கேப்டன் உருவத்தை பயன்படுத்தாதீங்க! அறிக்கை விட்ட பிரேமலதா விஜயகாந்த்! ‘தி கோட்’ படத்துக்கு சிக்கல்?
சென்னை: திரைப்படங்களில் ஏஐ தொழில்நுட்பம் மூலம் கேப்டன் விஜயகாந்தின் உருவத்தை பயன்படுத்த இதுவரை யாரும் எந்த அனுமதியும் பெறவில்லை எனவும், அனுமதியின்றி இதுபோன்ற அறிவிப்புகளை வெளியிடுவதை தவிர்க்க வேண்டும் என விஜயகாந்தின் மனைவியும், தேமுதிக பொதுச் செயலாளருமான பிரேமலதா விஜயகாந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இயக்குனர் வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் முதன்முறையாக விஜய் நடிக்கும் 68வது படத்துக்கு தி கிரேட் டெஸ்ட் ஆப் ஆல் டைம் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார்.

இதில் விஜய் இரண்டு வேடங்களில் நடித்துள்ளதாக கூறப்படும் நிலையில், இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு தொடங்கி தற்போது வரை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இறுதி கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில் செப்டம்பர் 5ஆம் தேதி படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் மோகன், பிரசாந்த், பிரபுதேவா, சினேகா, லைலா, ஜெயராம் உள்ளிட்ட பல்வேறு நட்சத்திரங்கள் ஒன்று கூடியுள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதற்கிடையே 'தி கோட்' படத்தில் ஏஐ தொழில்நுட்பம் மூலம் நடிகர் விஜயகாந்தை கொண்டு வருவதற்கான முயற்சிகள் நடந்து வருவதாக படக்குழு தெரிவித்திருந்தது. இதனை பிரேமலதா விஜயகாந்தும் உறுதி செய்திருந்தார்.
இயக்குநர் வெங்கட் பிரபு ஒரு ஐந்து, ஆறு முறை எங்கள் வீட்டுக்கு வந்து இதுகுறித்து பேசினார். அதற்கு முன்பே என் மகன் சண்முகபாண்டியனிடமும் இது குறித்து அவர் பேசியிருந்தார். என்னையும் சந்தித்த வெங்கட் பிரபு, 'தி கோட்' திரைப்படத்தில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலமாக விஜயகாந்தை ஒரு காட்சியில் நாங்கள் கொண்டு வர இருக்கிறோம். அதற்கு உங்கள் அனுமதி வேண்டும் என்று கேட்டார். உனக்கும் விஜய்க்கும் என்னால் 'நோ' சொல்ல முடியாது என்று வெங்கட் பிரபுவிடம் கூறினேன்" இவ்வாறு பிரேமலதா தெரிவித்தார்.
இந்நிலையில் திரைப்படங்களில் ஏஐ தொழில்நுட்பம் மூலம் கேப்டன் விஜயகாந்தின் உருவத்தை பயன்படுத்த இதுவரை யாரும் எந்த அனுமதியும் பெறவில்லை என விஜயகாந்தின் மனைவியும், தேமுதிக பொதுச் செயலாளருமான பிரேமலதா விஜயகாந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்," தமிழ் திரை உலகை சேர்ந்த அனைவருக்கும் அன்பான வேண்டுகோள், புரட்சிக் கலைஞர் கேப்டனை ஏஐ தொழில்நுட்பத்தின் (AI TECHNOLOGY) மூலம் திரைப்படங்களில் பயன்படுத்த இருப்பதாக தொடர்ந்து செய்திகள் வருகிறது.
எனவே இதுபோன்ற செய்திகள் ஆடியோ வெளியீட்டு விழாவில் வருகின்றது. எங்களிடம் முன் அனுமதியில்லாமல் இது மாதிரியான அறிவிப்புகள் வருவதை தவிர்த்துக் கொள்ளவேண்டும். எந்த விதத்தில் பயன்படுத்துவதாக இருந்தாலும் முறையாக அனுமதி பெற்ற பின்பே, அறிவிப்பை வெளியிட வேண்டும்.
ஏஐ தொழில்நுட்பத்தின் (AI TECHNOLOGY) மூலம் திரைப்படங்களில் பயன்படுத்த இருப்பதாக இதுவரை யாரும் எந்த அனுமதியும் பெறவில்லை என்பதை நாங்கள் தெரிவித்துக்கொள்கிறோம். எனவே அனுமதியில்லாமல் பத்திரிகை செய்திகள், ஊடக செய்திகள், ஆடியோ வெளியீட்டு விழா போன்ற நிகழ்ச்சிகளில் வெளியிடுவதை தவிர்த்துக்கொள்ள வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்." என கூறியுள்ளார்.
இதற்கிடையே பிரேமலதா சொன்னது 'தி கோட்' படத்தைக் குறிப்பிட்டு இல்லை என கூறுகின்றனர் தி கோட் படக் குழுவினர். இதுதொடர்பாக அவர்களிடம் கேட்டபோது, தி கோட் படத்தில் விஜயகாந்த் போர்ஷன் ஏஐ தொழில்நுட்ப உதவியுடன், விஜயகாந்தின் குடும்பத்தினரின் சம்மதத்துடன் நடந்து வருகிறது. அதில் எந்த சிக்கலும் இல்லை என கூறினார்.
இதனிடையே 'ஊமை விழிகள்' இயக்குனர் ஆபவாணனின் பேச்சை தொடர்ந்தே இந்த அறிக்கை என்கின்றனர் திரைத்துறையினர். கடந்த சில மாதங்களுக்கு முன் சென்னை தரமணியில் உள்ள எம்ஜிஆர் திரைப்படக் கல்லூரியில் மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த்துக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு முன்னாள் மாணவர்கள் சங்கம் சார்பில் நடைபெற்றது. அப்போது பேசிய இயக்குனர் ஆபவாணன், 'மூங்கில் கோட்டை' என்ற படத்திற்காக விஜயகாந்த் நடித்த சுமார் 70 ஆயிரம் ஃபூட்டேஜ்கள் எங்களிடம் உள்ளன. அந்தக் காட்சிகளை வைத்து தற்போது இருக்கும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அடுத்த இரண்டு படங்களில் நடிகர் விஜயகாந்த்தை உயிருடன் திரையில் நடமாட விடுவோம்" என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications