காத்திருக்கும் அதிமுக.. 40 தொகுதிகளுக்கும் இன்று முதல் விருப்ப மனு வாங்கும் தேமுதிக.. என்ன நடக்குது?
சென்னை: தேமுதிக சார்பில் போட்டியிட விரும்புபவர்கள் இன்று முதல் விருப்ப மனுவை பெற்றுக்கொள்ளலாம் என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். அதிமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில் 40 தொகுதிகளுக்கும் தேமுதிக விருப்பமனு பெறுகிறது.
லோக்சபா தேர்தலில் தேமுதிக யாருடன் கூட்டணி என்பதை இன்னும் தெளிவுபடுத்தவில்லை. பாஜக மற்றும் அதிமுகவுடன் கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்து வந்ததாக கூறப்பட்டது. ஆனால் தேமுதிக கேட்கும் தொகுதிகளை பாஜக, அதிமுக கொடுக்க முன் வராததால் இன்னும் கூட்டணி இழுபறி தொடர்கிறது.

இதற்கிடையே, அதிமுகவுடன் தேமுதிக கூட்டணி வைக்கும் என்று சொல்லப்படுகிறது. இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்றாலும் அதிகாரப்பூர்வமாக அதிமுக கூட்டணியில் தேமுதிக இணையவில்லை. இந்த நிலையில், 40 தொகுதிகளுக்கும் தேமுதிக விருப்ப மனு விநியோகம் தொடங்கியுள்ளது. இன்றும் நாளையும் என இரண்டு நாட்களாக விருப்ப மனு விநியோகிக்கப்படுகிறது.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 40 லோக்சபா தொகுதிகளில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் போட்டியிட விரும்புகின்ற அனைத்து நிர்வாகிகளும், கழகத் தொண்டர்களும் லோக்சபா தேர்தல் விருப்ப மனுக்களை இன்று காலை 11.00 மணியில் இருந்து சென்னை கோயம்பேட்டில் உள்ள தலைமை கழகத்தில் பெற்றுக்கொள்ளலாம் என்று பிரேமலதா கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், "பூர்த்தி செய்யப்பட்ட விருப்ப மனுக்களை நாளை (புதன்கிழமை) மாலை 5 மணிக்குள் தலைமை கழகத்தில் ஒப்படைக்க வேண்டும். லோக்சபா தேர்தலில் கழகத்தின் சார்பில் போட்டியிடுவதற்குரிய விருப்ப மனு அளிப்பதற்கு தேமுதிகவின் நிர்வாகிகளாக இருப்பவர்களும், கழகத்தின் அடிப்படை உறுப்பினர்களாக இருப்பவர்களும் தகுதியானவர்கள் ஆவர்.
மேலும், நாடாளுமன்ற பொது தொகுதிக்கான விருப்ப மனு கட்டணமாக ரூபாய் 15 ஆயிரமும், தனித் தொகுதிக்கான விருப்ப மனு கட்டணமாக ரூபாய் 10 ஆயிரமும் செலுத்தி விருப்ப மனுக்களை பெற்றுக் கொள்ளலாம். நாடாளுமன்ற தேர்தலில் தேமுதிக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு நாளை மறுநாள், வியாழக்கிழமை அன்று காலை 10 மணி அளவில் தலைமை கழகத்தில் நேர்காணல் நடைபெறும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
பாஜகவுடன் அதிமுக கூட்டணி கிடையாது என்று எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக அறிவித்ததில் இருந்து அன்புமணி ராமதாஸின் பாமக மற்றும் பிரேமலதா விஜயகாந்தின் தேமுதிக யாருடன் கூட்டணி அமைக்கும் என்ற எதிர்பார்ப்பு தமிழக அரசியல் களத்தில் ஏற்பட்டது.
தொடர்ந்து பாஜக மற்றும் அதிமுகவினர் பாமக , தேமுதிகவை தங்களது கூட்டணிக்குள் இழுக்க அடிக்கடி பேச்சுவார்த்தை மேற்கொண்டது. ஆனால் பாமக, தேமுதிக கேட்கும் தொகுதிகளில் உடன்பாடு ஏற்படாததால் யாருடன் கூட்டணி என்பதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வந்தது. இந்த நிலையில், பாமக பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளது. இதேபோல், அதிமுகவுடன் தேமுதிக கூட்டணி உறுதியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
லோக்சபா தேர்தலில் அதிமுகவுடன் தேமுதிக கூட்டணி அமைத்து போட்டியிடும் என்றும், தேமுதிகவிற்கு 7 லோக்சபா தொகுதிகள் ஒதுக்கப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான இறுதி ஒப்பந்தம் நாளை கையெழுத்தாகும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக தேமுதிக இடையே இருமுறை பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட நிலையில் தற்போது முடிவு உறுதியாகியிருக்கிறதாம்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications