Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

“அமலாக்கத்துறைக்கு பெரிய சிக்கல்.. நாட்டிலேயே முதல்முறையாக இப்படி நடக்குது“: திமுக வழக்கறிஞர் தடதட!

Subscribe to Oneindia Tamil

சென்னை: நாட்டிலேயே முதல்முறையாக அமலாக்கத்துறைக்கு, போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கும் அதிகாரம் இல்லை என ஒரு நீதிபதி கூறியிருக்கிறார், இது அமலாக்கத்துறைக்கு ஏற்பட்ட மிகப்பெரிய பின்னடைவு என திமுகவைச் சேர்ந்த வழக்கறிஞர் சரவணன் தெரிவித்துள்ளார்.

அமலாக்கத் துறையால் அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோதக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக கூறி அவரது மனைவி மேகலா சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவை கடந்த மாதம் 14 ஆம் தேதி தாக்கல் செய்தார். இந்த மனுவை நீதிபதிகள் ஜெ. நிஷா பானு மற்றும் டி.பரத சக்கரவர்த்தி அமர்வு விசாரித்து வந்தது.

DMK Advocate says HC verdict is big set back for Enforcement Directorate

இந்த விசாரணையின்போது மேகலா தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, நாடாளுமன்றம் இயற்றிய சட்டவிரோத பணபரிமாற்ற தடைச் சட்டத்தில் காவல் நிலைய அதிகாரி அதிகாரம் அமலாக்கத் துறையினருக்கு வழங்காத நிலையில், அந்த அதிகாரத்தை நீதிமன்றம் வழங்க முடியாது என்பதால் காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கப் பிரிவுக்கு அதிகாரமில்லை என வாதாடினார்.

இந்நிலையில் இன்று இரு நீதிபதிகள் அமர்வு மாறுபட்ட தீர்ப்பை அளித்துள்ளது. நீதிமன்ற காவலில் வைத்தது சட்டவிரோதம் என்பதால் அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்க முடியாது என நீதிபதி நிஷா பானு தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார். மேகலாவின் ஆட்கொணர்வு மனு தள்ளுபடி செய்யப்படுவதாக நீதிபதி பரத சக்கரவர்த்தி தெரிவித்தார். இதையடுத்து, மூன்றாவது நீதிபதி இந்த வழக்கை தனியாக விசாரிக்க உள்ளார்.

இந்நிலையில், இன்றைய தீர்ப்பு குறித்துப் பேசியுள்ள திமுக வழக்கறிஞர் சரவணன் அண்ணாதுரை, "திமுகவின் சட்டப் போராட்டத்திற்கு கிடைத்த முதல் வெற்றி இது. உயர் நீதிமன்றத்தின் ஒரு நீதிபதி, திமுக சார்பாக எடுத்து வைக்கப்பட்ட அத்தனை வாதங்களையும் சரி என்று ஏற்றுக்கொண்டு செந்தில் பாலாஜியை விடுதலை செய்து உத்தரவிட்டிருக்கிறார். மற்றொரு நீதிபதி சில விஷயங்களில் மாறுபட்ட கருத்துகளை தெரிவித்துள்ளார்.

இது அமலாக்கத்துறைக்கு ஏற்பட்ட மிகப்பெரிய பின்னடைவு. நாட்டிலேயே முதல்முறையாக அமலாக்கத்துறைக்கு, போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கும் அதிகாரம் இல்லை என முதன்முதலாக ஒரு நீதிபதி கூறியிருக்கிறார். முதல்முறையாக இந்த வாதம் இப்போதுதான் வைக்கப்பட்டது. இதற்கு வலுவான சட்டக் காரணங்களை எடுத்து வைத்தோம். அதனை ஒரு நீதிபதி ஏற்றுக்கொண்டிருக்கிறார்.

அமலாக்கத்துறை அதிகாரிகள் போலீசார் அல்ல என்றால், விசாரணைக்கு காவலில் எடுக்கும் அதிகாரமும் இல்லை என்று வாதிட்டோம். அதனை நீதிபதி ஏற்றுக்கொண்டுள்ளார். இனிமேல் இருக்கக்கூடிய அமலாக்கத்துறை வழக்குகளில் இந்த தீர்ப்பின் அடிப்படையில் அமலாக்கத்துறையினர் காவலில் எடுத்து விசாரிக்க முடியுமா என்பது பெரும் கேள்விக்குறியாகும்.

DMK Advocate says HC verdict is big set back for Enforcement Directorate

அமலாக்கத்துறைக்கு வானளாவிய அதிகாரங்கள் கிடையாது, அவர்கள் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின்படி தான் நடந்துகொள்ள வேண்டும், என்று நீதிபதி சொல்லி இருப்பது மிகப்பெரிய மாற்றத்திற்கு வழிகோலும். தங்களுக்கு வானளாவிய அதிகாரங்கள் இருப்பதாகச் சொல்லும் அமலாக்கத்துறையின் வாதங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

முதல் முறையாக அமலாக்கத்துறைக்கு அதிகாரம் இல்லை என்ற தீர்ப்பு வந்திருக்கிறது. அமலாக்கத்துறை சட்டம் மட்டுமே பொருந்தும், குற்றவியல் சட்டங்கள் எங்களுக்கு பொருந்தாது என தொடர்ந்து கூறிவந்தது அமலாக்கத்துறை. சட்டப்பிரிவின் 41 ஏ-ன்படி விசாரணைக்கு அழைக்க நோட்டீஸ் வழங்க வேண்டும். வந்தபிறகு அவர் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்றால் தான் கைது செய்ய முடியும்.

ஆனால், அமலாக்கத்துறை இந்த சட்டம் தங்களுக்கு பொருந்தாது என்றனர். இப்போது நீதிபதி அதற்கு எதிராக தீர்ப்பளித்துள்ளார். இந்தியா முழுக்க அமலாக்கத்துறை தொடர்பான வழக்குகளில் இது அவர்களுக்கு பெரும் பின்னடைவாக அமையும்." எனத் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+