விஜயபிரபாகரன் வீழ்த்தப்பட்டாரா? ரிசல்ட் நாளில் அந்த 2 மணி நேரம்? நீதிகேட்ட தேமுதிக.. ஹைகோர்ட் அதிரடி
சென்னை: மக்களவை தேர்தலில் விருதுநகர் தொகுதியில் மாணிக்கம் தாக்கூர் வெற்றி பெற்றதை எதிர்த்து விஜயபிரபாகரன் தாக்கல் செய்த தேர்தல் வழக்கில், மாணிக்கம் தாக்கூர், தேர்தல் ஆணையம் பதிலளிக்க சென்னை ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
நடந்து முடிந்த மக்களவை தேர்தல் ஓட்டு எண்ணிக்கையின்போது, மிகவும் பரபரப்பையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்திய தொகுதி விருதுநகர் ஆகும்.. கடைசி நிமிடம் வரை விருதுநகரில் யார் வெற்றி பெறுவார்கள் என்ற ஆவல் அதிகரித்தபடியே இருந்தது.

காங்கிரஸ் கட்சி: இறுதியில், காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட மாணிக்கம்தாகூர் 3 லட்சத்து 85 ஆயிரத்து 256 வாக்குகளையும், விஜயபிரபாகரன் 3 லட்சத்து 80 ஆயிரத்து 877 வாக்குகளையும் பெற்றனர்.
எப்படியாவது விஜயபிரபாகரன் வெற்றி பெற்றுவிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இறுதியில் தோல்வியை தழுவினார்.. காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட மாணிக்கம் தாகூர், 4,379 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதனால் தேமுதிக தலைவர் பிரேமலதா கொந்தளித்து போனார்.
விஜயபிரபாகரன்: மறுநாளே செய்தியாளர்களிடம் பேசும்போது, "விஜயபிரபாகரன் தோற்கவில்லை, தோற்கடிப்பட்டார் என்ற குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார்.. 50, 60 வருடங்களாக கட்சி நடத்துகிறீர்கள்; ஆட்சியிலும் இருக்கின்றீர்கள். சின்னபையன் முதன்முறையாக தேர்தலில் நிற்கிறார், அவர் ஜெயித்தால்தான் என்ன? என்று காட்டமாக கேட்டார் பிரேமலதா.
"விருதுநகரில் மதியம் 3 மணி முதல் 5 மணிவரை வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டது ஏன்? சூழ்ச்சி செய்து, அமைச்சர்களை வைத்து அதிகாரிகளை மிரட்டி, கலெக்டரே, என்னால் அழுத்தம் தாங்கமுடியவில்லை, என் போனை சுவிட்ச் ஆஃப் செய்கிறேன் என சொல்லக்கூடிய அளவு அவரது மனநிலையை கொண்டு செல்லும் அளவிற்கு தவறு நடந்துள்ளது. மீண்டும் விருதுநகர் தொகுதியில் மறுவாக்கு எண்ணிக்கை செய்ய வேண்டும் " என்று பிரேமலதா செய்தியாளர்கள் முன்னிலையிலேயே கோரிக் வைத்திருந்தார்.
மறுவாக்கு பதிவு: அதேபோல, விருதுநகர் தொகுதியில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்தக்கோரி தேர்தல் ஆணையத்தில் தேமுதிக தரப்பில் மனு அளிக்கப்பட்டது. 'மதியம் 3 மணி முதல் 5 மணி வரை வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டதாகவும், வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடந்துள்ளதால் மறு வாக்கு எண்ணிக்கை கோரி தேமுதிக சார்பில் தேர்தல் ஆணையரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
அதேபோல, விருதுநகர் தொகுதியில் மாணிக்கம் தாகூர் வெற்றியை செல்லாது என்று அறிவிக்கக் கோரி, தொகுதியில் போட்டியிட்ட தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன், சென்னை ஹைகோர்ட்டில் தேர்தல் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
தள்ளிவைப்பு: அந்த மனுவில், தேர்தல் வேட்புமனுக்களில் மாணிக்கம் தாகூர் உண்மை தகவல்களை மறைத்ததாகவும், ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும் குற்றம் சாட்டியிருந்தார். இந்த வழக்கை இன்று விசாரித்த நீதிபதி சதீஷ்குமார், காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாக்கூர் மற்றும் தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை அக்டோபர் 14ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
மாணிக்கம் தாகூர்: அன்று விருதுநகரில் பிரேமலதா முன்வைத்த குற்றச்சாட்டுகளை மாணிக்கம் தாகூர் கடுமையாக மறுத்திருந்தார். ''விஜயபிரபாகரன் வாக்கு எண்ணிக்கை நடந்து கொண்டிருந்தபோது அங்குதான் இருந்தார். அப்படி இருக்கும்போது தவறான செய்தியை மக்களிடம் கொண்டு செல்ல நினைக்கும் பிரேமலதாவின் போக்கு மிகவும் கண்டிக்கத்தக்கது. வாக்கு எண்ணிக்கையின் போது எல்லோரும் இருந்தார்கள். அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இருந்தார்.
மக்கள் அளித்த தோல்வியை ஏற்றுக் கொள்ளாமல் மக்களை குழப்புவதும் பொய் பேசுவதும் பிரேமலதாவிற்கு கைவந்த கலை. விஜயகாந்தின் அரசியலையும் முடித்து வைத்தவர் இவர்தான்..
வாக்கு எண்ணிக்கை: இப்படிப்பட்ட தவறான பொய்யை பேசுவது ஏற்றுக்கொள்ள முடியாதது. என்னைப் பொறுத்த மட்டில் தேர்தல் அதிகாரிகள் மிகக் கடுமையாக உழைத்து நேர்மையான வாக்கு எண்ணிக்கையை நள்ளிரவு ஒரு மணிவரை நடத்தி முடித்தார்கள். அப்படிப்பட்டவர்களை சென்னையில் அமர்ந்து கொண்டு இப்படி பேசுவது கண்டிக்கத்தக்கது. தேர்தல் ஆணையம் இதுபோன்ற பொய்யான குற்றச்சாட்டுகளை நிராகரிப்பார்கள்'' என்று கூறியிருந்தது நினைவுகூரத்தக்கது.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications