காலிங் பெல்லை அடித்ததும் கதவை திறந்த திமுக பிரமுகர் வெட்டி படுகொலை.. திருவொற்றியூரில் பயங்கரம்
சென்னை: சென்னை திருவொற்றியூர் அருகே திமுக பிரமுகர் காமராஜை வீடு புகுந்து வெட்டிக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வடசென்னையில் திருவொற்றியூர் அருகே விம்கோ நகரை சேர்ந்தவர் காமராஜ். இவர் திமுகவில் இருந்தார். இவர் அரசு ஒப்பந்ததாரரும் கூட! இன்று காலை காமராஜின் வீட்டின் காலிங் பெல்லை யாரோ அடித்தனர்.

காமராஜ் கதவை திறந்ததும் அங்கிருந்த 6 பேர் கொண்ட மர்ம கும்பல் அவரை சரமாரியாக அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடியது. ரத்த வெள்ளத்தில் சரிந்த காமராஜை மீட்ட அக்கம்பக்கத்தினரும் உறவினர்களும் அவரை தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட காமராஜ், சிறிது நேரத்திலேயே சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்த போலீஸார் சம்பவ இடத்தில் விசாரித்து வருகிறார்கள். மேலும் காமராஜின் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து எண்ணூர் போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள். அரசு ஒப்பந்ததாரர் என்பதால் காமராஜுடன் அந்த கும்பலை சேர்ந்தவர்களுக்கு ஏதேனும் முன்விரோதம் இருந்ததா என விசாரணை நடத்தப்படுகிறது. மேலும் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை கொண்டு போலீஸார் ஆய்வு செய்து வருகிறார்கள்.
-
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி?












Click it and Unblock the Notifications