவிற்கு ஷாக் தந்த சர்வே -
திமுக vs அதிமுக! கேம் சேஞ்சராக போகும் டாப் 5 வாக்குறுதிகள்! தேர்தல் முடிவையே மாற்றும் பிரம்மாஸ்திரம் -
ஸ்டாலின் தான் சிறந்த CM வேட்பாளர்.. பின்னாலேயே துரத்தும் எடப்பாடி.. விஜய்க்கு அதிர்ச்சி! புதிய சர்வே -
திமுக, அதிமுக, தவெக தேர்தல் வாக்குறுதிகள்.. தமிழ்நாட்டின் வருமானம் என்ன.. நிறைவேற்ற முடியுமா? -
அதிமுகவை பாஜக விலைக்கு வாங்கிவிட்டது.. திருவாரூரில் தேர்தல் பரப்புரையை தொடங்கிய ஸ்டாலின்! ‘அட்டாக்' -
சிதறும் கிறிஸ்தவ வாக்குகள்? தமிழகத்தில் இதுவரை நடக்காத சைலண்ட் மாற்றம்! கள நிலவரம் என்ன? -
75 வருட வரலாற்றில் முதன்முறை..DSV vs IPS! திண்டுக்கல்லில் நேருக்குநேர் மோதும் திமுக-அதிமுக மா.செ.கள் -
வில்லிவாக்கத்தில் கொடி நாட்டுவாரா ஆதவ் அர்ஜுனா? சுத்துப் போட்ட திமுக! சூடு பிடிக்கும் களம்











Click it and Unblock the Notifications