செந்தில்பாலாஜியின் தம்பி அசோக்கை கைது செய்ய வேண்டும்! பிரேமலதா விஜயகாந்த் பாய்ச்சல்!
சென்னை: அமைச்சர் செந்தில்பாலாஜியையும், அவரது தம்பி அசோக்கையும் கைது செய்ய வேண்டும் என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
சோதனை நடத்தச் சென்ற இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகளை தாக்கிய நிகழ்வை இதுவரை தாம் கண்டதில்லை என்றும் அதிகாரிகளை கடமையாற்ற விடாமல் தடுப்பது தவறான முன்னுதாரணம் எனவும் சாடினார். விஏஓ கொலை, வருவாய் ஆய்வாளர் மீது தாக்குதல், ரெய்டுக்கு சென்ற அதிகாரிகள் மீது தாக்குதல் என்பது தான் திராவிடல் மாடல் அரசின் சாதனைகள் என விமர்சித்தார்.

முதலமைச்சர் ஸ்டாலின் மேற்கொண்ட சிங்கப்பூர் -ஜப்பான் சுற்றுப்பயணத்தின் பயனை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் என்றும் வெளிநாட்டிலிருந்து சென்னை திரும்பியதும் சுற்றுப்பயணம் வெற்றி என முதல்வர் பேட்டி கொடுப்பதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும் எனவும் வினவினார்.
மேகதாதுவில் அணை கட்டியே தீருவோம் என கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் கூறி வரும் நிலையில், கர்நாடக முதலமைச்சர் பதவியேற்பு விழாவில் கலந்துகொண்ட ஸ்டாலின் தான் அதற்கு தீர்வு காண வேண்டும் என்றும் மேகதாதுவில் கர்நாடகா புதிய அணை கட்டினால் டெல்டா பாலைவனமாக மாறும் அபாயம் உள்ளதாக எச்சரித்தார்.

தமிழ்நாட்டில் கொலை கொள்ளை அதிகரித்திருப்பதாகவும் திமுக எம்.பி.க்களால் தமிழ்நாட்டிற்கு என்ன பலன் கிடைத்தது எனவும் பிரேமலதா விஜயகாந்த் வினவினார். விஜயகாந்த்தை பொறுத்தவரை திருவண்ணாமலை கோயில் முன்பு கூறுகிறேன் நலமுடன் இருக்கிறார் என்றும் நடப்பதிலும், பேசுவதிலும் மட்டுமே அவருக்கு சிரமம் இருப்பதாக தெரிவித்தார்.
விஜயகாந்துக்கு தேவையான பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருவதாகவும் விரைவில் மக்களை சந்திப்பார் எனவும் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார். திருவண்ணாமலை கோயிலுக்கு திடீர் விசிட் அடித்த அவர் அங்கு செய்தியாளர்களை சந்தித்த போது இதனைக் கூறினார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications